Header Ads



ஜனாதிபதி கூறிய 2 பொய்யான கதைகள்

நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌சவிற்கு ஹெலிகொப்டரொன்றை பெற்றுப் பயணம் செல்ல எவரின் அனுமதியும் பெறத் தேவையில்லை.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என பிவிதுரு ஹெலஉருமய கட்சி தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி தங்காலைக்கு செல்ல முன்னாள் ஜனாதிபதிக்கு யார் ஹெலிகொப்டர் வழங்கினார் என்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

2016 ஏப்ரல் மாதத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, தான் மஹிந்த வீடு செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்கியதாக கூறினார்.

தேர்தலில் தான் தோற்றிருந்தால் 6 அடி குழிக்கு தான் சென்றிருக்க நேர்ந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஹெலிகொப்டர் வழங்கிய விவகாரம் தொடர்பில் அவர் தற்போது வேறு கதையொன்றை கூறியுள்ளார். ஜனாதிபதியின் இரு கருத்துக்களும் தவறானவை.

2015 ஜனவரி 9 ஆம் திகதி காலை 9.30 மணிளவில் நாட்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தார். நாட்டு ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன மாலை 6.30 மணிக்குத்தான் பதவி ஏற்றார்.

அரசாங்க ஹெலிகொப்டர் ஒன்றை பெற்றே மஹிந்த வீடு சென்றார். நிறைவேற்று ஜனாதிபதியாக அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் படி தான் அவர் அதனை பெற்றார்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கு அரசாங்க ஹெலிகொப்டர் பெற யாரின் அனுமதியும் பெறத் தேவையில்லை.

ஹெலிகொப்டரில் பயணம் செய்யும் ஜனாதிபதிக்கு இது கூட தெரியாமல் போனது கவலை தருகிறது என தெரிவித்தார்.

பொய் கூறிய மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன இருந்தது என்பது தெரியாதது போல, தான் எந்த நேரத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார் என்பதும் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தினம் ஒன்றில் வைவபம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச அவரது வீட்டுக்கு செல்ல ஹெலிக்கொப்டர் ஒன்றை வழங்கியதாகவும் தாம் தோல்வியடைந்திருந்தால் ஆறடி நிலத்திற்குள் இருந்திருப்பேன் எனக் கூறியிருந்தார்.

அப்படி கூறியிருந்த ஜனாதிபதி நேற்று முன்தினம் மகிந்தவுக்கு யார் ஹெலிக்கொப்டரை கொடுத்தது என்று விமானப்படை தளபதியிடம் வினவியதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கூறிய இவை இரண்டுமே பொய்யான கதைகள்2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி காலை 9.30 வரை மகிந்த ராஜபக்சவே இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார்.

மைத்திரிபால சிறிசேன அன்றைய தினம் மாலை 6.30 மணிகே ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்தார்.இதனால், மைத்திரிபால சிறிசேன பதவியேற்கும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது அதிகாரங்களுக்கு அமைய அவரே ஹெலிக்கொப்டரை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஹெலிக்கொப்டரில் பயணங்களை மேற்கொள்ளும் போது எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை.

தற்போது ஹெலிக்கொப்டரில் பயணங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறியாது இருப்பது கவலைக்குரியது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Absent minded O/L qualified GS talking nonsense.Most often he talks but does not know what he is talking about.Most dangerous racist want to revenge UNP and Muslims as it is this two forces defeated his party and his boss MR.He got fluke chance because of powerful UNP and Ranil but want revenge shows his ingratitude true color.

    ReplyDelete

Powered by Blogger.