Header Ads



1930 களில் வீரகேசரிக்கு எதிராக, கொதித்தெழுந்த முஸ்லிம்கள் - வர்த்தக முத்திரையும் பறிக்கப்பட்டது

-மூத்த ஊடகவியலாளர் Naushad Mohideen-

வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத் தான் வீரகேசரி செய்தி வௌியிட்டுள்ளது. 

இருந்தாலும் இவ்வாறான தலைப்புக்களை இன்றைய காலகட்டத்தில் ஒரு கீழ்த்தரமான இணைத்தயத்தில் இருந்து தான் எதிர்ப்பாககலாமே தவிர தினக்குரல் அல்லது வீரகேசரி போன்ற மக்களால் வாசிக்கப்படுவதாகக் கூறப்படும் தேசிய மட்ட தமிழ் பத்திரிகைகளில்  இவ்வாறான தலைப்புக்கள் வௌியிடப்படுவது மிகவும் கவலைக்குரியது. 

இவை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் முதிர்ச்சியற்ற நிலை, அனுபவமின்மை, அறிவீனம் என்பனவற்றின் வௌிப்பாடாகவே அமைகின்றது.

வீரகேசரி பத்திரிகை இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை அல்லது படங்களை வௌியிட்டுள்ளமை இது முதற்தடவையல்ல. இங்கே அந்தப் பத்திரிகையின் ஆரம்பகால சம்பவம் ஒன்றை நினைவூட்டுவது சாலச் சிறந்தது. அது தொடங்கப்பட்ட 1930களின் ஆரம்பத்தில் ஒரு படத்தை வௌியிட்டு அது இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது புகைப்படம் என விளக்கம் அளித்திருந்தது. இதனால் அன்றைய கால முஸ்லிம்கள் கொதித்து எழுந்து வீரகேசரி நிறுவனத்துக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனராம். இதனால் அன்றைய இலங்கை நிர்வாகம்  இந்த விடயத்தில் தலையிட்டு வீரகேசரியின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை (Trade Mark)  பாவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

 அன்றோடு வீரகேசரி அதன் வர்த்தக முத்திரையை இழந்து விட்டதாக தகவல்கள் உள்ளன. அன்றைய கால கட்டத்தில் வர்த்தக முத்திரையை இழப்பதென்பது பெரும் அவமானத்துக்கு உரிய ஒன்றாகக் கருதப்பட்டது. இது மூடி மறைக்கப்பட்ட ஒரு வரலாறு. நான் படிக்கின்ற காலத்தில் நண்பன் சப்ரி ஏ காதர் அவரின் பெரியப்பா மகன் அஸ்கர் மொஹிடீன் ஆகியோரின் வீடுகளில் பெரும்பாலான நேரத்தைக் கழித்தவன். 

சப்ரி ஏ காதர் இப்போது இலங்கை சுங்கத் திணைக்கள அத்தியட்சகராக  பணியாற்றுகின்றார். அவருடைய தந்தை காதர் மாஸ்டர் மற்றும் அவரின் மூத்த சகோதரரர்களான அஸ்கரின் தந்தை, அஸ்கரின் பெரியப்பா ஆகியோர் இந்தச் சம்பவம் பற்றி பல தடவைகள் எம்மிடம் கூறி உள்ளனர்.  இதில் சப்ரியின் தந்தை காதர் மாஸ்டர் இவர் அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று வந்ததால் லண்டன் காதர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 

இன்னமும் உயிருடன் இருக்கின்றார். நண்பன் சப்ரி ஊடாக அவரின் தந்தை உடன் கதைத்து மீண்டும் ஒரு தடவை ஊர்ஜிதம் செய்த பிறகு தான் இந்தத் தகவலைப் பதிகிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் நீடூழி வாழ பிரார்த்திக்கின்றேன். வீரகேசரியின் ஆரம்பமே முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு ஆரம்பம் என்பதை இன்று கொதித்துக் கொண்டிருப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.  கீழே தரப்பட்டிருப்பது 1930ல் வௌியான வீரகேசரியின் முதல் பிரதியின் முதல் பக்கம்.

 இங்கு வீரகேசரி என்ற சொல்லை தாங்கி இருப்பது இரண்டு சிங்கங்கள். கேசரி என்ற சொல்லுக்கு சிங்கம் என்றும் அர்த்தம். இதுதான் அவர்களின் வர்த்தக் முத்திரை. முஸ்லிம்களின் தீவிர எதிர்ப்பால் ஆரம்ப காலத்திலேயே இந்த வத்தக இலச்சினையை அந்தப் பத்திரிகை இழந்தது.




6 comments:

  1. “கட்டாயம் இதற்கு எதிராக போராடதான் வேண்டும்.” ஆனால், செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு எதிராக அல்ல. இவ்வாறு அறிக்கை விட்ட BBS க்கு எதிராக.

    BBS இந்த செய்தியை இது வரை மறுக்கவில்லை. எனவே News உண்மை தான். இந்த News க்கு அரசு தடை உத்தரவும் போடவில்லை. உண்மையான செய்திகளை அறியவே மக்கள் பத்திரிக்கை வாங்குகிறார்கள்.

    நீங்கள் தேவையில்லாமல் BBS யை கண்டு பயந்துசாவதற்கு வீரகேசரி பொறுப்பல்ல. நீங்கள் தான் பொறுப்பு.

    ReplyDelete
  2. இது துவேஷத்தின் வௌிப்பாடு. முஸ்லிம்கள் அனைவர்களும் (பத்திரிகையை வாசிப்பவர்கள், ஆக்கங்களை எழுதுபவர்கள், விளம்பரங்களை வழங்குகி்னறவர்கள், விற்பனை முகவர்கள்) வீரகேசரியைப் புறக்கணிப்பதே சரியான பதிலடி.

    ReplyDelete
  3. We Muslims should think about TV channels as well as Print media for our community, and all these Hindu media is running on the ground of racism, chavoisam and biased. Their the promoter of terrorism in the country.

    ReplyDelete
  4. Muslims should not buy racist Veerakesari paper.

    More than 50,000 veerakesari papers are bought everyday by Muslims only.

    BOYCOTT TAMIL NEWSPAPER FROM TODAY

    ReplyDelete
  5. அனுஸாதும் அஜனும் உரைப்பது நிஜமே இங்கு
    அனுகூலமே நமக்கு 'ரமழான் பண்டிகைப் பரிசு'
    அப்பவே நாம்  கண்டிருந்தால் 'ஜம்பரோடே ஈத் கார்டு'
    அல்லாஹ்வே விரும்பாததே இழி கோழைத்தனம்
    அவன் அளித்திட்ட இன்பத்தை அனுபவிப்போம்
    அறிந்து மகிழுங்கள் இதை சகோதரர்காள்!

    ReplyDelete
  6. முஸ்லிம்கள் சார்பாக செய்திகளை தரும் "விடிவெள்ளி" வெளியிடுவதும் Express Newspapers நிறுவனம்தானே !.அப்ப கோளாறு ஆசிரிய பீடத்திலையோ ?

    ReplyDelete

Powered by Blogger.