Header Ads



16 பேரும் என்ன, செய்யப் போகிறார்கள்..?

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உட்பட அக்கட்சியின் ஏந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் இன்று கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது இந்த தீர்மானம் 16 பேர் கொண்ட குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

2 comments:

  1. இவர்கள் தான் ஒரு சூடு சொரணை அற்ற கூட்டம். கேவலமான முனாபிக்குகள். மைத்திரியின் இயலாமைதான் இவர்களின் இந்த கேவலமான ஆட்டத்துக்கு காரணம். இந்தநாட்டின் அரசியல் வாதிகள் தான் இந்த நாட்டின் சாபக் கேடாக உள்ளார்கள். இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மைத்திரி மிகவும் அப்பட்டமாக மீறியுள்ளார். பாவம் மக்கள்.

    ReplyDelete
  2. நாட்டின் பிரபல அரசியல் அனாதைகள்...

    ReplyDelete

Powered by Blogger.