Header Ads



பிறை பார்க்க 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும் - 5 பேர் நிபுணர்கள்

-AA.Mohamed Anzir-

இலங்கை முஸ்லிம்களுக்கு பிறையை கண்டு அறிவிக்கவும், அதுபற்றிய போதிய வழிகாட்டல்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 15 பேர் கொண்ட பிறைக் குழுவொன்றை அமைப்பதற்கு இன்று செவ்வாய்கிழமை 19 ஆம் திகதி முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழுவில் கொழும்பு பெரியபள்ளிவாசல் சார்பில் 5 பேரும், ஐம்மியத்துல் உலமா சபை சார்பில் 5 பேரும், முஸ்லிம் சமய விவகார திணைக்களம் நியமிக்கும் 5 துறைசார்ந்த நிபுணர்களும் இடம் பெறுவார்கள்.

தான் முஸ்லிம் யமய விவகார அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் நாட்டு முஸ்லிம்கள் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பிறை விவகாரத்தில் எட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அமைச்சர் ஹலீம் jaffna muslim இணையத்திடம் உறுதிபடத் தெரிவித்தார்.

11 comments:

  1. எந்த ஒரு துறையிலும் அறிவோ ஆற்றலோ இல்லாத ஒருவர் இப்படிக்கூறும் போது அங்கு கூடியிருந்த அனைவரும் மௌனம் சாதிப்பதுதான். சத்தியத்தை எடுத்துக்கூறும் ஆற்றலோ அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயம் உடைய ஒருவரும் அங்கு இருக்கின்றார்களா?

    ReplyDelete
  2. Same people again.
    We should remember sura 4:59

    ReplyDelete
  3. மூக்கிருக்கும் வரை சலி என்பது போல இந்த பெரிய பள்ளி கூட்டம் இருக்கும் வரை குழப்பம் இருக்கும். அவர்களின் சண்டித்தனம் காலம் சென்ற முன்னைய நாள் acju செயளாலர் மெளலவி ரியாழ் அவர்களை பள்ளியினுள் காடையர்களினால் தாக்கப்படும் வரை சென்றது என்பது வரலாறு. கொழும்பு பெரிய பள்ளி கொழும்புக்கு மாத்திரம் தான் பெரிய பள்ளி

    ReplyDelete
  4. Wait and see insha allah till the next eid.
    If things don't get change we need to change our selves.

    ReplyDelete
  5. Mr.professional.நீர் என்ன சொல்லுகின்றீர்.தெளிவா சொல்லும்

    ReplyDelete
  6. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
    (அல்குர்ஆன் : 4:59)

    ReplyDelete
  7. Again Grand masjid people and ACJU people....no difference from earlier...same people.....please add some Specialist in this area and Best knowledgable qualified Ulamas

    ReplyDelete
  8. Should be decided by only ACJU

    ReplyDelete
  9. திரும்பவும் அதே பல்லவி..எதற்குடா கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜால்ரா அடிக்கவா?

    ReplyDelete
  10. antha 15 perla palaya aakal varaama vitta serithan

    ReplyDelete
  11. Masha allah .may allah guide them.ordinary people must obey to our leadership

    ReplyDelete

Powered by Blogger.