Header Ads



14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்


-Fazal Deen-

ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று,  பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு.

நீங்கள் உண்மையை அறிய விரும்பினால்...

நீங்கள் உண்மையிலேயே  அல்லாஹ்வுக்காகத்தான் இது பற்றி பேசுவதாக இருந்தால், இங்கு குறிப்பிடப்படும் தகவல்களை நாங்கள சொல்லும் அரச நிறுவனங்களுக்கு சென்று, உறுதிப்படுத்திவிட்டு இந்த தகவல்கைள மறுக்கவும்.

இல்லாத பட்சத்தில் நீங்கள் பொய்யர்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடுவீர்கள்.

இந்த தகவல் இலங்கை வானியல் அவதான நிலையத்திற்கு நேரடியாக சென்று பெறப்பட்டது.

14.06.2018
ரமழான் 28
(வியாழன்)

சூரியன் மறைந்த நேரம் 6.26 PM

சந்திரன் உதயமாகிய நேரம் காலை 6.14 AM

சந்திரன் அஸ்த்தமன நேரம் 7.06 PM

சுமார் 40 நிமிடம் இலங்கை வான்பரப்பில் ஷவ்வால் தலைபிறை தென்பட்டிருக்கிறது என்பது உறுதி.

இது வானியல் அவதான நிலையத்தின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை.

பிறைக்கொமிட்டியின் தலைவர் 25ஆம் நோன்பிலேயே உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ரமழான் 28 

14.05.208 வியாழன் மஹ்ரிப் இலங்கையில் பிறை காண்பது அசாத்தியம் அதற்கான வாய்ப்பு மிக அரிது என்று வானியல் சம்பந்தமான விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

அந்த விஞ்ஞானிகளை பெயரை அல்லது தகவலை தந்தால் அந்த விஞ்ஞானிகளிடம் நேரடியாக சென்று தெளிவு பெற நாம் தயாராகவுள்ளோம்.

நீங்கள் உண்மையாளாராக இருந்தால், குறைந்தது அந்த விஞ்ஞானிகளின் பெயரையாவது வெளியிடுங்கள்.

எங்களுக்கு கிடைத்த திடுக்கிடும் மேலதிக தகவல்

14.05.2018 ரமழான் 28 வியாழன் மாலை இலங்கை வான்பரப்பில் தலைப்பிறை காண்பதற்கான அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை வானிலை அவதான நிலையத்திலிருந்து பிறை சம்பந்தமானவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கிறது. 

ஷவ்வால் தலைபிறை தொடர்பான இந்த தகவல்கள் உண்மையாகவே பொய்யென நீங்கள் நிரூபிக்க விரும்பினால்,  கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு
நேரடியாக சென்று அல்லது கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு பொய்படுத்துங்கள்.

இதற்கு பிறகும் நீங்கள் பிறை பார்த்தவர்களை,  பொய்யர்கள் சதிகாரர்கள் என்று சொல்வதாக இருந்தால் கீழே உள்ள முகவரிக்கு சென்று அல்லது கீழே உள்ள இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திவிட்டு பொய்படுத்துங்கள் இல்லாவிட்டால்,  நீங்கள் பிறை கண்டவர்களை பொய்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு மாறு செய்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.

6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ 
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

383, Bauddhaloka Mawatha, Colombo 07 Sri Lanka

☎+94 11 269 4846

☎11 269 4847

☎11 268164

☎+94 11 269 8311

13 comments:

  1. What has happened has happened. There is no point in debating the past issues. Lessons have been learnt, and let us set up something proper for the future.

    ReplyDelete
  2. ஒரே நாளில் இரண்டு குத்துபாக்கள் வந்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் சரி இல்லையாம் என்பது பெரிய பள்ளிவாசல் கிழடுகளின் ஐதீகம். (பஞ்சம் வருமாம்)

    ReplyDelete
  3. பிடிவாதக்காரர்கலே .... பித்அத்வாதிகலே உங்கள் கண்கள் இனியாவது திறக்
    குமா?

    ReplyDelete
  4. So not only educated Alim and other people who sighted moon was attested and proved by scientific evidence shows beyond doubt This ACJU and Grand masjid admin are big liars and not be trusted.so we cannot again and again do haram of fasting on Eid day.For this irreligious people it is nothing but business.So this Munafics must be expelled at any cost.

    So it is now crystal clear that who is liars and how dangerous are they.How this So called mufthi forwarded some hadees and incident to prove his big lie and misguide Muslim community which became laughable at other community.not only this but also brought destruction to Muslim world and srialnkan Muslims by becoming political stooge.

    ReplyDelete
  5. The Messenger of Allaah (peace be upon him) said: "If the presidency is handed over to a non-qualified person, then wait for the Day of the Hereafter." Narrated by al-Bukhaari

    ReplyDelete
  6. I’ve written these details in my comment to Jaffnamuslim on 14th morning, but unfortunately they published it on 15th. However Grand Mosque and ACJU have proved themselves their inability and unprofessionalisam in deciding the crescent not only this year but previous years also. Muslim R and C A department together with metrology department has to decide the crescent in future.

    No body need to have long bear without musthag and wear thalapa to decide the crescent . Any body with clear eye vision can see the crescent.

    ReplyDelete
  7. சூரியன் மறைந்த நேரம் 6.26 PM ஓகே...

    மத்த இரண்டும் காமெடியாக இருக்கே........

    சந்திரன் உதயமாகிய நேரம் காலை 6.14 AM
    சந்திரன் அஸ்த்தமன நேரம் 7.06 PM

    ReplyDelete
  8. தவறுகள் நடந்திருக்கலாம், நிட்சயமாக தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால் நாங்கள் இங்கு அவதானித்த விடயம், ஜம்மியத்துல் உலமா சபையையும், அதன் தலைமைத்துவத்தையும், மிகவும் இலகுவாக திட்டித்தீர்ப்பதும், தூக்கி எரிந்து பேசுவதும் மிகவும் கவலை அளிக்கிறது. அதிலும் சமூகத்தில் கொஞ்சம் படித்தவர்கள் என்ற நிலையில் இருப்பவர்கள் தலைமைத்துவ கட்டுப்பாடு என்ற மிகவும் முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பில்லாமல் பேசுவது மிகவும் கவலை அளிக்கிறது. இது சமூகத்துக்கு மிகவும் ஆரோக்கியமற்ற விடயமாகும். எம்மை பொறுத்த வரைக்கும் தலைமைத்துவத்தின் தகுதியிலும், ஆற்றலிலும், திறமையிலும், தக்குவாவிலும் எங்களுக்கு மிகவும் மரியாதையும், மதிப்பும், நம்பிக்கை உள்ளது. இயக்க வேறுபாடுகள் காரணமாக இந்த விடயத்தை ஒரு சிலர் தூக்கி பிடித்துக்கொண்டு அலைவது போல் தெரிகிறது. இவைகள் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்றால் அதை ஒழுக்கமாகவும், நாகரீகமாகவும் செய்து கொள்ளுங்கள். ஆனால் இருப்பதையும் இல்லாமல் செய்யும் கைங்கரியத்தில் இறங்கிவிடாதீர்கள். எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக..! ஆமீன்.

    ReplyDelete
  9. எத்தனையோ விஷயங்களை வைத்துக்கொண்டு ஹதிஸ்களை ஆராயும் நாங்கள் இந்த பிறை விஷயத்தில் மிக சொற்ப அறிவை கொண்டு விளக்கப்படுத்த முனைவது ஏன் என எனக்கு புரியவில்லை.
    சந்திரனுக்கு எவ்வாறு ஒளி உருவாகின்றது என்பது தெரியாத ஒருவர் இரு bulbs களை வைத்துக்கொண்டு விளங்கப்படுத்தும் அறிய காட்சியை என்னால் காண முடிந்தது.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும். இந்தப் பதிவின் தலைப்புக்க்ம் உள்ளடக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இங்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக வானிலை அவதான நிலையம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது போல், போலியாக கட்டுரையாளர் சித்தரிக்கிறார்.

    குறித்த அந்நாளில் (14.06.2018) சூரிய,சந்திர அஸ்தமனங்களுக்கிடையிலான நேர வித்தியாசமே 40 நிமிடங்களாகும். அதாவது, சூரிய அஸ்தமனத்தின் பின்னர் சந்திரன் வானில் தரித்து நிற்கும் நேரமாகும். அது ஒருக்காலும் பிறை வெற்றுக்க்கண்ணுக்கு தென்பட்டதாக அமையாது.

    அமாவாசையின் பின்னர் இடம்பெறும் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் சந்திரனானது தலைப் பிறையாக தென்படுவதற்கு வேறு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்திகிறது. இவ்வாறு அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை வைத்து பிறை தென்படுவதற்கான வரைமுறைகள் (criteria) சில உலகளாவிய வானியல் ஆய்வு மையங்களினால் அங்கீகரிக்கப்பட்டு பிறை தென்படுவதற்கான சாத்தியக்கூறுகள் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றன.

    அதில் உலகப் பிரபல்யமான வரைமுறையாகக் கருதப்படும் "Syed Khalid Shaukat" எதிர்வுகூறலின்படி குறித்த நாளில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எப்பகுதியிலும் வெற்றுக்கண்ணுக்கு தலைப்பிறை தென்படாது; தொலைநோக்கிகளால் மட்டுமே அதை அவதானிக்க முடியும். இவ் எதிர்வுகூறல்களானது ஒவ்வொரு வருடமும் மாதாமாதம் அவதானிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. அதில் இவ்வருடம் ஷவ்வால் மாத தலைப்பிறை (14.06.2018) முதன் முதலாக வெற்றுக் கண்ணால் பார்க்கப்பட்ட நாடு Lusaka, Zambia ஆகும். இது இலங்கைக்கு மேற்காக 3 1/2 மணிநேர (GMT +2) வித்தியாசம் உள்ள ஒரு நாடாகும்.


    https://moonsighting.com/1439shw.html

    https://moonsighting.com/visibilitycurves/1439shw_6-14-2018.gif

    http://www.staff.science.uu.nl/~gent0113/islam/islam_lunvis.htm

    http://www.staff.science.uu.nl/~gent0113/islam/1439/1439g_10b.pdf

    எனவே இடுகைகளை இடும்போது குறித்த துறைசார் அறிவின்றி தான்றோன்றித்தனமாக செயற்படுதல் கண்டிக்கத்தக்கதாகும்.



    ReplyDelete
  11. தங்களைத் தாங்களே உலமாக்கள் என பிரஸ்தாபித்துக் கொள்பவர்களிடம் அறவே இருக்கக்கூடாத பண்புகள். ஆணவம், அகங்காரம்,பிடிவாதம், மற்றவர்களைவிட தாம் பெரியவர்கள் என்ற மனோபாவம்.குறிப்பாக தற்போது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் சமயம் சார்ந்த இயக்கங்கள் வௌித்தோற்றத்தில் அவை சமயம் சார்ந்து செயற்பட்டாலும் உள்ளே முழுக்க முழுக்க அரசியலும் நிபாக் தன்மையும் அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்பட வேண்டிய வகையில் பயப்படாத குணமும் பரவலாகக் காணப்படுவது மிகவும் துரதிருஷ்டமான நிலைமையாகும். அதன் வௌிப்பாடுதான் பிறைபார்க்கும் விடயத்திலும் பிரதிபலித்திருக்கின்றது.

    ReplyDelete
  12. Terminate the old comity/Liars and appoint a new comity for this task.

    ReplyDelete
  13. Terminate the old comity/Liars and appoint a new comity for this task.

    ReplyDelete

Powered by Blogger.