June 30, 2018

கடந்த அரசாங்கத்தின் தவறுகளை, நீங்களும் செய்யாதீர்கள் - ஜனாதிபதி. பிரதமரிடம் றிசாத் வேண்டுகோள்


கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மேற்கொள்ளாதிருக்குமாறு கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் பதவிக்காகவும் இணைந்து தேர்தலில் களமிறங்கியபோது, நானும் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையின் பிரகாரம் ஆதரவு வழங்கினேன். எனினும், சில விடயங்களைப் பார்க்கின்றபோது எமக்கு கவலையாக இருக்கின்றது. இருவரும் தமது கட்சி தொடர்பில் சிந்திக்கின்றனர். எனினும், நாடு தொடர்பில் சிந்திப்பதில்லை. கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை நீங்கள் இருவரும் செய்ய வேண்டாம். அப்பாவி மக்களின் பொருளாதாரத்தினை அழிக்க வேண்டாம் என இந்த இரண்டு தலைவர்களுக்கும் நான் கூற விரும்புகின்றேன்.

இவகைக் கண்டீர்களா..?

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த புகைப்படத்தில் உள்ளவர் வெலிகம கபுவத்தை பிரதேசத்தை சேர்த்தவர். 

நேற்று 29/06/2018 ஆம் திகதி வீட்டாருடன் ரயிலில் கொழும்பு நோக்கி பயணம் செல்லும்போது காணாமல் போய் உள்ளார்.

இவர் சுய நினைவு அற்றவர் என்பதாக குறித்த நபரின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்

இவரை யாராவது கண்டால் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்

அல்லாஹ்வுக்காக இந்த தகவலை அனைவரும் பகிர்ந்து இவரை  குடும்பத்தாரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுங்கள்

தொலைப்பேசி இலக்கம்.

0778080271

"மைதானத்திற்குள் நுழையாதது குறித்து, நான் குழப்பமடைந்தேன்"

மேற்கிந்திய அணிகளிற்கு எதிரான டெஸ்டில் பந்தின் உருவத்தை மாற்ற முயன்றமைக்காக அணித்தலைவர் தினேஸ் சந்திமலிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனியான தடைகளை விதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்டில் ஆடுகளத்திற்குள் நுழைவது இல்லை என்ற இலங்கை அணி மற்றும் முகாமையாளர்களின் முடிவு தவறானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அதேவேளை இலங்கை கிரிக்கெட் தடைகள் எதனையும் விதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணிவீரர்கள் மைதானத்திற்குள் நுழையாதது குறித்து  நான் குழப்பமடைந்தேன் அது பிழையான விடயம் அது இடம்பெற்றிருக்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதேவேளை அணியினர் அணித்தலைவரிற்கு ஆதரவளிக்க முயல்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணியின் அந்த நடவடிக்கை குறித்து நாங்கள் வேதனையடைகின்றோம்  நாங்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கத்தை பேணவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்திமல் தவறிழைக்கவில்லை என நாங்கள் கருதுகின்றோம். ஆனால் ஐசிசி தடைகள் அபராதங்களை விதித்துள்ளது நாங்கள் அதற்கு கட்டுப்படுகின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பாலித தேவப்பெருமவை, விரட்டிய காட்டு யானை -

வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை காட்டு யானை ஒன்று தாக்குவதற்காக விரட்டிய சம்பவம் நேற்று -29- நடந்துள்ளது.

திம்புலாகலை - நவமில்லான - இத்த பிச்ச குளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சையளிக்க சென்ற பிரதியமைச்சர் உட்பட குழுவினரை அந்த யானை சுமார் 100 மீற்றர் வரை தூரத்தியுள்ளது.

இதனையடுத்து பிரதியமைச்சர் தனது வெள்ளை உடையை கழற்றி விட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அணியும் சீருடையை அணிந்துக்கொண்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்றுள்ளார்.

வெஹெரகலை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களுக்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த யானைக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

அவசர நிதி, உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும்...

அட்டாளைச்சேனை 04ம் பிரிவைச் சேர்ந்த முஸம்மில் மௌலவி (மின்ஹா புக்சொப்) என்பவரது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏற்கனவே பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்த நிலையில் சில ஊசிகள் போடுவதற்காக பதினைந்து லட்சம் ரூபாய்க்கு மேல் அவசரமாக தேவைப்படுகின்றன
எனவே இந்நிதியினை தனிப்பட்ட ஒரு நபரால் திரட்ட முடியாத நிலையில் எமது மஸ்ஜிதுத் தஃவா பள்ளிவாசல் ஊடாகவும் நிதிகளை திரட்டி வழங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது

எனவே முடியுமானவர்கள் தங்களால் முடியுமான நிதி உதவிகளை வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு...


*Father:-*
J muzammil (moulavi)  247B, GTC   North Road , Addalaichenai. 04   mobile; 0778919186 .
பேஸ்புக் நட்பினால், கோடீஸ்வர மகளுக்கு நேர்ந்த பரிதாபம் - நீர்கொழும்பில் சம்பவம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும் விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

கடத்திச் சென்றமை, கப்பம் கோரியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் நீர்கொழும்பை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத வர்த்தகரின் மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முகநூல் ஊடாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் கட்டுமானப் பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா குறி

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம்.

சிறிலங்காவில் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து குறைக்கப்பட்டு விட்டது.

அத்துடன், எந்தவொரு நாட்டினதும்,வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, ஒரு சிறிலங்கா பங்காளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்களுடன், இலங்கைக்கு கிடைக்கவுள்ள பேரதிஷ்டம்

இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது. இந்தக் கடல் பிரதேசம் இலங்கை போன்று 23 மடங்கு பெரியதாகும்.

அதற்கமைய இந்த பாரிய அளவு கடல் எல்லையில் உள்ள பெற்றோலியம் எரிவாயு மற்றும் மதிப்புமிக்க எரிவாயு வகைகளை பயன்படுத்தல், அகழ்வு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கடல் மட்டத்தின் உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பாரிய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு கிடைக்கும்.

இந்த மாநாட்டிற்கமைய இலங்கைக்கு புதிதாக கிடைக்கவுள்ள இந்த கடல் உரிமை தொடர்பில் தற்போதும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கார கோத்தபாய என்றுமே, நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது - மேர்வின் சில்வா

ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

டி.ஏ.ராஜபக்ச, டி.என்.ராஜபக்சவினர் எவரிடமும் பணத்தை பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதுள்ள ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணினாலும் அல்லது கூறினாலும் அது உண்மையல்ல.

ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும். பணத்தை கையாளும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் இருந்தது. பசில் ராஜபக்ச கொமிஸ் பெற்றுக்கொள்வர் என்பது முழு உலகத்திற்கும் தெரியும்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை புகழ்பெற்ற பத்திரிகை, ராஜபக்சவினர் குற்றமற்றவர்கள் என்றால், அமெரிக்காவின் தூதரகம் இலங்கையில் இருக்கின்றது. அதன் ஊடாக அந்த பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சீன அரசாங்கம் கூறவேண்டும். அதனை விடுத்து, நாடாளுமன்றத்தில் இருப்பவர்களும், என்னை போன்றவர்களும் மகிந்த ராஜபக்ச பணத்தை பெற்றார் எனக் கூறினால், அவர்கள் விரோதம் காரணமாக கூறுகின்றனர் என்பார்கள்.

பணத்தை பெறவில்லை என்று கூறினால், மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக கூறுகின்றனர் என்பார்கள். இந்த குற்றச்சாட்டுக்கான சிறந்த பதில் மகிந்த ராஜபக்சவிடமே இருக்கின்றது.

அடுத்த பதில் சீன அரசாங்கத்திடம் இருக்கின்றது. அடுத்தது நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையே செய்ய வேண்டும். இவற்றை செய்யவில்லை என்றால் பணத்தை பெற்றுக்கொண்டனர் என்றே அர்த்தம்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை அவர் மறுக்கவும் முடியாது. உண்மையை கூறவும் தரையில் அமரவும் எவருடைய அனுமதியும் தேவையில்லை. நான் நக்சலைட் என்ற குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவன். அரசியலில் ஈடுபட்டு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை இழந்தவன்.

அவன்கார்ட் பற்றி எனக்கு விபரங்கள் தெரியும், அந்த நிறுவனத்தின் மூலம் பல பில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது. கடற்படை வர வேண்டிய பணம், கோத்தபாய ராஜபக்ச தலைமையில், திருட்டு வழியில் வெளியில் சென்றது.

இவற்றை கூற நான் அச்சப்பட மாட்டேன். இதுவரை அது பற்றி விசாரணைகள் நடக்கவில்லை. அதேவேளை நாட்டில் ராஜபக்ச ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக வர மாட்டார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறி சிலர் அவருக்கு ஆசை தூண்டி விட்டுள்ளனர்.

இதனால், அவர் தற்போது ஜனாதிபதி என்ற நினைப்பில் நடக்கின்றார். ஜனாதிபதியாகவே மூச்சு விடுகின்றார். ஜனாதிபதி என்ற எண்ணத்திலேயே சிரிக்கின்றார்.

சாப்பிடுவதும் ஜனாதிபதியை போல். வீட்டிலும் ஜனாதிபதி என்ற நினைப்பிலேயே வாழ்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். உறங்குவதும் அப்படியாகவே இருக்கும். அப்படி எதுவும் நடக்க போவதில்லை. கோத்தபாய என்றுமே நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது.

நாட்டில் போர் நடக்கும் போது தனது இராணுவத்தையும், இராணுவத்தில் இருந்தவர்களையும் கைவிட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கோழைக்கு நாடு ஒன்றை ஆட்சி செயய் முடியுமா?.

கோ என்றால் செல் என்று அர்த்தம். தா என்ற நீ. கோத்தாபய அல்ல கோத்தா(பய)ம் என்றுதான் அர்த்தம். அச்சமுள்ள ஒருவர் சென்று விடுவாரே அன்றி வரவும் மாட்டார். உள்ளே நுழையவும் மாட்டார். இதனைதான் என்னால் கூறமுடியும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரண்டு சகோதரர்கள் செய்த நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் தவறுகளை செய்தனர். எந்த நீதிமன்றத்திலும் கூற நான் தயாராக இருக்கின்றேன்.

நான் அருகில் இருக்கும் போதே ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய கூறினார். அநுராதபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஆமாம், பிரச்சினையில்லை அவரை சுட்டுக்கொல்லுங்கள் என்று கோத்தபாய கூறினார்.

இன்னும் என்ன கூறவேண்டியுள்ளது. அச்சம் காரணமாக இவற்றை கூற எவரும் முன்வர மாட்டார்கள். நான் உருணையை சேர்ந்த சிங்கள பௌத்தன் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

June 29, 2018

விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் - சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.

இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.

வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.

எனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் ரொபின் ஹுட் படை(வீடியோ)


இலங்கையில் ரொபின் ஹட் படை(வீடியோ)


"வடக்கு - கிழக்கு இணைப்பிற்கு, முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை"

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். 

அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். 

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும். அதனூடாக மீண்டுமொரு இனமோதல் இந் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை.  

ஆனாலும் ஒரு சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை என்பதை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசியல் தீர்வென்பது நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என்றால் அது எல்லா சமூகத்தவர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கின்ற தீர்வாக அமையப் பெற வேண்டும். 

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம் சமூகம் தமிழர் சமூகத்தால் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கி ஆளப்படுகின்ற நிலை உருவாகுமென்பதில் எந்த ஜயமும் இல்லை.

வடக்கு கிழக்கு இணைக்கப்படாமல் பிரிந்திருக்கும் இன்றைய சூழ் நிலையிலும் கூட, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஒடுக்கி ஆளப்படுகிறார்கள். 

தமிழர் பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக காணிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காணிகளை கொள்வனவு செய்தாலும் அக் காணிகளுக்குள் தமது வாழ்விடங்களை அமைத்து வாழ முடியாத பயிர் செய்கைகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதே போல தமிழர் பகுதிகளுக்குள் தமது வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. 

தமிழர் ஆளுகைக்குற்பட்ட சந்தைகளில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த முஸ்லிம் வியாபாரிகள் தமிழர் தரப்பினரால் துரத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேரியுள்ளன.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளுக்குள் இருக்கின்ற தமது சொந்த நிலங்களுக்குள் கூட மீள் குடியேறி வாழ முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  அவ்வாறு மீள் குடியேற முனைந்தால் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிர்வாக ரீதியான அடக்குதல்கள் நடந்தேருகின்றன. 

இவ்வாறான அடக்கு முறைகளை முஸ்லிம் சமூகம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தமிழர் தரப்பிலிருந்து சந்தித்து வருகிறது.

இவ்வாறு ஒரு சமூகத்தை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கியாள முற்படுகின்ற சமூகத்துடன் தனது மேலாதிக்கத்தை இன்னுமொரு சமூகத்தின் மீது நிலை நிறுத்த முற்படுகின்ற சமூகத்துடன் எவ்வாறு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வது என்பதை பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் தலைமைகளும் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான முன்னெடுப்புக்களும் பேச்சுக்களும் இடம்பெறுகின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இவ்வாறான புல்லுருவிகளின் கருத்துக்களுக்கு பின் நிற்காமல் வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு விடையங்களிலும் எமதுரிமைகளை பெற்றிட ஒன்றிணைந்து குரலெலுப்ப வேண்டுமென்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.

முஹம்மத் ஹம்ஸா கலீல்

"ஜனாதிபதியை பணம் கொடுத்து, வாங்குவது இலகுவானது"

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டம் குறித்து சில தரப்பினர் தவறான கருத்துக்களை முன்வைத்து, நாடு பிளவுப்பட போகிறது என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி வருவதாக அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கும் தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வரக் கூடும் இவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியமற்றது.

தற்போதுள்ள முறையின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒரு நாடு பணம் கொடுத்து வாங்குவது இலகுவானது என்பது மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பணம் கொடுத்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை, கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என இலங்கை இளம் தொழில் முனைவோர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி ராஜித கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளி மறைந்திருக்கும் இடத்தை அறிந்தும் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு கூறாமல் மறைத்த குற்றத்திற்காக முதலில் கைது செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று -29- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வரும் பொறுப்பை தாம் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார். உதயங்க வீரதுங்கவை நாங்கள் கொண்டு வருகின்றோம். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை முடிந்தால் நீங்கள் கொண்டு வாருங்கள் என்றும் கூறியுள்ளது. இது திருடனை பார்த்து திருடன் சவால் விடுவதாகும். எமது திருடனை நாங்கள் அழைத்து வருகிறோம். உனது திருடனை அழைத்து வா என்பது போன்ற கதை. இதுதான் திருடன் வீரனாக மாறிய கதை.

எனினும் மகிந்த ராஜபக்சவும் ஒரு சட்டத்தரணி. குற்றவியல் சட்டத்தின் 20 ஆம் பந்தியில் இருந்து 25 வது பந்தி வரையில், குற்றவாளி ஒருவர் அல்லது பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவர், சட்டத்திற்குள் சிக்காமல் இருந்தால், அவரை எப்படி சிக்க வைப்பது என்பது விபரிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நபரான உதயங்க வீரதுங்க இருக்கும் இடம் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அறிந்துள்ளார். இதனடிப்படையில், சட்டப்படி கைதுசெய்யப்பட வேண்டிய முதல் நபர் மகிந்த ராஜபக்ச. திருடனை மறைத்து வைத்தமை மற்றும் திருடன் இருக்கும் இடத்தை அறிந்தும் அதனை சட்டத்தை அமுல்படுத்துவோருக்கு தெரியப்படுதாத குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்சவை கைதுசெய்ய முடியும்.

உதயங்க வீரதுங்க மட்டுமல்ல, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய இருக்கும் இடமும் மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி சட்டரீதியான சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டிய நபரை, சட்டத்திற்கு முன் நிறுத்தாமல் தவிர்த்து வருகிறார். கொலை குற்றம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை மற்றும் மிக் விமான கொடுக்கல் வாங்கலில் நடந்த பாரிய ஊழலில் நேரடியான தொடர்புள்ள உதயங்க வீரதுங்க பற்றிய தகவல்கள் மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும். குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று தேடுதல் நடத்தி இந்த தகவல்களை கைப்பற்ற முடியும். சட்டத்தின் படி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நிலையில் தப்பிச் சென்ற நபரை பாதுகாக்கும் நபர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என ராஜித கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமி துஷ்பிரயோகம் - 14, 15 வயது சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட,  14, 15 வயதுகளையுடைய இரண்டு  சிறுவர்களை  இன்று (29)  வாகரை பாலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி ஆடுகளை மேக்கச் சென்ற,  12 வயது சிறுமியை, அதேப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு  சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல்  துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கபபட்ட சிறுமி பயம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என,  பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் 14,15 வயதுடைகளைடைய, இரண்ட சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-கனகராசா சரவணன்-

138 ரூபாவினால் சமயல் எரிவாயு, விலை குறைகிறது

சமயல் எரிவாயுவின் விலை இன்று -29- நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்பரல் மாதம் 248 ரூபாவால் அதிகரித்த சமயல் எரிவாயுவின் விலையானது இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவிலில் ஒன்றுபட்ட முஸ்லிம்கள், புகைத்தல் பொருட்களை இனி விற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றினர்


ஒலுவில் பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ‘புகைத்தல் இல்லாத ஒலுவில்’  என்ற தொனிப்பொருளில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

ஒலுவில் பிரதேச வர்த்தகர்கள் இன்றிலிருந்து புகைத்தல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டு அதனை அமுல்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

புகைத்தல் மூலமாக ஏற்படுகின்ற கொடிய உடல்ரீதியான பிரச்சினைகள், மரணம், பொருளாதார பிரச்சினை போன்றவை சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது. எனவே இப்படியான கொடிய பிரச்சினைகளில் இருந்து எம் சமூகத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புகைத்தல் அற்ற ஒலுவில் பிரதேசத்தை உருவாக்கவும் இந்த நல்ல விடயத்தை தாம் மேற்கொள்வதாக ஒலுவில் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் AL. அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் TJ. அதிசயராஜ், அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிஹஸீப், சுகாதார வைத்திய அதிகாரி Dr.AL. அலாவுதீன், சமுர்த்தி உத்தியோகாத்தார்கள், ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் எதிர்வரும் ஞாயிறு காலை புகைத்தலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு: சாஜஹான் றினோஸ்

"முஸ்லிம் அரசியல்வாதிகள், வரலாற்றுத் துரோகத்தை செய்யக் கூடாது"

-AA. Mohamed Anzir-

புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்துவது தொடர்பில், முக்கிய விவாதமொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி. வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ், மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டால்  முஸ்லிம் பிரதிநிதித்துவம்,  பாதியாக குறையும் ஆபத்து ஏற்படுவது, தவிர்க்க முடியாத பரிதாபம் ஏற்படும்

6 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த பாராளுமன்ற விவாதத்தின் முடிவில், எத்தகைய முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற விபரம் பகிரங்கமாகும்.

இந்நிலையில் 21 முஸ்லிம் அரசியல்வாதிகளும் குறித்த விவாதத்தில் பங்கேற்று, முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள அநீதி குறித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். 

சிலவேளை பாராளுமன்ற விவாதத்தை அடுத்து, வாக்களிப்பு நடத்தப்பட்டால் அந்த வாக்களிப்பை தோற்கடிக்க,  முஸ்லிம் அரசியல்வாதிகள் முயல வேண்டும்.

தமது கட்சி மற்றும் ஆட்சியாளர்களை திருப்த்திபடுத்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் புதிய மாகாணத் தேர்தல் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால். அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்...!


மாலைநேர வகுப்புக்கு செல்லுகையில், பாடசாலை சீருடையை அணியுங்கள் - பள்ளிவாசல்கள் மூலமாக அறிவிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள், பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிணங்க, 06ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவியர்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் போது பாடசாலை சீருடையை அணியுமாறு அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பெற்றோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும், அனாச்சாரங்களைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊரிலுள்ள பள்ளிவாசல்கள் மூலமாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TM.Imthiyas


முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகும் ஆபத்து

-AAM. Anzir-

புதிய தேர்தல் முறையின்படி மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு, அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினரால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட கூட்டத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹிஸ்புல்லா, புதிய தேர்தன் முறையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்தினால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகுமெனவும் எனவே புதிய தேர்தல் முறை வேண்டாமென வலியுறுத்தியுள்ளார்.

எனினும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மகிந்த தேசப்பிரிய, எந்த முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சர் பைஸர் முஸ்தபா, மௌனம் காத்து நின்றுள்ளார்.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் விருப்பம் புதிய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, சந்திக்க விரும்பாத பெண்

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆய்வு கட்டுரையை வெளியிட்ட ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப், தனது கட்டுரையை எழுதுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து தனக்கு கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்த பல முறை முயற்சித்து போதும், மகிந்த சந்திப்புகளை தவிர்த்துக்கொண்டதாக தெரியவருகிறது.

ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப்பிடம் ஊடகங்கள் வினவிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 10 கேள்விகளை அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் பதிலுக்காக காத்திருந்த போதிலும் மகிந்தவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்க முயற்சித்ததாகவும், அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மாரியா கூறியுள்ளதுடன், தனக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் மாத்திரமே பதிலளிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


விக்னேஸ்வரனுக்கு விழுந்தது பளார் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை முதல்வர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -29- தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முதல்வர் விக்கினேஸ்வரன் வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீர்ப்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளது.

2

பாறுக் ஷிஹான்

வடக்கு மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சராக தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பார் என மேன்முறையீட்டு நீதி மன்றம்
இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய தினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வகித்த அமைச்சு பதவியை பறித்தெடுத்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மீண்டும் பா.டெனிஸ்வரன் பதவி குறித்த பதவியை வகிக்க எந்தவித தடையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனிஸ்வரன் எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது.முதலமைச்சர் தான் தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன் படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர்.எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர் பிரதம செயலாளர் முதலமைச்சர் ஆகியோருக்கு மாண்மிகு நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே.அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர் அனந்தி சசிதரன் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன் என கூறினார்.
இது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான குறித்த பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என கேட்ட போது பதவியேற்ற பின்னர் அதனை இராஜனாமா செய்வதை தவிர வேறு என்ன செய்வது.காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கினை தொடர்ந்தேன்.இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள்.மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ரோஹன விஜேவீரவின் மனைவி, இன்று தாக்கல்செய்த விசித்திர மனு

மக்கள் விடுதலை முன்னணியில் நிறுவுனராகவும், தலைவராகவும் இருந்த, ரோஹன விஜேவீர காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மனைவியான சித்ராங்கனி விஜேவீர, தனது கணவரை நீதிமன்றில் உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவொன்றை இன்று (29), மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

ராவணா பலயும் + சிங்க லேயும் ஜனாதிபதிச் செயலகத்தில் கையளித்த மகஜர்கள்

நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்யப்படும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதை நிறுத்துமாறும், ராவணா பலய மற்றும் சிங்க லே ஜாதிக்க பெரமுன ஆகிய இரு அமைப்புகளும், ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று,  -29- மகஜரொன்றைக் கையளித்தனர்.

தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்டுச்சென்ற பெண், 5 பாதிரியார்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடூரம் (வீடியோ)


தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்டுச்சென்றவர், 5 பாதிரியார்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடூரம் (வீடியோ)


"முஸ்­லிம்கள் உணர்ந்­து­விட்­டார்கள்" ஜனா­தி­ப­தி­யாக சகல சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவு வேண்டும்

எவ­ரா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க வேண்­டு­மாயின் அவர் அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாம் சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் என பொய்ப் பிரா­சாரம் செய்­யப்­பட்­டது. எம்­முடன் இருந்­த­வர்­க­ளாலே பொய்ப் பிர­சாரம் செய்­யப்­பட்­டது. இன்று முஸ்­லிம்கள் அது பொய்ப் பிர­சாரம் என்­பதை உணர்ந்­து­விட்­டார்கள்.

எம்­முடன் இருந்­த­வர்­களே இவ்­வா­றான பொய் பிர­சா­ரங்­களைச் செய்து விட்டு நாம்  தோற்­க­டிக்­கப்­பட்­டதும் எம்மை விட்டும் வெளி­யேறி எமக்கு எதி­ரான கட்­சி­யுடன் சேர்ந்து கொண்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ணலின் போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது; "எமது ஆட்­சிக்­கா­லத்தில் சிறு­பான்மை இனத்­துக்கு நாம் செய்த சேவை­களை எடுத்­துக்­கூற எவரும் முன்­வ­ர­வில்லை. முஸ்­லிம்கள் தமது சொந்த கிரா­மங்­களில் இன்று சுதந்­தி­ர­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த சுதந்­திரம் எமது அர­சாங்­கத்­தி­னாலே அவர்­க­ளுக்குக் கிடைத்­தது. நாங்கள் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்து வடக்­கிலும், கிழக்­கிலும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலை ஏற்­ப­டுத்­தினோம்.

தமிழ் விடு­தலைப் புலிகள் முஸ்­லிம்­களை அவர்­க­ளது சொந்த இடங்­க­ளி­லி­ருந்தும் பலாத்­கா­ர­மாக வெளி­யேற்­றினர். நாம் அவர்­களை கிண்­ணியா போன்ற பகு­தி­களில் மீள்­கு­டி­யேற்­றினோம். இன்று மக்கள் யுத்­த­கா­லத்­துக்கும் இன்­றைய காலத்­துக்கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை உணர்ந்­துள்­ளனர்.

அவர்­க­ளது பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி இடம்­பெ­ற­வில்லை. அவர்­க­ளது அர­சி­யல்­வா­திகள் பிரி­வி­னை­யையே இலக்­காகக் கொண்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி வேட்பாளரை நான் மாத்திரம் தனித்து தீர்மானிக்கமாட்டேன். நான் நாடெங்கும் விஜயம் செய்வேன். மக்கள் அபிப்பிராயங்களைக் கேட்டறிவேன். கூட்டு எதிரணியும் உள்ளது. உரிய நேரத்தில் நாங்கள் ஒன்றுகூடி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வோம்" என்றார்.
-Vidivelli

ஜனாஸா அறிவித்தல் - ஆயிஷா உம்மா

யாழ்ப்பாணம், சோனகதெரு, முஸ்லிம் கல்லூரி வீதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பு - பெரியமுல்ல, லாசரஸ் வீதி,148/19B, இல்லத்தில் வசித்தவருமான ஆயிஷா உம்மா வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் மர்ஹூம் சுல்தான் முஹிதீனின் (மாங்காட்டி) மனைவியும், மர்ஹூம்களான செய்னம்பு, அப்துல் சலாம் மற்றும் சலீம் (முகம்மது சாலி), அபூபக்கர், சனூன், லைலா, ஜனூபா, ஜிபிரியா, ஜரீனா, ஜெலீலா, ஜனூசியா ஆகியோரின் தாயுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29-06-2018) இஷா தொழுகையின் பின் பெரியமுல்ல முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.

தகவல் - அர்சத் (பேரன்)

மரணம் தவிர்க்கப்பட முடியாதது...

அவுஸ்திரேலிய வீரர் பல் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாத ஒன்று என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் பந்து ஒன்று பின் கழுத்தில் பட்டதன் காரணமாக காயமடைந்த பில் ஹக்ஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாமா என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய ஜூரிகளினால் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் எதிரணித்தலைவர் பிரட் ஹடின் மற்றும் பந்து வீச்சாளர் டக் புலின்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் செப்பில் சீல்ட் போட்டித் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் கழகத்திற்கு எதிராக தென் அவுஸ்திரேலியாவின் சார்பில் ஹக்ஸ் துடுப்பெடுத்தாடிய போது சோன் அப்போட் வீசிய பந்து ஒன்று ஹக்ஸின் பின் கழுத்தில் பட்டிருந்தது.

மருத்துவ சிகிச்சைகள் முதலுதவிகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிர் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியமில்லை என நரம்பியல் மருத்துவர்களின் அறிக்கையின் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நுவரெலியாவில் இப்படியும் நடந்தது

நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என கூறிய சடலத்தை ஏற்க மறுத்துள்ளார்.

ஹற்றனைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு நடந்து கொண்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா நகரத்தில் உள்ள பிரபல ஆலயத்தில் பூஜை நடத்துபவராக பணியாற்றிய 53 வயதான நபர் ஒருவரே உயிரிழந்தார். மனைவி சடலத்தை ஏற்காமல் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளமையினால் உறவினர் ஒருவர் சடலத்தை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், அது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர் தங்கியிருந்த அறையில் பை ஒன்றில் அவர் அணிந்திருந்த தங்கம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நாள் மனைவி சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

காவியுடை அணிந்து, பௌத்தத்தை அவமதித்த ஞானசாரர் - சாடுகிறார் தலதா

-எம்.ஆர்.எம்.வஸீம்-

நாட்டின் சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. அதில் தமிழ், சிங்­களம், முஸ்லிம் என பேதம் இல்லை என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

பலாங்­கொடை பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டில் இருக்கும் சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாகும்.   மதங்கள் அடிப்­ப­டையில் அதில் எந்த பேதமும் இல்லை. தமிழ், சிங்­களம், முஸ்லிம் என்றோ அந்த மதங்­க­ளைச்­சேர்ந்த மதத்­த­லை­வர்­க­ளுக்கு என்றோ சட்­டத்தில் எந்த விட்­டுக்­கொ­டுப்பும் இல்லை.   பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக தண்­டனை விதிக்­கப்­பட்ட மதத்­த­லை­வர்கள் பலர் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

 கடந்த வாரங்­களில் நாட்டில் பெளத்த தேரர் ஒருவர் தொடர்­பாக பாரி­ய­ளவில் பேசப்­பட்டு வந்­தது. நானும் கொள்­கையை மதிக்கும் ஒரு பெளத்தர். எவ­ருக்கும் எத­னையும் பேசலாம். என்­றாலும் நாட்டின் சட்டம் அனை­வரும் ஒன்­றாகும். இது­வ­ரைக்கும் பல்வே று குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட 15 பெளத்த தேரர்கள் சிறையில் இருக்­கின்­றார்கள். அவர்கள் அனை­வரும் சிறைச்­சாலை ஆடை­யிலே இருக்­கின்­றனர். மேலும் 11 பேர் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று கத்­தோ­லிக்க மதத்­த­லைவர் ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் இருக்­கின்றார். இரண்­டுபேர் சந்­தேக பட்­டி­யலில் இருக்­கின்­றனர். முஸ்லிம் மதத்­த­லைவர் ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் சிறையில் இருக்­கின்றார். இரண்­டுபேர் சந்­தேக நபர்­க­ளாக இருக்­கின்­றனர். இந்து குரு ஒருவர் சிறைச்­சாலை ஆடையில் இருப்­ப­துடன் மேலும் இரண்­டுபேர் சந்­தேக நபர்­க­ளாக இருக்­கின்­றனர்.

நாங்கள் அனைத்து மதங்­க­ளையும் மதித்து நடக்­கின்றோம். அத­னால்தான் குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டால் அவர்­களின் மத ஆடையை அகற்றி சிறைக்குள் செல்ல நேரி­டு­கின்­றது. நாட்டில் இருக்கும் சட்­டத்தை மதித்து வாழ­வேண்டும் என புத்­த­பெ­ருமான் போதித்­தி­ருக்­கின்றார். அதனால் தேரர்­களின் ஆசிர்­வாதம் எப்­போதும் எங்­க­ளுக்கு அவ­சி­ய­மாகும். அந்த ஆசிர்­வா­தத்தை எங்­க­ளுக்கு வழங்க முடி­வது, அவர்­களின் உள்­ளத்தில் வைராக்­கியம் குரோதம்  , சண்­டித்­தனம் இல்­லாமல் போனால் மாத்­தி­ர­மே­யாகும்.

நான் நீதி அமைச்சர் என்­ப­தற்­காக யாரையும் சிறை­யி­ல­டைக்க உத்­த­ர­வி­ட­மு­டி­யாது. இன்று நீதி­மன்­றங்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்­றன. நீதி­மன்­றத்­துக்குள் தொலை­பேசி அல­றினால் 7 நாட்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை அல்­லது தண்­டப்­பணம் விதிக்க நீதிவான் கட்­டுப்­பட்­டுள்ளார்.

அவ்­வா­றான நிலையில் நீதி­மன்ற அறை ஒன்­றுக்குள் பெரிய சமூகம் ஒன்றை அகெ­ள­ர­வப்­ப­டுத்­தும்­வ­கையில் காவி உடையை அணிந்துகொண்டு புத்த சாசனத்தை அவமதிக்கும்வகையில் நடந்துகொண்ட தேரர் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும் என்றார்.

மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் தரப்பின் வலி­யு­றுத்தல்

மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய கலப்பு தேர்தல் முறையில் தேர்தல் நடத்­து­வதா அல்­லது பழைய முறைப்­படி தேர்­தலை நடத்­து­வதா எனும் இழு­பறி நீடிக்­கின்ற நிலையில், எந்த முறையில் தேர்தல் நடத்­தப்­பட்­டாலும் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வொன்றைத் தர­வேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. கிழக்கு, வட­மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளுக்­கான பத­விக்­காலம் நிறை­வ­டைந்து ஒரு வரு­டத்­திற்கும் மேலாக அச்­ச­பைகள் இயங்­கா­தி­ருக்­கின்­றன. அத்­துடன் எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் மத்­திய, வடமேல் மற்றும் வட மாகாண சபை­க­ளுக்­கான பத­விக்­காலம் நிறை­வ­டை­ய­வி­ருக்­கி­றது. இந்­நி­லையில் பத­விக்­காலம் நிறை­வ­டைந்த சபை­க­ளுக்­கான தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறு தொடர்ந்தும் பல­த­ரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, கலைந்த சபை­க­ளுக்­கான தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான செயற்­பாடு எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு அர­சாங்க தலை­மைகள் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெனக் குறிப்­பிட்டு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரால் கடந்த செவ்­வா­யன்று கடி­த­மொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அத்­தோடு கடந்த வாரம் சபா­நா­யகர் தலை­மையில் இடம்­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தின்­போதும் உட­ன­டி­யாகத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கட்சித் தலை­மை­க­ளினால் வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதன்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய முறையில் மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்கே விரும்­பு­கிறார் என மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் அமைச்­சர்­க­ளான ஹக்கீம், மனோ கணேஷன் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் புதிய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். பழைய முறையில் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்றே வலி­யு­றுத்­தினர்.

இதற்­கி­டையில், கூட்டு எதி­ரணி எந்த முறை­யி­லா­வது தேர்­தலை நடத்­து­மாறு தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்சி பழைய விகி­தா­சார தேர்தல் முறை­யி­லா­வது உட­ன­டி­யாக செய­லி­ழந்து இருக்கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­மாறு கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டின்­போது அறி­வித்­தது.

இவ்­வா­றா­ன­தொரு குழப்­ப­க­ர­மான நிலையில் நேற்­றைய தினம் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய பிர­தி­நி­திகள் உள்­ளிட்­டோ­ரு­ட­னான சந்­திப்­பொன்று நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போது உட­ன­டி­யாகத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பொது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. அத்­துடன் இது­கு­றித்து எதிர்­வரும் சில தினங்­க­ளுக்குள் முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், புதிய மாகாண சபை தேர்­த­லுக்­கான தொகுதி எல்லை நிர்­ணயம் முஸ்­லிம்­க­ளுக்குப் பாதகமானது என புத்திஜீவிகளால் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. எனவே, புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகமானதாக அமையுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவதோடு முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தந்துவிட்டு உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli

சீனாவிடம் மகிந்தபெற்ற தேர்தல் நிதி, டுபாயில் இருக்கிறதாம்..!

கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அதிகாரபூர்வமாக விசாரித்துள்ளார் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.

“நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை சிறிலங்கா எழுப்பியுள்ளது.

ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கிடைத்ததாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதன் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்தப் பணம் வைப்பிலிடப்பட்டது பற்றிய தகவல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

16 பேரை அரவணைக்கிறது, மகிந்த அணி - பசில் சந்திப்பில் பச்சைக்கொடி

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பில் 16 பேர் அணியின் சார்பில், 12 உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.திசாநயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுமேதா ஜெயசேன ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகுமாறு, 16 பேர் அணியிடம், சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தவில்லை.

முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை கைவிட்டு வந்தால் தான், தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நிபந்தனை விதித்திருந்தது.

தற்போதைய நிலையில் 16 பேர் அணியிலுள்ளவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வகித்துக் கொண்டே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இணைந்து செயற்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியைநோக்கி சுயநினைவற்று நகரும் இலங்கை - நல்லாட்சியே காரணம் என அறிவிப்பு

இலங்கையானது, ராஜபக்ஷ ஆட்சியை நோக்கி சுயநினைவற்று நகர்ந்துச் செல்வதாக, கொழும்பைத் தலைமையாக கொண்டு செய்யப்படும் புத்திஜீவிகள் அமைப்பான கொள்கை கற்கைகளுக்கான நிறுவகத்தின் தலைவர் பேராசியர் சசீ சாலி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பரிசோதனை தோல்வியடையும் நிலையில் உள்ளது.

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார சூழ்நிலை மாற்றங்களால், இலங்கை மீண்டும் ராஜபக்ஷ கால ஆட்சியை நோக்கி நகர்வதாகவே படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கம், மீண்டும் ராஜபக்ஷ ஆட்சி மலரும் வகையான செயற்பாடுகளை புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

June 28, 2018

மஹிந்தவுக்கு எதிராக, ரஞ்சன் ராமநாயக்கா முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிதிமோசடிப்பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சீனா 7.6 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிதிமோசடிப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவ்வாறு மஹிந்த ராஜபக்ச எந்தவொரு நிதி உதவியும் பெற்றுக் கொள்ளவில்லை ஆயின் அது தொடர்பாக சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கத் தயாரா என்றும் ரஞ்சன் ராமநாயக்க சவால் விட்டுள்ளார்.

மேலும் குறித்த செய்திப் பத்திரிகை போலியான செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அதுதொடர்பாக மான நஷ்ட வழக்கொன்றைத் தொடர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுக்கத்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் - ரசிகர்கள இன்ப அதிர்ச்சி


உலகக்கோப்பை கால்பந்து  ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘H' பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.

ஒரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1-0 என வெற்றி பெற்றது.

அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.

இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

 இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.

இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.

இதனால் கோல் அடிப்படையிலும் இரு அணிகள் சமநிலை பெற்றிருந்தன.

இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது.

இதில் செனகலுக்கு சறுக்கல் ஏற்பட்டது. செனகல் 6 YELLOW கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 YELLOW  கார்டுதான் பெற்றிருந்தது.

இதனால்  ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியதால்  மூலம் ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


வெளிநாட்டுவாழ் பலகத்துறை சகோதரர்களின் (Overseas Poruthota Brothers - OPB) அமைப்பு உதயமாகியது


-Sarthar Jameel-

உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் பலகத்துறையை சேர்ந்த சகோதரர்களால் எமது ஊரின் அபிவிருத்தியையும், நலன்புரியையும் அடிப்படையாக கொண்டு  Overseas Poruthota Brothers 
(OPB) எனப்படும்அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன் சேவையை தற்போது ஊரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு சிறிது காலமே ஆனாலும் அவ்வமைப்பில் உள்ள அங்கத்தவர்களது துரித முயற்சியினால் அதன் முதல் செயற்திட்டம் தற்போது பலகத்துறையில் அமுலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்த வகையில் OPB இன் முதல் செயற்திட்டமாக அல் பலாஹ் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்க முனையும் எமது ஊரைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஊர்மக்களுக்கு அறியத்தருவதில் OPB அங்கத்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

மேற்படி OPB இன் இந்தத் திட்டத்தின் படி ஒரு மாணவிக்கான ஊக்கத்தொகையாக  12 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் படி, இரண்டு மாணவிகளுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகையாக மாதாந்தம் 24 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. மே மாதத்திற்கான ஊக்கத்தொகையை வழங்கி இத்திட்டம் அல்லாஹ்வின் உதவியோடு ஆரம்பமாகி உள்ளது. 

இச்செயல்திட்டம் சம்பந்தமான ஒரு ஒன்றுகூடல் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல் பலாஹ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் OPB அமைப்பின் தலைவர் ஹாமித் அலி அவர்கள், அமைப்பாளரும் செயலாள‌ருமான முனாப் முஸம்மில், பொருளாலர் ஜௌபர் ஜான் உட்பட OPB அமைப்பின் அங்கத்தவர் சகோதரர் அஸீஸ் அவர்களும் பாடசாலை உப‌ அதிபர் அஜ்மல் ஆசிரியர், மற்றும் உதவித்தொகை பெறும் பெற்றோர் அடங்களாக OPB இன் ஊர் செயல்பாட்டாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களும் பங்குபற்றி இருந்தார்கள். 

OPB ஆரம்பித்திருக்கும் இச் செயற்திட்டம் வெற்றி பெற உங்கள்  அனைவரின்  பிரார்த்தனைகளையும் இறைவன் அருளையும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி... வஸ்ஸலாம்.

கண்ணீரை சிந்தவைக்கும் உண்மைக் கதையும், அழிக்கப்பட வேண்டிய பாதாள உலகமும்

குழந்தை பிறந்ததும் வந்துவிடுவேன் எனக் கூறிக்கொண்டு அவசரமாக வைத்தியசாலையிலிருந்து சென்றார்.

ஆனால் அவர் வழங்கிய வாங்குறுதியை நிறைவேற்றவில்லை. 

பிரசவம் முடிந்த பின்னரும் அவர் என்னை வந்து பார்க்கவில்லை. 

தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கணவர் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது அதற்காகவே காத்திருந்தேன்.

மாத்தறை கொள்ளைச்சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கிய நபரின் மனைவி வைத்தியசாலையில் பிரசவ அறையிலிருந்து கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்ட விடயங்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

ஹிட்லருக்கும், கோத்தபாயவுக்கும் இடையில் 2 ஒற்றுமைகள்

ஜெர்மனிய முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொதுவான இரண்டு ஒற்றுமைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஹிட்லரும், கோத்தபாய ராஜபக்சவும் மாசமிச உணவை உண்ணாதவர்கள் என்பதுடன் இருவரும் நாட்டுக்கு வெளியில் ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சித்தனர்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பது போல், ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் அவர் ஒஸ்ரியா நாட்டின் பிரஜை.

இதேவேளை, இலங்கை மீது உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு காட்டுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுப்பதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மானிப்பாயில் தனியே வாழ்ந்த பெண், பிச்சைக்காரர்களினால் வெட்டிக் கொலை


யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டிற்கு பிச்சை எடுக்கச் சென்ற 35 வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியில் இன்று (28) வியாழக்கிழமை காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கத்திக் குத்துக்கு இலக்காகி கந்தையா லீலாதேவி வயது 69 என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதுடன், சமையல் வேலை பார்ப்பதற்காக வயோதிப பெண் ஒருவரும் அந்த உயிரிழந்த பெண்ணுடன் இருக்கின்றார். 

இன்று வியாழக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் பிச்சைக்காரன் ஒருவர் வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்த மூதாட்டி 100 ரூபா காசு கொடுத்துள்ளார். அந்த காசை வாங்கிக்கொண்டு போன பிச்சைக்காரன் 30 நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சமையல் வேலை பார்ப்பதற்காக இருந்த வயோதிப பெண் அந்த மூதாட்டியை வந்து பார்த்த போது, மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த வயோதி பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்போது, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட வவிசாரணையின் போது, யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய ஜெயனாந்தன் சுதர்சன் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது சி.சி.டி.வி காணொளிகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பலாத்காரமாக இப்தார் நிகழ்வில், பங்கேற்கும் அரசியல்வாதிகள் ஓணான்கள் - சஜித் சாடுகிறார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் 200 வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தி விட்டே என வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா தெரிவித்தார்.

ஏறாவூரில் 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கப்பட்ட நிகழ்வில் வியாழக்கிழமை கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் “ஸம் ஸம் கிராமம்” மற்றும் “ஸகாத் கிராமம்” ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களில் 43 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர்மற்றும் மின்சார வசதி,  உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல், பயனாளிகள் 70 பேருக்கு “விசிரி” திட்டத்தின் கீழ்  தலா ஒரு இலட்ச ரூபா இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல், பயனாளிகள் 25 பேருக்கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபா வீடமைப்புக் கடன் வழங்கல்,  “சில்பசவிய” எனும் திட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல். அத்துடன் பயனாளிகள் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 வீட்டுத்’ திட்டங்களைத்தான் அமைப்பது என்று ஏற்கெனவே எனக்குள் இருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த வீடமைப்பு இலக்கை இருமடங்கு அதிகரிக்கத் தீர்மானித்துள்ளேன்.

நான் செய்வதைத்தான் சொல்வேன் சொன்னதைச் செய்வேன். ஏனென்றால் என் தந்தையும் அவ்வாறே செயற்பட்டவர்.

எனது வேகத்திற்கு ஈடுகொடுத்து எவரும் சரி சமனாகவும் ஓட முடியாது என்னைப் பின் தொடர்ந்து  எட்டிப் பிடிக்கவும் முடியாது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க வடிச்சல் கிராமத்தில் 50, உறுகாமம் கிராமத்தில் 75 வீடுகளும் அடுத்த மாதம் 28ஆம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்படும், அதேபோல ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க  சவுக்கடி 50, களுவங்கேணி 25, ஐயன்கேணி 25 என தமிழ் பிரதேசத்திற்கும் 100 வீடுகள் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்.

வீடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் திகதியை மட்டுமே அதிகாரிகளிடம் கேட்டு தீர்மானித்துக் கொண்டுள்ளேன்.

இந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் ஓணான்களாகவே பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களே பலாத்காரமாக இப்தார் நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்கள்.

இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளை ஏற்படுத்தி இந்த நாட்டுக்குத் தீவைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கின்றார்கள். மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இனியும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை. இந்த நாட்டுக்குத் தீ வைப்பவர்கள் இனி ஒரு போதும் தேவையே இல்லை.” என்றார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை, விரைவில் கைப்­பற்­றி மகிந்தவை தலைவராக்குவோம்

பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை எம் வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலை­வ­ராக்­கு­வதே எமது பிர­தான இலக்­காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடு­கையில், 

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்குள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்­கவும் நாட்டைத் துண்­டா­டவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும்  முன்­னெ­டுக்கும் நோக்­கங்கள் எமக்கு நன்­றா­கவே தெரி­கின்­றன. எனவே நாட்டைக் காப்­பாற்ற வேண்­டிய தேவை எமக்குள்­ளது.  

கடந்த ஜன­தி­பதித் தேர்­தலின்  பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்ளார். ஆகவே இது போது­மா­னது. இன்று தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய அச்­சு­றுத்தல் உள்­ளது. 

வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்கும் சூழல் உள்­ளது. வடக்கு முதல்வர் நாட்­டைத் துண்­டாடும் நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கிறார். சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள் பிரி­வி­னை­வாதக் கொள்­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். பொலிஸ் அதி­கா­ரங்கள், காணி அதி­கா­ரங்­களை கேட்­டுக்­கொண்டு  அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜி­ய­மாக செயற்­பட முயற்­சித்து வரு­கின்­றனர். இந்­ நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் நோக்­கங்கள் மூல­மாக விடு­த­லைப்­பு­லி­களின் இலக்கு என்­னவோ அது அர­சாங்­கத்தின் மூல­மா­கவே நிறை­வேற்­றப்­படும். ஆகவே 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிப்­பது குறித்து சகல தரப்­புகளு­டனும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சி ஆச­னத்தை நாம் கைப்­பற்ற வேண்டும். அந்த நோக்கம் எமக்குள்­ளது. குறிப்­பாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி முடி­வுக்கு வரும் வரையில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்­டு­வர வேண்டும். அதற்­கான சூழலை நாம் உரு­வாக்­கு­வது குறித்தும் சிந்­தித்து வரு­கின்றோம். 

இப்­போது அர­சாங்­கத்தில் இருந்து பலர் வெளி­யேறி எதிர்க்­கட்­சிக்கு  மாறி­யுள்­ளனர். ஆகவே இப்­போது கூட்டு எதிர்க்­கட்சி பிர­தான எதிர்க்­கட்­சி­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாற்றும் நகர்­வு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும் என்றார். 

Newer Posts Older Posts Home