Header Ads



உலக சுகாதார மையத்தின் WHO பிரதித் தலைவராக ராஜித தெரிவு


உலக சுகாதார மையத்தின் பிரதித் தலைவராக சுகாதாரம் யோசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக ஜெனீவா நகரில் இடம்பெற்று வருகின்ற உலக சுகாதார மையத்தின் 143 ஆவது வருடாந்த ஒன்று கூடலின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மையத்தின் தலைவராக பிரான்ஸிய சுகாதார அமைச்சர் தெரிவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.