Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தகபீட பீடாதிபதியாக S. குணபாலன் மீண்டும் தெரிவு

இப்பீடத்தில் காணப்படும் ஒரேயொரு சகோதர தமிழ் இனத்தைச் சேர்ந்தவராகவும் இப்பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராகவுமிருந்து தன்னை அர்ப்பணித்துக் கடமை புரிந்துவரும் கலாநிதி குணபாலன் அவர்கள் இப்பீடத்தின் பீடாதிபதியாக கடந்த மூன்று வருட காலமாகக் கடமையாற்றியவர். இவரோடு போட்டியிட்ட மற்ற இரண்டு வேட்பாளர்களும் முறையே 08, 05 வாக்குகளைப் பெற்ற வேளையில் இவர் 19 வாக்குகளைப் பெற்று பெருவெற்றியைத் தழுவியமையானது இவர் இப்பீடத்திற்கும் இப்பல்கலைக் கழகத்திற்கும் செய்த பணிகள், அர்ப்பணிப்புக்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பும், இவர்மீது இப்பீடத்தின் பீடசபை உறுப்பினர்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும் நன்றியுணர்வுமே காரணம் எனலாம். 

அனைத்து சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் சகோதரத்துவத்துடனும் அன்புடனும் பழகி கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிவரும் முகாமைத்துவத்தில் முதல்தர முதுநிலை விரிவுரையாளரான இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தனது முகாமைத்துவ இளமானிக் கற்கையையும், களனி பல்கலைக் கழகத்தில் வர்த்தக முதுமானிக் கற்கையையும் மேற்கொண்டு இந்தியாவில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டவராவார். இப்பீடத்தினைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலாநிதி எஸ். குணபாலன் அவர்களை மனமுவந்து வாழ்த்தி அவரிடமிருந்து மேலும் பல சேவைகளை எதிர்பார்க்கின்றனர்.

2 comments:

  1. கலாநிதி குணபாலன் அவர்களின் தெரிவிட்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள், அவர்களின் செயல்பாடுகளால் தமிழ் முஸ்லீம் உறவு மேலும் வலுவடைய வேண்டிப்பிரார்திப்போம்

    ReplyDelete
  2. Congratulations Dr. Kunabalan. He is a very good human being.

    ReplyDelete

Powered by Blogger.