Header Ads



இலங்கையின் புகழ்மிக்க பேராசிரியர் KKY. பெரேரா, BCAS Campus ஆளுநர் சபைக்கு நியமனம்

இலங்கையின் புகழ்மிக்க பொறியில் துறை பேராசிரியரும், மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பொறியியல் பீடாதிபதியுமான  பேராசிரியர் வித்யா ஜோதி  KKY.பெரேரா அவர்கள் BCAS Campus  இன் ஆளுநர் சபையில் இணைந்து கொண்டுள்ளார். இந்த நியமணம் பேராசிரியர் பெரேரா அவர்களுக்கு  கடந்த மாதம்  வழங்கி வைக்கப்பட்டதுடன் , கடந்த  10.5.2018 அன்று நடை பெற்ற BCAS ஆளுனர் சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இலங்கை பல்கலைக் கழக வரலாற்றில் இலத்திரனியல் துறையில் முதலாவது பேராசிரியரான பெரேரா அவர்கள் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையை ஸ்தாபித்து அதன் முதலாவது பீடாதிபதியாக கடமையாற்றினார். பொறியியல் துறையில் தனது விசேட கண்டு பிடிப்புகளுக்கும் பங்களிப்புகளுக்குமான பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு விருதுகளைப் பெற்றுக் கொண்ட அவர் தனது பங்களப்புக்கான ஜனாதிபதி விருதுகளையும் பெற்றுள்ளார். மொறட்டுவ- ஆதர் சி கிளார்க் நிறுவனம்,  இலங்கை மின்சார சபை இலங்கை,  சிறீலங்கா டெலி கொம்,  சின்டெக்ஸ் சிறீலங்கா உள்ளிட்ட  பல தேசிய நிறுவனங்களின் தலைவராகவும் கடமையாற்றியுள்ள இவர் தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேந்தராகக் கடமை புரிகிறார்.

இலங்கையின் தனியார் உயர் கல்வி வரலாற்றில் 20 வருட சிறப்பு அனுபவத்தினையும்  பிரத்தியேக பங்களிப்பினையும் செய்துள்ள BCAS Campus  நிறுவனம் இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமாக திகழ்கின்றது. பல்வேறு சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் இணைப்புகளைக் கொண்டுள்ள BCAS Campus பொறியியல்(Engineering) , கட்டட நிர்மானம்( Quantity Surveying & Construction) , சட்டம்(Law), கணணி (computing) ,  உயிரியல் மருத்துவ விஞ்ஞானம்(BioMedical sciences)  மற்றும் வர்த்தக முகாமைத்துவம்( Business  Management)  எனப் பல்வேறு துறைகளிலும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட உயர் கல்விப்பாட நெறிகளை வழங்குகின்றது.

கொழும்பு, கண்டி, கல்கிஸ்ஸை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் என பல்வேறு நகரங்களிலும் தனது வளாகங்களை கொண்டுள்ள BCAS Campus அடிப்படைப் பாட நெறி ( Foundation)  முதல் இளமானி (Degree) மற்றும் முதுமானி( Master degree)  உட்பட கலாநிதி பட்டம் ( Doctorate)  வரையிலான உயர் கல்வி  வாய்ப்புகளை வழங்குகின்றது

வெளிநாட்டு மாணவர்கள் உள்ளடங்கலாக 3500க்கும் அதிகமான மாணவர் தொகையினைக் கொண்டுள்ள BCAS Campus இன் கற்கை நெறிகள் அனைத்தும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகம அவர்களின் தலைமையில் நடத்தப்படுகின்றது.

பேராசிரியர்கள், கலாநிதிகள், அடங்கலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களும் ஊழியர்களும் BCAS Campus இல் பணியாற்றுகின்றார்கள். அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் கண்காணித்து வழி நடாத்தும் வகையில் BCAS Campus இன் ஆளுநர் சபை அமையப் பெற்றுள்ளது. இதில் மருத்துவப் பேராசிரியர் லமாவன்ச ( முன்னாள் மருத்துவ பீடாதிபதி, பேராதனை பல்கலைக்கழகம்) , பேராசிரியர் சானிகா ஹிரும்புருகம, பேராசிரியர் றொஹான் ராஜபக்ச, மேராதானை பல்கலை கழக பொறியியல் பீடத்தை சேர்ந்த கலாநிதி A.L.M.மஹ்ரூப், நீதியரசர் சலீம் மர்சூப்,  Dr. யஷா சிரிவர்தன,  பட்டையக்கணக்காளர்  S. ஆசிர் வாதம்  போன்ற கல்வியாளர்களைக்  கொண்டிருக்கிறது.

இந்த ஆளுநர் சபையில் இலங்கையின் புகழ்மிக்க பொறியியல் பேராசிரியரான பெரேரா அவர்களும் இணைந்து கொண்டிருப்பது BCAS Campus நிறுவனத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு  வலு சேர்ப்பதாகவும் BCAS Campus நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.