Header Ads



மஹிந்தவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கலாமா..?

-எஸ். ஹமீத்-

2015ம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துக் கொண்ட  சம்பவங்கள் சில நடந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மற்றையது முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த இனவாதிகளின் அட்டூழியங்களைத் தடுப்பதற்கான போதிய முயற்சிகளைச் செய்யாமல் இருந்தது.

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப் போராட்டத்தை அடக்கி, அடியோடு முடித்து வைத்தமைக்காக இலங்கைப் பெரும்பான்மையினர் மத்தியில் மகிந்த ஒரு மா மன்னனாகப் போற்றப்பட்ட அதேவேளை, அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளான தமது உறவுகளையெண்ணி, மகிந்த ராஜபக்ஷவைத் தமிழ் மக்கள் ஓர் அரக்கனென வர்ணித்துத் தூற்றினர். இவையிரண்டிற்குமிடையே நின்ற முஸ்லிம் சமூகம் யுத்தம் முடிவடைந்ததால் நிம்மதியும், எவ்விதக் குற்றங்களும் புரியாத சாதாரண தமிழ் மக்கள் கொல்லப்பட்டதனால் உள்ளூர வருத்தமும் அடைந்தது.

யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள இனவாத இயக்கங்கள் ஆங்காங்கே காளான்கள் போல முளைத்துக் கிளம்பின. முப்பது வருடங்களாகக் காத்திருந்தவை போல முஸ்லிம்கள் மீது அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டன. ஹலால்--பர்தா-அபாயா-என்பவற்றுக்கெதிராக எதிர்ப்புக் கோஷங்களையெழுப்பின. பல பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை நடத்தின. பன்றியிறைச்சியை இரத்தத்துடன் பள்ளிகளுக்குள் வீசின. ஆங்காங்கே முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தீக்கிரையாக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக அளுத்கம-தர்கா நகரில் வெறியாட்டமாடி, வீடுகளை எரித்து, உடைமைகளை அழித்து, இரண்டு அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும் காவு கொண்டன.

இவையத்தனையையும் அன்றைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார் என்று முஸ்லிம் சமூகம் கருதியது. மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தம்பியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவருமே முஸ்லிம்களுக்கெதிராக இயங்கும் இனவாத சிங்கள பௌத்த குழுக்களைத் தோற்றுவித்து வழி நடத்துகிறார்கள் என்று திடமாக நம்பியது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனத் திடசங்கற்பம் பூண்டது. அந்தத் திடசங்கற்பத்தைச் செயலிலும் காட்டி, மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. 

மஹிந்தவைத் தோற்கடித்து, மைத்திரியின் கூட்டரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த சில நாட்களுக்குள்ளாகவே, 'தவறிழைத்து விட்டோமோ?' என்று கைசேதப்படுகின்ற அளவுக்கு முஸ்லிம் சமூகம் மீண்டும் வருந்தத் தொடங்கிவிட்டது. எந்த சிங்கள, பௌத்த, இனவாதக் கும்பல்களும் காவிகளும் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்களோ அதே கும்பலும் காவிகளும் முஸ்லிம்களாகிய நாமே கொண்டு வந்த இந்த நல்லாட்சியில் முன்னரை விடச் சுதந்திரமாகவும் அரச ஆசீர்வாதங்களோடும், பலத்த பாதுகாப்புகளோடும் சலுகைகளோடும் நமக்கெதிரான வன்முறைகளையும் கொடுமைகளையும் தங்குதடையின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் மிக்க கவலையோடும் மிகுந்த கோபத்தோடும் இங்கே ஓர் உண்மையை எவ்விதக் காழ்ப்புணர்வுகளுமின்றி, அரசியல் பேதங்களுக்கப்பால் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான், கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த கொடுமைகளின் அளவைவிட இருநூறு சத விகிதம் அதிகமாகவே இந்த நல்லாட்சியில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையாகும்.

மகிந்த காலத்து ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்னணியில் உண்மையாகவே யார் யாரெல்லாம் இருந்தார்களென்ற உண்மை இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ராஜித சேனாரத்னவின் பெயரும் சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பல ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், ஓர் அரசாங்கமென்ற ரீதியில் மகிந்தவும் கோத்தபாயவும் அதனைக் கண்டும் காணாதிருந்தது ஏன் என்ற நியாயமான கேள்வியும் எழாமலில்லை.

முஸ்லிம்களுக்கெதிரான கடந்த கால ஆட்சியின் உச்சக்கட்டமாக நடைபெற்ற அளுத்கம கலவரம் முடிந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே மகிந்தவை நாம் தோற்கடித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டோம். உண்மையில் அந்தக் கலவரத்துக்கும் அதற்கு முன்னதான திட்டமிடப்பட்ட அட்டூழியங்களுக்கும் பின்னணியிலிருந்த கர்த்தாக்கள் யார் என்று கண்டுபிடிக்கும் கால அவகாசம் மகிந்த அரசாங்கத்திற்குக் கிட்டாததை ஒரு காரணமாக இங்கு முன்வைக்கலாம்.

சரி...எது எப்படியோ, இன்று நமது முன்னுள்ள இரு பெரும் கேள்வி இதுதான். நூறு முறை நம்மைத் தாக்கிய ஒருவரா, ஆயிரம் முறை நம்மைத் தாக்கிய ஒருவரா மோசமானவர்? இந்த இருவரில் யாரை நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுத்தேர்தலில் ஆதரிக்கப் போகிறோம்?

மகிந்தவும் கோத்தாவும் நாமலும் பசிலும் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கொடுமைகளுக்காக இன்று வருந்தி, பகிரங்கமாக  மன்னிப்புக் கேட்கும் நிலைமை காணப்படுகிறது. இன்னுமொரு முறை தாம் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய கொடுமைகளெதுவும் நிகழாமல் முஸ்லிம்கள் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்ற வாக்குறுதிகளை அவர்கள் பகிரங்கமாகக் கூறி வருகிறார்கள். மறுபக்கம் சிங்கள மக்களின் ஆதரவும் மகிந்த, கோத்தாவுக்குப் பன்மடங்கு பெருகி வருகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் இதற்கு தக்க சாட்சி.

இன்னுமொரு விடயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நிலையற்ற இந்த அரசாங்கம் அடுத்த தேர்தல்களில் பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறிச் சின்னாபின்னமாகி மகிந்த, கோத்தாவிடம் மண் கவ்வுமென்பதை யதார்த்தம் புரிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். ஆக, நாம் யாரைத் தெரிவு செய்வது?

இந்த இரு தரப்பாரையும் விடுத்து, மூன்றாவதொரு சக்தி முன்னணிக்கு வந்து, ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுமென்பதெல்லாம் வெறும் பகற் கனவு. ஆக, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்றிருக்கும் தெரிவு இரண்டுதான். ஒன்று மகிந்த சார்ந்த அணி. அல்லது, மைத்திரியோ, ரணிலோ அல்லது இருவருமோ சார்ந்த அணி. இந்த அணிகளில் நாம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம்?

முறையான பேச்சுவார்த்தைகளுடன், உறுதியான ஒப்பந்தங்களுடன், மீறமுடியாத வாக்குறுதிகளுடன் மீண்டும் ஒரு முறை மகிந்த ராஜபக்ஷவுக்கோ, அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்கோ ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாமென்றே தோன்றுகிறது. அவ்வாறு நாம் ஆதரவு வழங்காது மகிந்த சார்ந்த அணி வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னரான முஸ்லிம்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே குமிழ்ந்தெழும் அச்சமும் நமதிந்த நிலைப்பாட்டிற்கு ஒரு காரணமாகும்!

23 comments:

  1. எஸ் ஹமீத் அவர்களே
    நீங்கள் மக்களுக்கான அரசியல் செய்பவர்களை தட்டி கொடுங்கள் அதை விடுத்து எவன் வெற்றி பெறுவனோ அவன் பக்கம் சாய்ந்து சரியோ பிழையோ இஸ்லாத்திற்கும் எதிரான சகல நடவடிக்கைகளையும் அதாவது பிறரின் உரிமையையும் நிலங்களையும் பறித்தெடுக்கும் அரசியலுக்கு உங்கள் மக்களை மீண்டும் மீண்டும் இழுத்து செல்லாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே புனித இஸ்லாத்தை பின்பற்றுபவராக இருந்ததால் நீங்கள் நேர்மை வழி நிற்க வேண்டுமே தவிர வெல்பவர் பக்கம் நின்று அடுத்தவன் உரிமையில் தலையிடக்கூடாது. இப்படியான பக்கச்சார்பு கட்டிக்கொடுப்புகளை உங்கள் சமயம் ஆமோதித்திருக்கலாம் ஆனால் நீதி என்று ஒன்று உள்ளது. சிறிய திருத்தம் நீங்கள் கூறினீர்கள். அப்பாவி தமிழர்கள் இறந்தது முஸ்லிம்களுக்கு கவலையென்று அது இல்லவே இல்லை , அவ்வாறு இருந்திருந்தால் யுத்தம் முடிவடைந்து பாத்து வருங்களிலாவது நடைபெற்றது ஒரு தமிழின அழிப்பு என ஒரு முஸ்லிமாவது வாய் திறந்தார்களா. இல்லவே இல்லை அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்கள் என்பதே உண்மை ஏனெனில் அவர்களுடைய சனத்தொகை வளர்ச்சிகேட்ப நிலப்பற்றாக்குறையை தீர்த்து கொள்வதறகாக. எனவே தமிழர்களின் இறப்பில் நன்மை அனுபவித்து வரும் முஸ்லிம்கள் வருந்தினார்கள் என தயவு செய்து கனவிலும் இனிவரும் கட்டுரைகளில் எழுதி விடாதீர்கள்.

    ReplyDelete
  2. Why not? My3 Pala and Ranil have failed completely in all aspects, not only Muslim Issue....

    ReplyDelete
  3. WE HAVE TO CHANGE OUR DAILY LIFE
    ACCORDING TO ISLAM MAXIMUM TRY OUR BEST.OUR GOOD DEEDS WILL BRING GOOD AND KIND LEADER.THIS IS THE ONLY SOLUATION.

    ReplyDelete
  4. @Anusath, you should not find fault with Islam. There are many Muslims who do politics for personal gains. Islam teaches us to be fair in dealing with anyone under all circumstance. Also there are Hindus and Christians who are living happily in the NE due to the eradication of terrorism.

    ReplyDelete
  5. Former President Mahinda Rajapaksa was a STATESMAN, not only a politician. BUT MAHINDA RAJAPAKSA SHOULD MAKE SURE THAT HE WILL NOT TOLERATE THESE unscrupulous MUSLIM POLITICIANS GETTING INTO HIS FOLD AT THE NEXT ELECTIONS TRYING TO SELL THE MUSLIM VOTE BANK TO HIM. THE MUSLIM VOTERS WHO VOTED AGAINST MAHINDA AT THE 2015 PRESIDENTIAL and GENERAL ELECTIONS GOING AFTER THESE DECEPTIVE MUSLIM POLITICIANS ARE NOW BEGINNING TO SEE THE TRUE PICTURE OF MISGUIDANCE AND DECEPTION THAT WAS TRUST ON THEM THEN AND HOW THEY HAVE BEEN MADE USE FOR THE SELFISH AND PERSONAL GAINS OF THESE LEADERS AND POLITICIANS. THE MAJORITY OF THEM WILL NEVER AGAIN VOTE THE UNP, OR AGAINST MAHINDA RAJAPAKSA, EXCEPT THE HARDCORE TRADITIONAL MUSLIM UNP SUPPORTERS. THE HARDCORE UNP MUSLIMS SHOULD NOW BEGIN TO POLITICALLY UNDERSTAND THE REALITY AND START CHANGING THEIR ATTITUDE TOWARDS THE STATEMAN. Do not the Muslims remember what the TNA Leader R. Sambandhan said in parliament recently – Mahinda Rajapaksa is a “STATESMAN” who should be involved in solving the ethnic issues. Is this NOT a shroud and cunning political statement made by the Tamil Leader keeping room for supporting Mahinda Rajapaksa in any future elections, if the need/situation arises for the benefit of the Tamils? Then the Muslims/Muslim voters (pamaramakkal the pooraaligal and the saadaranamakkal) should also learn from this, to be prepared for the future, not be inclined to their political parties or their deceptive and hoodwinking leaders, Insha Allah.

    GOTABAYA RAJAPAKSA IS THE BEST BET AS THE NEXT PRESIDENT OF SRI LANKA FOR THE MUSLIMS IN 2019/20, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political communication Researcher, Former SLFP District Organizer, Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.

    ஓர் இறைவாசி இருமுறை கொத்தப்பட மாட்டான்.

    நாம் உண்மையிலேயே இறைவாசியாக இருந்தால், மஹிந்த, கோத்தா, இப்போதைய ஜனாதிபதி, ரணில் ஆகியோரை நினைத்தும் பார்க்கக் கூடாது.

    வேறு யாரும் போட்டியிட்டால், எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆதரிக்கலாம்.

    ReplyDelete
  7. WE are not against tamils or sinhala people.WE AGAINST FOR TERRORISM LIKE LTTE.

    ReplyDelete
  8. ஹமீத் அவர்களே, முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள், இவர்களை ரானிலோ, மைத்திரியோ, ராஜபக்சவோ காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த நாட்டின் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து அதட்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும். அப்படி சிந்தித்து அரசியல் செய்யும் முஸ்லீம் அரசியல் வாதிகள் தற்போது களத்தில் இல்லை. ஆக.. நீங்கள் ராஜபக்சவுக்கு மாமா வேலை செய்கிறீர்களா? அல்லது உங்களிடம் உள்ள அரசியலின் ஆழம் இவ்வளவுதானா? என்பது கொஞ்சம் புரியவில்லை. நேரம் வரும் அப்போது மக்கள் சரியாக செயட்படுவார்கள். முடிந்தால் தேசிய அரசியலை பற்றி சிந்தியுங்கள்.

    Hey Anusath, உமக்கு அரசியலும் தெரியாது, புரிவதட்குரிய ஆற்றலும் இல்லை. ( அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, ராஜிவ் காந்தி.. etc. ) கொஞ்சம் அரசியலையும் தமிழன் வரலாறையும் படி. படித்தால் புரியும். சும்மா இஸ்லாம் மதத்தை பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ளும். முடிந்தால் உமது பிரச்சினையை தனிநபர்களுடன் வைத்துக் கொள்ளும்.

    Hello Nooru Nizam, Please stop telling about muslims "paamara makkal" How about you??? "Padiththa makkala??..." Do you know history about Rajapaksa and Kotabaya.. Go through Rajapaksa's twist and turn from 1970.. 1972 - JVP... 1977.. 1982...1988 - 1990 JVP Problem. How he tookover the leadership from Chandrika.. Deal with Prabakaran... Deal with Chambika..Deal with Palasenakal...and so on..! other think is Jaffana Muslim is completely Tamil Media. So it is better you post your views in tamil then it reach to most readers.

    ReplyDelete
  9. ஹமீத் அவர்களே, முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள், இவர்களை ரானிலோ, மைத்திரியோ, ராஜபக்சவோ காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த நாட்டின் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து அதட்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும். அப்படி சிந்தித்து அரசியல் செய்யும் முஸ்லீம் அரசியல் வாதிகள் தற்போது களத்தில் இல்லை. ஆக.. நீங்கள் ராஜபக்சவுக்கு மாமா வேலை செய்கிறீர்களா? அல்லது உங்களிடம் உள்ள அரசியலின் ஆழம் இவ்வளவுதானா? என்பது கொஞ்சம் புரியவில்லை. நேரம் வரும் அப்போது மக்கள் சரியாக செயட்படுவார்கள். முடிந்தால் தேசிய அரசியலை பற்றி சிந்தியுங்கள்.

    Hey Anusath, உமக்கு அரசியலும் தெரியாது, புரிவதட்குரிய ஆற்றலும் இல்லை. ( அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, ராஜிவ் காந்தி.. etc. ) கொஞ்சம் அரசியலையும் தமிழன் வரலாறையும் படி. படித்தால் புரியும். சும்மா இஸ்லாம் மதத்தை பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ளும். முடிந்தால் உமது பிரச்சினையை தனிநபர்களுடன் வைத்துக் கொள்ளும்.

    Hello Nooru Nizam, Please stop telling about muslims "paamara makkal" How about you??? "Padiththa makkala??..." Do you know history about Rajapaksa and Kotabaya.. Go through Rajapaksa's twist and turn from 1970.. 1972 - JVP... 1977.. 1982...1988 - 1990 JVP Problem. How he tookover the leadership from Chandrika.. Deal with Prabakaran... Deal with Chambika..Deal with Palasenakal...and so on..! other think is Jaffana Muslim is completely Tamil Media. So it is better you post your views in tamil then it reach to most readers.

    ReplyDelete
  10. நல்லாட்சிக்காக உழைக்கும் NFGGயின் கொள்கைகளுக்கு நெருக்கமான கொள்கைகளையுடைய JVP மற்றும்  சிறுபான்மையினர் கட்சிகள் அத்தோடு அவர்கள் மீது நீதி செலுத்தக் கூடிய  இதர கட்சிகளையும் ஒன்றிணைத்து ஓர் ஒப்பந்த அடிப்படையில்  கூட்டணி ஒன்றை உருவாக்கும் வேலையை இப்போதே  ஆரம்பித்தால்  என்ன?

    ReplyDelete
  11. @Ghouse,
    Yes, in the same manner still muslims also live happily after the eviction of muslims from nothern province in 1990. They haven't faced any destructions during the war, so muslims should thank and praise ltte for their future prediction in favour of muslims

    ReplyDelete
  12. SAJITH PREMADASA WILL DO
    GOOD JOB FOR COUNTRY.LET US WAIT.I.A.

    ReplyDelete
  13. Sajith Premadasa is the man who is compatible to this country for govern as a president becoz he is not a racist and good politician to serve people.

    ReplyDelete
  14. WHY CANNOT THE MUSLIMS THINK DIFFERENTLY AT LEAST NOW? IT IS CLEARLY UNDERSTOOD THAT THE UNP AND THE SLFP OR THE COMBINATION OF BOTH WHICH RULED THE COUNTRY FOR THE LAST SEVENTY YEARS HAVE MAINLY USED LANGUAGE, RELIGION AND RACE TO COME TO POWER TO COVER UP THEIR FAILURE TO HAVE POLICIES TO PROVIDE A DECENT MEANS OF LIVELIHOOD TO THE PEOPLE, BE IT THE MUSLIMS OR THE OTHER COMMUNITIES. THEIR OPPORTUNISTIC POLICIES HAVE NOT ONLY DIVIDED THE PEOPLE AND HAVE MADE THEM ENEMIES OF EACH OTHER THEY HAVE ALSO MADE THE COUNTRY INDEBTED TO FOREIGN COUNTRIES AND INTERNATIONAL AGENCIES TO SUCH AN EXTENT THAT SUCH DEBTS CANNOT BE SETTLED EVEN BY GENERATIONS TO COME. WHILE THE COUNTRY AND THE ORDINARY PEOPLE ARE SUFFERING TO THAT EXTENT THE POLITICIANS OF THE UNP AND SLFP AND THEIR FAMILIES, KITH AND KIN HAVE BECOME EXORBITANTLY RICH THROUGH WEALTH MADE BY BRIBES AND CORRUPT DEALS. THEY HAVE EVEN RESORTED TO MURDERING PEOPLE TO KEEP THEMSELVES IN POWER. SO CAN THE MUSLIMS STILL THINK OF BRINGING EITHER THE MR CLIQUE OR CONTINUE TO KEEP THE RANIL-MAITHRI GROUP IN POWER. WHY CANNOT THE MUSLIMS SUPPORT THE LEFTISTS AND, PARTICULARLY THE JVP, WHICH HAVE UNCONDITIONALLY CAME TO THE RESCUE OF THE MUSLIMS WHENEVER THE MUSLIMS WERE ATTACKED. THESE LEFT PARTIES STAND FOR EQUALITY, FAIRNESS AND JUSTICE TO ALL THE COMMUNITIES. ARE NOT SUCH POLICIES ACCEPTABLE TO THE MUSLIMS ACCORDING TO OUR ISLAMIC BELIEFS. PLEASE LISTEN TO THE SPEECH OF THE JVP LEADER, ANURA KUMARA DISSANAYAKE, DELIVERED AT THE MAY DAY MEETING HELD ON 11TH MAY ORGANISED BY THE JAMAAT E ISLAMI. ANURA KUMARA SETS DOWN THE VISION FOR THE HEALTHY SRI LANKA BENEFICIAL FOR ALL THE PEOPLE. I HAVE POSTED THE VIDEO OF THIS SPEECH IN MY FACE BOOK. PLEASE READ. LET US MUSLIMS THINK OF NEW DIRECTIONS TO ENSURE OUR PEACEFUL FUTURE RATHER THAN GROPING IN THE DARK PAST.

    ReplyDelete
  15. LINK TO JVP LEADER ANURA KUMARA DISSANAYAKE'S SPEECH AT THE EVENT ORGANISED BY SRI LANKA JAMAAT E ISLAMI. THE VISION FOR A BETTER SRI LANKA AND PEACE FOR THE MUSLIMS
    https://www.facebook.com/JVPItalia/videos/1593466134084754/?t=14

    ReplyDelete
  16. WHY CANNOT THE MUSLIMS THINK DIFFERENTLY AT LEAST NOW? IT IS CLEARLY UNDERSTOOD THAT THE UNP AND THE SLFP OR THE COMBINATION OF BOTH WHICH RULED THE COUNTRY FOR THE LAST SEVENTY YEARS HAVE MAINLY USED LANGUAGE, RELIGION AND RACE TO COME TO POWER TO COVER UP THEIR FAILURE TO HAVE POLICIES TO PROVIDE A DECENT MEANS OF LIVELIHOOD TO THE PEOPLE, BE IT THE MUSLIMS OR THE OTHER COMMUNITIES. THEIR OPPORTUNISTIC POLICIES HAVE NOT ONLY DIVIDED THE PEOPLE AND HAVE MADE THEM ENEMIES OF EACH OTHER THEY HAVE ALSO MADE THE COUNTRY INDEBTED TO FOREIGN COUNTRIES AND INTERNATIONAL AGENCIES TO SUCH AN EXTENT THAT SUCH DEBTS CANNOT BE SETTLED EVEN BY GENERATIONS TO COME. WHILE THE COUNTRY AND THE ORDINARY PEOPLE ARE SUFFERING TO THAT EXTENT THE POLITICIANS OF THE UNP AND SLFP AND THEIR FAMILIES, KITH AND KIN HAVE BECOME EXORBITANTLY RICH THROUGH WEALTH MADE BY BRIBES AND CORRUPT DEALS. THEY HAVE EVEN RESORTED TO MURDERING PEOPLE TO KEEP THEMSELVES IN POWER. SO CAN THE MUSLIMS STILL THINK OF BRINGING EITHER THE MR CLIQUE OR CONTINUE TO KEEP THE RANIL-MAITHRI GROUP IN POWER. WHY CANNOT THE MUSLIMS SUPPORT THE LEFTISTS AND, PARTICULARLY THE JVP, WHICH HAVE UNCONDITIONALLY CAME TO THE RESCUE OF THE MUSLIMS WHENEVER THE MUSLIMS WERE ATTACKED. THESE LEFT PARTIES STAND FOR EQUALITY, FAIRNESS AND JUSTICE TO ALL THE COMMUNITIES. ARE NOT SUCH POLICIES ACCEPTABLE TO THE MUSLIMS ACCORDING TO OUR ISLAMIC BELIEFS. PLEASE LISTEN TO THE SPEECH OF THE JVP LEADER, ANURA KUMARA DISSANAYAKE, DELIVERED AT THE MAY DAY MEETING HELD ON 11TH MAY ORGANISED BY THE JAMAAT E ISLAMI. ANURA KUMARA SETS DOWN THE VISION FOR THE HEALTHY SRI LANKA BENEFICIAL FOR ALL THE PEOPLE. I HAVE POSTED THE VIDEO OF THIS SPEECH IN MY FACE BOOK. PLEASE READ. LET US MUSLIMS THINK OF NEW DIRECTIONS TO ENSURE OUR PEACEFUL FUTURE RATHER THAN GROPING IN THE DARK PAST.

    ReplyDelete
  17. இவர்களை அனைவரையும் விட ஜேவிபி யை ஒருமுறை ஆட்சியில் அமர்த்தி பார்த்துவிடுவோம். தமிழ் முஸ்லிம்கள் நினைத்தால் இது முடியும்.

    ReplyDelete
  18. Mahinda can be statesman to some people who won favours from him and Gota may be good so that some can get special favours from. but not for the for the Muslims nor for the country as both of them are well known to be corrupt and violent.

    ReplyDelete
  19. சகோதரர் MOHAMED MARZOOK அவர்களது  JVP பற்றிய கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்.  ஆனால், தமிழில் அவற்றை தர முடியுமாக இருந்தால் இத்தளத்திற்கு வருகை தரும் சகலரும் பயனடைவர்.

    இங்கு Comment இல் தமிழ் key board ஒத்துழைக்க வில்லை என்றால் Phone  இல் உள்ள Memo அல்லது Note Pad போன்றவற்றில் தமிழில் Type செய்து இங்கு Copy/Paste பண்ணலாம். 

    ஏனையோரும் போனிலுள்ள Play Store அல்லது GOOGLE சென்று Tamil Key Board ஐ download பண்ணி தமிழிலேயே தம் கருத்துக்களை தர முயற்சிக்கலாம்.  நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.