Header Ads



ஆட்சி கவிழ்ப்பு கனவு, ஒருபோதும் பலிக்காது - ஜனாதிபதி

புலிகளின் தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (19.05.18) நடைபெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்றுவந்த வந்த யுத்தம் நிறைவுக்கு வந்தமைக்கு இராணுவமே காரணம் என சுட்டிக்காட்டிய அவர், அவர்களை நினைவு கூற வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமது அரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் ஜனாதிபதி இதன் போது தெளிவுபடுத்தி உள்ளார்.

இதேவேள இன்று நடைபெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில், முப்படையில் சேவையாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றுள்ள 50 உயர் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ, விமான மற்றும் கடற்படைகளில் 25 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றிய, சிறந்த சேவை வரலாற்றைக்கொண்ட அதிகாரிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் மற்றும் அதனை விட உயர் பதவிகளை வகித்தவர்களும் இதற்கு இணையான கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்களும் இந்த விருதிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். விருது வழங்கல் வைபவத்தில் முப்படையை சேர்ந்த தளபதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.