Header Ads



இலங்கையில் வெள்ளிக்கிழமையே, நோன்பு ஆரம்பம்

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததனால், ஷஃபான் மாதத்தை 30 ஆகப் பூரணப்படுத்துவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை பிறைக்குழு, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இதன்படி, ரமழான் முதல் நோன்பு நளை மறுதினம் (18) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவ்வமைப்புக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன

1 comment:

  1. இந்த‌ சூழ‌லில் தொலைக்காட்சி, நேர‌டி தொலைபேசி என்ற‌ ந‌வீன‌ சாத‌ன‌ங்க‌ள் அதிக‌ரித்த‌ போது முஸ்லிம் ச‌மூக‌த்தின் சில‌ உல‌மாக்க‌ள் இத‌ற்கொரு முடிவை தேடின‌ர். அத‌ன் கார‌ண‌மாக‌ நாட்டுக்கொரு பிறை ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌த்தில் ஏதாவ‌து நாட்டில் பிறை க‌ண்டால் அது முழு முஸ்லிம்க‌ளும் ஏற்க‌லாம் என்ற‌ க‌ருத்துக்க‌ள் உருவாகின‌. அதுவும் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமையை ஏற்ப‌டுத்த‌வில்லை. ஒருவ‌ருக்கு நியூசிலாந்து பிடிக்கும் என்றால் அங்கு பிறை காண‌ப்ப‌ட்ட‌ செய்தியை பெற்று அத‌னை இங்கு அமுல் ப‌டுத்துவார். அதே ச‌ர்வ‌தேச‌ பிறைக்கொள்கையை ஏற்ற‌வ‌ர் நியூசிலாந்து பிறையை ஏற்காம‌ல் அடுத்த‌ நாள் ம‌லேசியாவில் க‌ண்ட‌ பிறையை அமுல் ப‌டுத்துவார்.
    அற‌பா தின‌ நோன்பும் அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடும் முன்பும் அல்ல‌து கூடிய‌ பின்பும் நோற்க‌ப்ப‌டுவ‌தையும் க‌ண்டோம்.

    இந்த‌ சூழ் நிலையில்த்தான் நாம் ம‌க்கா பிறை என்ற‌ க‌ருத்தை முன் வைத்தோம். அதாவ‌து இந்த‌ பித்னாவில் இருந்து வெளியேறி உல‌க‌மெல்லாம் ஒரு பிறையை தொட‌ர‌ ம‌க்காவில் ந‌டைமுறைப்ப‌டுத்தும் பிறையை ஏற்போம் என்ற‌ க‌ருத்தை இந்த‌ நாட்டில் முன் வைத்தோம். இத‌ன் மூல‌ம் உல‌க‌மெல்லாம் ஒரே நாளில் நோன்பு பிடிக்க‌ முடியும் என்ப‌தையும் செய‌ல்ப‌டுத்தி காட்டினோம். இது விட‌ய‌த்தில் எம‌க்கும் ம‌க்கா உல‌மாக்க‌ளுக்கும் க‌ருத்து வேறுபாடு இருப்பினும் அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள் ஆதார‌ குறைவு கார‌ண‌மாக‌ நாம் ஏற்க‌வில்லை. எம‌து ம‌க்கா பிறை க‌ருத்தை ப‌ல‌ முஸ்லிம்க‌ள் இப்போது புரிந்து வ‌ருகிறார்க‌ள்.

    சில‌ வேளைக‌ளில் ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையும் பிழையாக‌ இருப்ப‌துண்டு. ஆனாலும் ம‌க்கா என்ப‌து உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமைய‌க‌ம் என்ப‌தால் அத‌னை நாம் ஏற்க‌ வேண்டும். அவ‌ர்க‌ள் வேண்டுமென்றே பிழை விட்டால் அத‌ற்கு அவ‌ர்க‌ள்தான் குற்ற‌வாளிக‌ளே த‌விர‌ நாம் அல்ல‌ என்ப‌து இஸ்லாத்தின் தெளிவு.

    இந்த‌ நிலையில் அறிவிய‌ல் மூல‌ம் உல‌க‌மெல்லாம் ஒரு பிறையை க‌டைப்பிடிக்கும் முய‌ற்சியில் உல‌க‌ அறிஞ‌ர்க‌ள் இற‌ங்கின‌ர். இந்தியாவில் ஹிஜ்ரி க‌மிட்டி உருவாக்க‌ப்ப‌ட்டு உல‌குக்கான‌ ஹிஜ்ரி க‌ல‌ண்ட‌ரை உருவாக்கின‌ர். அத‌னை நாம் பார்வையிட்ட‌ போது அது உண்மையாக‌வும் ந‌டை முறை சாத்திய‌மாக‌வும் குர் ஆன் ந‌பிவ‌ழிக்கு முர‌ண்ப‌டாத‌ வ‌கையிலும் இருப்ப‌தை க‌ண்டோம்.

    ஆனாலும் அத‌னை ச‌வூதி அல்ல‌து ம‌க்கா ஏற்காத‌வ‌ரை அதையும் உல‌க‌ளாவிய‌ ரீதியில் க‌டைப்பிடிப்ப‌து க‌ஷ்ட‌ம். ஆனாலும் வெகு விரைவில் அந்த‌ ஹிஜ்ரி க‌ல‌ண்ட‌ர் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளாலும் ஏற்க‌ப்ப‌டும் சாத்திய‌ம் உள்ள‌து.

    ஆக‌வே இது விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள் உண‌ர்வுக‌ளுக்கு இட‌ம் கொடாம‌ல் தேசிய‌ வாத‌த்துக்கும் இட‌ம் கொடாம‌ல் சொல்ல‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை ப‌டிக்க‌ வேண்டும். நிச்ச‌ய‌ம் இறைவ‌ன் ந‌ல்வ‌ழியை ந‌ம‌க்கு காட்டுவான்.
    - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

    ReplyDelete

Powered by Blogger.