May 25, 2018

எந்த நாட்டில் பயங்கரவாத தலைவரை, நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது..? கோத்தபாய

புலிகள் புலம்பெயர் அமைப்புகள் சர்வதேச ரீதியில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இன்னும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஆகவே எந்தவொரு அரசாங்கமும் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“எந்த நாட்டில் பயங்கரவாத தலைவரை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்படுகின்றது. அதே போன்று “மே 18, தமிழ் இனவழிப்பு நாள்” என முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் மே 18 ஆம் திகதி புலிகளுக்கு எதிராக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகும். இராணுவத்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக கொண்டு சென்ற செயற்பாடுகளை தமிழ் மக்களின் இனவழிப்பு என பகிரங்கமாக நினைவு கூறப்படுகின்றது.

இதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகளின் அரம்ப காலமாகிய 1970இல் இறுதிக்காலத்திற்கும் அப்பால் சென்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றே அர்த்தம்.

புதைக்கப்பட்ட ஆயுதங்கள் அப்பிரதேசங்களில் இருக்கலாம், அதே போல் புலிகள் புலம்பெயர் அமைப்புகள், சர்வதேச ரீதியில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இன்னும் நிதி சேகரிப்பு தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விடயங்கள் 1970, 80 காலப்பகுதியை விடவும் அப்பால் சென்ற நிலையிலேயே இருக்கின்றன.

தற்போது பயங்கரவாத அமைப்புகள், மற்றும் இணையத்தள செயற்பாடுகள் என்பன அப்போதைய காலத்தை விடவும் வேகமாக பரப்பப்படுகின்றன.

ஆகவே, எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

இவர் சரியோ பிழையோ சொல்லுறது உண்மை தான்.புலி பயங்கரவாதிகளுக்கு என்ன நினைவு சின்னம் கூட்டம் நடத்த அனுமதிகொடுக்க வேண்டும்.புலி பயங்கரவாதிகளினால் தான் இந்த நாட்டில் விலைவாசி எல்லாம் யுத்த காலத்தில் அதிகரித்தின அத்தோடு பொருளாதாரம் கீழ் மட்டத்துக்கு சென்றன.

@ Bulli bulli,
பொருளாதாரம் பற்றி நீங்கள் பேசுவது நகைச்சுவையான விடயம். சிரியா ஈராக் போன்ற இடங்களில் மக்கள் உயிருக்கும் உணவுக்கும் ஏங்கி தவிகின்றார்கள். அங்கே போய் சொல்லி பாருங்கோ நீங்கள் சதாம் உசேனுக்கும் கிளர்ச்சிகளுக்கும் ஆதரவு வழங்கியதால் தான் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தார்கள் என. ஓட ஓட அடிப்பார்கள்

@BulliBulli, யுத்தம் முடிச்சு 10 வருடமாயிட்டுது, விலைகள் ஒன்றும் குறைந்தபாடில்லையே. உண்மையில் யுத்தம் முடிந்த பின்னர் பலவற்றின் விலைகள் டபுள்-ரிபுள் ஆகிவிட்டது.

இந்த ஊழல் அரசியல்வாதிகளின் தீராத விளையாட்டுகள் தான் எல்லாம். இதில் ஒருவர் இந்தா அறிக்கை விடுபவர், இன்னொருவர் மயில் தலைவர், இப்படி பலர். இந்த ஊழல் பேர்வழிகள் தான் உண்மையான பயங்கரவாதிகள்.

To Mr Anusath Chandrabal.ஈராக்கின் நிலைவேற இலங்கையின் நிலைவேற அதை நல்ல தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஈராக் நாட்டின் பொருளாதாரம் முழுவதும் கனிய எண்ணெய் வளத்திலே தங்கி இருக்கின்றன உதாரணமாக யுத்தம் நின்றவுடன் உடனே அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்து முழு பண்பொருமதியே பெறலாம் ஆனால் இலங்கையின் நிலை வேற !

Post a Comment