Header Ads



"கர்பிணி ஆசிரியைகளுக்கான, புதிய உடை கட்டாயமல்ல" - கல்வியமைச்சு


கர்பிணி ஆசிரியைகளுக்கான புதிய உடை இன்று -24- முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான சுற்று நிறுபம் வெளியிடும் நிகழ்வும் கல்வியமைச்சில் இடம்பெற்றது.

பாடசாலை முறைமையில் தற்போது கற்றல் கற்பித்தல் பணிகளில் 236¸000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இவர்களில் 172¸000 ஆசிரியைகளாக காணப்படுகின்றனர். இதில் வருடாந்தம் சுமார் 10¸000 ஆசிரியைகள் மகப்பேற்று விடுமுறையில் செல்வதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ஆடைகள் சுமார் 06 வடிவங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளதுடன், கற்பிணிக் காலத்தில் இறுதி ஒரு சில மாதங்களுக்குள் ஏற்படக்கூடிய உடல்சார்ந்த சிரமங்கள் தொடர்பில் கருத்தி கொள்ளும் போது வசதியான ஆடையினை அணிவது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கர்பிணிக் காலத்தில் மிகவும் வினைத்திறனைப் போன்று உற்பத்தித் திறன் மிக்க சேவையினை வழங்குவதற்காகப் பொருத்தமான வகையில் தொழிலின் கௌரவத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாத இலகுவான ஆடைகளை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆடை கட்டாயமல்ல என்பதுடன்¸ கற்ப காலத்தில் ஆசிரியைகளின் விருப்பத்திற்கமைய பயன்னடுத்த முடியும் என்றும், குறிப்பிடப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கக் கூடியவாறு ஆடைகள் தயாரிக்கப்பட வேண்டியதுடன்¸ இதற்குப் புறம்பாக பல்வேறுபட்ட அலங்கார வடிவமைப்புக்களை இட முடியாது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Best dress for the expecting mother is Abaaya and this more comfortable when compared to other dresses. Non believers of Islam May avoid the head cover.

    ReplyDelete

Powered by Blogger.