Header Ads



முஸ்லிம் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்க, சிங்கள உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு


அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் உள்ள இரண்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மேல் மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட வேளையில் பெரும்பான்மை உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை உறுப்பினரும், அத்தனகல்ல தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான சந்திரசோம சரணலாலின் வேண்டுகோளுக்கு இணங்க, திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு 10,000,000 ரூபாவும், கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு 3,500,000 ரூபாவும் கட்டட நிர்மாணப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிதி ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கூடாகவும், வெளிநாடுகளில் இருந்தும் நிதி வருகிறது, அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என எதிர்ப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு, அத்தனகல ரஜமகா விகாரையின் விகாராதிபதி கடந்த வருடம் 2 கோடி ரூபா பெறுமதியான கட்டடத் தொகுதியொன்றை வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீள்பார்வை

1 comment:

Powered by Blogger.