Header Ads



பௌசிக்கு, பிரதி சபா­நா­யகர் பதவியா..?

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வரும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.பௌஸிக்கு  பிரதி சபா­நா­யகர்  பதவி வழங்­கப்­ப­ட­லா­மெனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்த ஏ.எச்.எம்.பௌஸிக்கு நேற்று இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்சு மறு­சீ­ர­மைப்­பின்­போது எந்த அமைச்­சுப்­ப­த­வி­களும் வழங்­கப்­ப­ட­வில்லை.  ஏற்­க­னவே குறித்த இரா­ஜாங்க அமைச்சுப் பதவி வகிக்கும் அவர் இரா­ஜி­னாமா செய்­ய­வு­மில்லை.

தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய கலந்­து­ரை­யாடல், அரச கரும மொழிகள் அமைச்­ச­ராக மனோ கணே­சனும் பிர­தி­ய­மைச்­ச­ராக அலி ஸாஹிர் மௌலா­னாவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இது­த­விர, கடற்­றொழில் , நீரியல் வள அபி­வி­ருத்தி மற்றும் கிரா­மிய பொரு­ளா­தார அமைச்­ச­ராக நேற்று முன்­தினம் விஜித் விஜ­ய­முனி சொய்சா பத­வி­யேற்­ற­தோடு குறித்த அமைச்சின் இரா­ஜாங்க அமைச்­ச­ராக துலிப் வேதா­ரச்சி மற்றும் பிர­தி­ய­மைச்­ச­ராக அமீர் அலி ஆகியோர் நேற்றுப் பத­வி­யேற்­றனர். இந்­நி­லையில் நல்­லி­ணக்க அமைச்­சிலும் இவ்­வாறு மூன்று அமைச்சர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னரா என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிரதி சபா­நா­யகர் மற்றும் குழுக்­களின் பிரதித் தலைவர் பத­விக்கு ஏ.எச்.எம். பௌஸியின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே, அண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் 24 பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு குறித்த பத­விக்கு கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை நிய­மிக்­கு­மாறு பிர­த­ம­ரிடம் எழுத்­து­மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். எனினும், குறித்த பத­வியை பெற்­றுக்­கொள்ளும் விரும்பம் இல்லையெனவும் அந்தப் பதவியிலிருந்தால் பாராளுமன்றில் குரல் எழுப்பும் சந்தர்ப்பம் இல்லாமல்போய்விடும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Vidivelli

No comments

Powered by Blogger.