May 01, 2018

முஸ்லிம் பாடசாலைகளில், தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா..?


தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது புதிய முதல்வருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்து கொண்டதுடன் தனது கட்சிப் பிரதிநிதியான தமிழர் ஒருவரை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக தெரிவு செய்தமைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் தமிழ்- முஸ்லிம் நல்லுறவு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியும் முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதன்போதே கல்முனை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஹபாயா அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரஸ்தாபித்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஒரு காலத்தில் தமிழ்- முஸ்லிம் இன ஐக்கியத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி போன்ற பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் இது போன்ற விடயங்களில் நேர்மையுடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளானது நலிவடைந்த நிலையிலுள்ள தமிழ்- முஸ்லிம் உறவுக்கு மேலும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளும் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்றும் ஆனந்த சங்கரியிடம் முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார்.

அல்லது முஸ்லிம் ஆசிரியைகளை தமிழ் பாடசாலைகளுக்கோ தமிழ் ஆசிரியைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கோ நியமிப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்- முஸ்லிம் உறவு இன்னும் தூர விலகிச் செல்லுமே தவிர பலமடைய மாட்டாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

4 கருத்துரைகள்:

ஆனந்த சங்கரிக்கு அபாய அணிந்தால் சுப்பராக இருக்கும்.

If Hindu teachers come to Muslim schools with their cultural dress, we Muslims will welcome them. We do respect the culture and their feelings. We are taught in this way. This is what we do these days

ajan antonyraj போன்ற கீழ்தர எண்ணமும் வக்கிர புத்தியும் கொண்ட மட்டரகமானவர்கள் ஆனந்த சங்கரி போன்றவர்களை தூற்றுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

ஒரு சமூகத்தின் ஆடைக் கலாச்சாரம் என்பது காலம், கல்வி, இடம் என்பவற்றால் மாற்றம் பெருவது உலகில் வாழ்ந்த எந்தவொரு சமூகம் கடைசி வரை ஒரே ஆடையில் வாழ்ந்ததில்லை, இப்போதிருக்கும் ஹிந்துக்கள், பொளத்தர்கள், முஸ்லிம்களில் சிலர் என்று ஐரோப்பியரின் ஆடையை அணியவே ஆரம்பித்துள்ளனர், தங்களின் பலங்கால ஆடையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர் இது காலத்தின் கட்டாயம் இவ்வாறுதான் உலக அமைப்பு உள்ளது மனிதன் புதிதானவை ஒவ்வொன்றையும் வரவேற்பதில் ஆர்வம் உள்ளவன். அதனால் இஸ்லாம் ஒரு குறித்த ஆடையைச் சொல்லவில்லை பெண்கள் ஆண்கள் மறைக்கவேண்டிய பகுதிகளை மறைத்துக்கொண்டு அழகான ஆடைகளை அணிவதன் மூலம் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேனுவதற்கு வழிகாட்டுகின்றது.

ஆடைக் குறைப்பை அதிகரித்து அதிக ஒழுக்கச் சீர்கேடுகளை உருவாக்குவதன் மூலம் மனிதன் சாதிக்க வேண்டிய காலத்தில் தன்னிலை மறந்து செயற்படச் செய்யும் சர்வதேச திட்டங்களை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் சிலரது முயற்சியாகவே நான் இதைக் கருதுகின்றேன். எனவே, சமூகங்களும் ஆரோக்கியமான உறவுகளை வழர்த்துக்கொண்டு இதற்கு ஆபத்தான இவர்களைப் போன்ற சிலரை சட்டத்தின் முன் நிறுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

Post a Comment