Header Ads



பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன், விளைவை ஜனாதிபதி அனுபவிக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது செய்ய வேண்டியுள்ள மிகச் சிறந்த நடவடிக்கை,  தேர்தல் ஒன்றை நடாத்தி எமக்கு பொருத்தமான ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான உரிமையைப் பெற்றுத் தருவதாகும் என அல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30)ஆற்றிய உரை குறித்து தேரர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கிராமத்து கவிதை வரிகளின் சுவையை உணர்ந்த ஒருவர் எனவும், தாமரை இலையில் சோறு சாப்பிட முடியுமான ஒருவர் எனவும், குளத்தில் குளிக்கக் கூடிய ஒருவர் எனவும், காவியுடையின் வாசம் அறிந்தவர் எனவும் தேரர் வர்ணித்தார்.

இப்படியான ஒருவர் போய், முட்கரண்டியால் பாற்சோறு  சாப்பிடுகின்ற, “இஸ்ட்ரோ”வைப் பயன்படுத்தி இளநீர் குடிக்கின்ற, கிராமத்துக் கவிதைகளுக்குப் பதிலாக மைக்கல் ஜெக்ஸனின் பாடல்களைக் கேட்கின்ற பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன் விளைவுதான் ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கான காரணம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 

dc

1 comment:

  1. ​தௌிவான இலக்கும் அதனை அடைவதற்கான துய்மையான கடும் உழைப்பும் தியாகமும் இல்லாத ஒருவர் என்பதுதான் தனது முயற்சியின் பயனில்லாத நிலைமை என்பதை சரியாகக் கூறாது வேறு எதையாவது சொல்லிவிட்டுப் போங்க.

    ReplyDelete

Powered by Blogger.