Header Ads



சிவசேனையை விமர்சிப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை


-Dc-

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.

இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம்,
இல 153/3.யூனியன் பிளேஸ்,
கொழும்பு-02.
Operation Office,
Hindu Federation Of Srilanka,
No.153/1 Union Place,
Colombo -02
Email=hindfos@gmail.com
Contact no.0774936997, 0773380835.

கடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மண்ணில் மறவன்புலவு க. சச்சிதானந்தந்தின் தலைமையில் நடைபெற்ற பசுவதைக்கு எதிரான உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடும் எதிர்மறையான விமர்சனக்களம் தொடர்பாகவும் இந்து சம்மேளனத்தின் தேசிய சபை கூடி ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்கின்றது.
இலங்கை வரலாறு முழுவம் இந்துக்களும் பௌத்தர்களும் தத்தமது உண்மையான பாரம்பரிய வரலாற்று மரபுவழிவந்த சுவடுகளையும் பெருமைகளையும் பதிவுசெய்து வந்துள்ளனர்.

அந்த வகையில் பௌத்தர்கள் இலங்கையை பௌத்த பூமியென்றும் இந்துக்கள் இலங்கையை சிவபூமியென்றும் தங்களுக்கே உரிய ஆதாரங்களுடன் நிறுவி வந்துள்ளனர்.எனினும் இந்த நாட்டில் மற்றைய மதத்தினரும் இந்த நாட்டின் மரபுவழிவந்த கலாச்சாரங்களை அனுசரித்து தமது சமயங்களையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவோ பின்பற்றவோ பூரண சுதந்திரம் உண்டு.அந்த வகையில் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ‘பசுக்களை பாதுகாப்போம்’ ,’இலங்கை மண் பௌத்த ,சைவ புண்ணிய பூமி’ என்ற கோசங்கள் இலங்கையானது மற்றைய சமயத்தவர்களுக்கானது அல்ல என்ற பொருள்பட கூறப்பட்டது அல்ல. இந்த மண்ணில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இருபெரும் கீழைத்தேய கலாச்சாரங்கள் உண்டு.அவை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேற்குலக நாடுகளாலும் பல்வேறு உளவு அமைப்புக்களாலும் மோதவிடப்பட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.’இந்த நாட்டின் கலாச்சாரத்தை அனுசரித்து வாழ விருப்பமில்லாதவர்கள் எமது நாட்டைவிட்டு வெளியேறலாம்’என்று ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் அவர்களும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெடன்யாஹு அவர்களும் கூறியபோது மொத்த உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்? காரணம் உண்மைகள் என்றுமே உண்மைகளாகத்தான்தொடரும். அந்தவகையில் சச்சிதானந்தன் அவர்களுடைய கருத்துக்கள் ஒரு சமுதாய பண்பாட்டு கலாச்சாரத்தின் அக்கரையுடன் தொடர்புபட்டது.

அவரது கருத்துக்களை கண்ணியமாகவும் கருத்தியல் ரீதியாகவும் அனுகுவதைவிடுத்து கடும் அச்சுறுத்தும் வகையிலான விமர்சனங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் அடங்களாக வெவ்வேறு தனிநபர்களும் அமைப்புக்களும் வெளியிட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.எனவே நாம் பின்வரும் தீர்மானங்களை எமது உயர்பீடத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி வெளியிடுகின்றோம்.

தீர்மானம் -01
ஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் யாழ்பாண இந்துக்களின் அடையாளமாகவும் ஆன்மீகப் போராளியாகவும் உருவெடுத்துவரும் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குதல்.

தீர்மானம் -02
வடக்கில் மட்டும் எமது அமைப்பைச்சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வதொண்டர்கள் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களாகவுள்ளனர்.மறவன் புலவு க.சச்சிதானந்திற்கு எதிராக எந்தெந்த கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் பேசிவருகின்றனரோ அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிற்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களுக்கெதிராக எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அவர்களைத் தோற்கடித்து இந்து வாக்குவங்கியின் சக்தியை வெளிப்படுத்துவதென்றும் அதற்கு எமது பயிற்சிபெற்ற தொண்டர்களை பயன்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம்-03
மறவன் புலவு க.சச்சிதானந்தத்திற்கு எதிரான மிகமோசமாகவும் நாகரீகத்திற்கு ஒவ்வாத வகையிலும் விமர்சனங்களை வெளியிடும் தனிநபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களது பின்னணி பற்றி ஆராயுமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும் நாசகார செயற்பாடுகள் தடுப்பு பிரிவிற்கும் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானம் -04
மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தீங்கிழைக்கப்படுமானால் அவ்வாறானதொரு விடயத்திற்கு தூண்டியவர்களாக அல்லது அமைதியான சமூகச்சூழலில் நாசகார சக்திகளை தூண்டிவிட்டவர்களாகவோ மற்றும் தேவையற்ற வகையில் வன்முறையான சொற்களை பயன்படுத்தியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு சந்தேக வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வழக்கு பதியப்படும் என்பதுவும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இவற்றை அமுல்படுத்துவதற்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை தேசிய செயற்குழு வழங்குகின்றது.

தேசிய அமைப்பாளர், கௌரவ.பொன் சந்திரபோஸ்.
தேசிய ஆலோசகர், கௌரவ .இராசையா செல்லையா
பொதுச்செயலாளர், கௌரவ.எஸ்.பாலசுப்ரமணியம்
தலைவர், கௌரவ.நாரா.அருண்காந்த்

ஊடகப் பிரிவு, இந்து சம்மேளனம், இலங்கை.

9 comments:

  1. இது இந்திய ரோ நாய்களின் பெயர் பட்டியல் போன்று உள்ளது.

    ReplyDelete
  2. சரி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தாயிற்று இனி படம் எடுத்து ஆடவேண்டியதுதான். இதில் வேறு வாக்கு வங்கி வேறு. அரசியல் செய்பவர்கள் இனி இவர்களின் தாளத்துக்கும் ஆடவேண்டியதுதான் இல்லாவிட்டால் அவர்களின் வீட்டில் ????????????????????

    ReplyDelete
  3. இறைவனே!!!! இந்த லூசுப் பயல்கள்ட இருந்து இந்த நாட்டையும் மக்களையும் காப்பாத்து....

    ReplyDelete
  4. அடேய் கிறுக்கா மறவன்புலவு யாழ்பாணத்தான். அவன் இந்த நாட்டை சொந்த கொண்டாட அவனுக்கு சில தகுதிகளிருந்தாலும் இங்கு கூலி வேலைக்கு இந்தியாவிலிருந்து வந்து இந்திய நாய்களின் மலத்தை உண்ணும் உனக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  5. ஒரு நடு நலை வாதியாக உங்களின் கருத்துக்களை ஏற்க முடியாது
    இந்த நாட்டின் சட்டம் சிறுபான்மை இனத்தினருக்கு இந்த நாட்டில் அவர்கள் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் அவர்களது மத கலாச்சாரத்தை பூரணமாக கடைப்பிடித்து வாழ்வதற்கான முழு உரிமைகளையும் வழங்கியிருக்கின்ற பொழுது அதை விடுத்து பெரும்பாண்மையினரின் மத கலாச்சாரத்தையே சார்ந்து வாழ வேண்டும் என போதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

    அவ்வாறே உங்கள் கருத்தை ஏற்பதாயின் இந்த நாட்டில் பெரும்பான்மையரான சிங்கள இனத்தவரின் பௌத்த மதத்தினையே இந்துக்களும் முஸ்லிம்களும் ஏனையவர்களும் சார்ந்து வாழ வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் 74% வாழ்கின்றனர். 11% வாழும் இந்துக்கள் பெரும்பான்மையினர் என கூறமுடியாது. அவ்வாறு கூறுவதாயின் 7% வாழும் மஸ்லிம்களும் பெரும்பாண்மையினரே...
    இல்லை பாரம்பரிய மரபைத்தான் கடைப்பிடித்து வாழ வேண்டுமென்றால் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியமும் ஏழாம் நூற்றண்டிலிருந்து இருக்கிறது..அவாறில்லையெனில் உங்கள் கூற்றுப்படி பாரம்பரிய மரபு எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
    பெரும்பாண்மையினருக்கே இந்த நாடும் நாட்டு மரபும் சொந்தம், அவர்களையே சார்ந்து வாழவேண்டுமென்றும் சொல்லும் உங்களின் கருத்து 30 வருடங்களாக ஈழ தேசம் வேண்டும் என்று போராடும் போது ஏன் வெளிவரவில்லை?

    பசு வதை கூடாதென்று சொல்லும் நீகங்கள் ஏன் மற்ற விலங்குகள் கொல்லப்படுவதை கருத்திற்கொள்ளவில்லை?
    இந்த நாட்டில் எந்தவொரு விலங்கும் கொல்லப்படக்கூடாது என சட்டம் கொண்டு வர முடியுமா உங்களால்?
    இதிலிருந்து தெரியவில்லையா இது பசுவிற்கான போராட்டம் இல்லை இந்த நாட்டிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டுமென்பதற்கான போராட்டம் என்று...
    உங்கள் மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் முஸ்லிம்கள் மாடு அறுப்பதில்லை அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மட்டுமே அறுக்காறார்கள்.

    மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ரஷ்யாவையும் இஸ்ரேலையும் முன்மாதிரியாகக்கொள்ளும் நீங்கள் மக்களை அறவனைத்து நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக ஏன் கனடாவை முன்மாதிரியாகக்கொள்ள மறுக்கிறீர்கள்?

    இந்த நாட்டில் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு.
    ஒருவரின் கருத்து மற்றவரின் மதத்தையோ உரிமையையோ பாதிக்கும் இடத்து அதற்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கவும் முடியும்.
    இந்த நாட்டில் அணைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழவேண்டுமென்பதற்காகவே இந்த பதிவு..யார் மனதையும் புன்படுத்துவதற்காக இல்லை.

    ReplyDelete
  6. My response: I must resume eating Beef which I stopped eating some time ago, this time treble the quantity.

    ReplyDelete
  7. இதில் என்ன சின்ன வேடிக்கை என்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா கூறுகின்றார்
    வட்க்கு நிர்வாகத்தில் பௌத்த அரசாங்கம் தலையிட முயற்சி செய்வதாக.

    மறுபுறம் சிவசேனா அமைப்பினர் வடக்கில் இந்துக்களும் பௌத்தர்களும் இனைந்து நாட்டை
    பாதுகாக்கப் போறோம் என்றும் என்னடா நடக்குது என்று தெரியவில்லை.

    எது எப்படியோ அடுத்தவர்கள் உணவிலோ உரிமையிலோ மதக் கலாச்சாரத்தினிலோ விமர்சிக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  8. சிவ சேனாக்களே இலங்கை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் உரியநாடு அடுத்தவர்கள் தங்களுடைய இரையாமையை மதிக்க வேண்டும் இல்லையே நாட்டை விட்டு வேளியேர வேண்டும் என்றும் இதைத்தான் ரஸ்யாவும் இஸ்ரேலும் கூறுகின்றது என்றும்.

    சைனாவும்,பிரான்ஸ்,போன்ற மேற்கத்திய நாடுகளும் அதைத்தான் சொல்கின்றது காரணம்
    மத சார்பற்ற நாடுகள் பிரான்ஸில் யாரும் பாடசாலைகளில் கல்வி கற்காலம் ஆனால் மத சார்புகள் இருக்கக்கூடாது அப்படி மத சார்புதான் வேண்டும் என்றால் நாட்டை விட்டு வேளியேற்றுங்கள் என்று கூறுகின்றார்கள் அது அவர்களின் யாப்பு விதிப்படி யாப்பை மீரக் கூடாது.

    ரஸ்யாவை எடுத்துக் கொள்ளப் போனால் கம்யூனிஸ் நாடு அங்கும் மத சார்பற்ற நாடு அதைத்தான் அந்த அரசாங்கத்தின் யாப்பும் கூறுகின்றது.

    இஸ்ரவேல் என்ற ஒரு நாடே இல்லை என்று சொல்லும் பொழுது அவங்கலை எப்படி உதாரணம் காட்டுவார்கள் .

    இலங்கையை எடுத்துக் கொள்ளப் போனால் இல்ங்கை யாப்பு சொல்கின்றது இல்ங்கை பௌத்த நாடு இங்கு இந்து,முஸ்லிம்,கிறிஸ்டியன்,பேகர் எல்லோரும் வாலலாம் என்று அப்படிப்பார்த்தால் இல்ங்கை யாப்பின் படி நாட்டை விட்டு வேளியேறவேண்டியவர்கள்
    முஸ்லிம்கள் அல்ல(???) முஸ்லிம்கள் நாட்டுக்கும் நாட்டின்ட யாப்புக்கும் எதிரா ஆயுதம் ஏந்தி போராடினார்களா? உங்கலைப் போன்ற கை கூளிகளினால் கேவளப்படுவது நல்ல இந்து சமயத்தவர்களும் தியாகிகளும்.


    ReplyDelete
  9. Give respect and take respect. Hindu religion no matter for us if anyone against Muslim we will teach you very good lesson. Dont think that Muslims are coward. we are born to die but you are born to live.

    ReplyDelete

Powered by Blogger.