Header Ads



இலங்கை தலைகுனிய லஞ்சமும், ஊழலுமே காரணம்

லஞ்சம், ஊழல் போன்ற செயற்பாடுகளின் காரணமாக இலங்கை சர்வதேச மட்டத்தில் தலைகுனிய நேர்ந்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல்களை தடுப்பதற்கான தேசிய செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்று நேற்றைய தினம் காலியில் நடைபெற்றது.

காலி, பொல்அதுமோதர பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத்தின் ஏராளமான அரச அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகே, தற்போதைய நிலையில் இலங்கையில் தாதிமார்களுக்கு எதிராக மட்டுமே இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.

இலஞ்சம் பெற்றுக் கொள்வதன் மூலமாக ஒருசிலர் பெருந்தொகைப் பணத்தை சேகரித்துக் கொள்ள நாட்டம் கொள்கின்றனர். அவ்வாறு சேர்க்கும் பணத்தைக் கொண்டு என்னதான் செய்யமுடியும்? அதனை எங்கு வைத்துக் கொள்ளப் போகின்றார்கள்?

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நமது நாடு சர்வதேச ரீதியில் தலைகுனிவை எதிர்கொண்டுள்ளது என்றும் நெவில் குருகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Neville Guruge was an Ex-Police officer, & very honest bureaucrat thru'out his service period. As he's known to be Mr.Clean & fair, he's approppriate for his representation.

    ReplyDelete
  2. எல்லாவற்றையும்விட அநீதி தலைவிரித்து ஆடுகிறது. எங்கு பார்த்தாலும் அநீதியான தீர்ப்புக்கள், சட்டங்கள், சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு வேறு சட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.