Header Ads



"இனவாதம் பேசும் அனைத்து, தரப்பினருக்கும் ஒரு பாடம்"

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு.

எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள்.

ஒருவருக்கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் நடக்காது” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தென் இலங்கையில் பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளுக்கு நினைவு தினம் நடப்பதற்காக எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் உருவாகியிருந்தன.

இந்த நிலையில் குமார் சங்கக்காரவின் குறித்த கருத்தானது இனவாதம் பேசும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கண்டி கலவரத்தின்போதும் ஒருநல்ல தேசப்பற்றாளனென்பதை இவர்வெளியிட்ட வீடியோ நிரூபித்தது.

    ReplyDelete
  2. Bro you are the best leader to our country you can do more for srilanka. We trust you because while playing your show yourself and your behaviour. Pls sanga u can build our beautiful country

    ReplyDelete
  3. Bro I will vote for you , you are the true leader

    ReplyDelete

Powered by Blogger.