Header Ads



என் உயிருள்ளவரை, அனுமதிக்க மாட்டேன் - யாழ் மாநகர உறுப்பினர் நிலாம் சபதம்

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைப்பதற்கு   பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை  சனிக்கிழமை (12) காலை 8 மணிக்கு மேற்கொண்டவேளை அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவரது கருத்தில்

எமது முஸ்லீம் வட்டாரத்தில்  ஜின்னா வீதியில் திடிரென நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படுவதாக மககள் என்னிடம் முறையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நான்  இந்த விடயம் பாராதூரமானது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து எனது ஆதங்கத்தை தெரிவித்தேன்.அத்துடன் குறித்த ஹோட்டல் அமைக்கப்படுவது முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம்.அது மாத்திரமன்றி பள்ளிவாசல்கள் அருகில் பல இருக்கின்றன.300 மீற்றருக்கு யாழ் ஒஸ்மானியா கல்லூரி கதிஸா பெண்கள் பாடசாலை  கூட இருக்கின்றது.எனவே இவ்வாறான ஹோட்டல்கள் பொது இடங்கள் இருக்கின்ற இடங்களில் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது.தற்போது எமது மாநகர சபை மற்றும் எனது சக உறுப்பினர்கள் போதைப்பொருளை கட்டுப்படுத்தல் தொடர்பாக அக்கறை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான ஹோட்டல்கள் எமது கலாச்சாரத்தை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள எமது வாழ்வாதாரம் பாதுகாக்க என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இதனால் எமது பகுதியில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என கூற விரும்புகின்ன்றென்.தற்போது  யாழ் மாநகர சபையின் கல்வி  விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எனக்கு நிறைய பொறுப்பக்கள் இருக்கின்றது.

இதன் மூலம் யாழ் மக்களுக்கு சிறந்த கல்வித் திட்டங்களையும் இளைஞர்களுக்கான விளையாட்டுக்கான சகல வசதிகளையும் மேம்படுத்தி இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.குறித்த ஹோட்டல்  தொடர்பாக முதலமைச்சர் யாழ் கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா கிளை க்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளேன். என மேலம் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. போர் முடிந்த பிட்பாடு பாசிக்குடா மற்றும் நிலாவெளி பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களை நட்சத்திர ஓட்டல் கட்டுவதாகக இழப்பீடு எதுவுமின்றி அப்புறப்படுத்தினார்கள். இந்த திடடம் அம்மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் அமைச்சர்களாலே அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது தமிழர்களுக்கு எதிராக இந்த முஸ்லீம் அடிப்படைவாதம் செயல்பட்டது நாமொன்றும் அறியாதவர்கள் அல்ல. இப்பொழுது உங்களுடைய உப்பு சப்பு இல்லாத போராட்டங்கள் மூலம் ஒன்றும் சாதிக்கமுடியாது. சட்ட ரீதியாக கட்ட முடியுமென்றால் அங்கே யாராலும் ஓட்டல் கட்ட முடியும். இலங்கை சட்ட பிரகாரம் அபாய அணிந்து பாடசாலை வர முயுமென்றால் அதே சட்ட பிரகாரம் கட்டவும் முடியும். நீங்கள் இறந்து மறுபிறவி எடுத்தாலும் உங்களால் தடுக்க முடியாது. சட்டத்தின் முன் யாவரும் சமனே முஸ்லிம்களுக்கு என இங்கே தனி சட்டம் இல்லை.

    ReplyDelete
  2. சகோதரர் அனுசாத் சந்திரபோல் உங்கன்ட கதையப்பார்த்தால் முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போட்ட கதையாக இருக்கின்றது ஹபாயா,வேறு கலாச்சாரம் வேறு ஹபாயா என்பது மார்க்கம் சம்மந்தப்பட்ட விடயம் அனாச்சாரம் என்பது சமுகத்தின் சீர்கேடு அதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்.

    அடுத்தவிடயம் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் ஒன்று கேட்கவில்லை ஐனநாயக நாட்டில் சகலரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதுதான்.அப்படிபார்க்கபோனால் தனிநாடு கேட்டு
    ஏன்போராடினிர்கள் அப்போ நீங்கள் உங்களுக்கு ஒரு சட்டம் வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு சட்ட்ம் இருக்ககூடாது என்றதை கூறவாரிர்கள?

    ReplyDelete
  3. சகோதரர் அனுசாத் சந்திரபோல் உங்கன்ட கதையப்பார்த்தால் முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போட்ட கதையாக இருக்கின்றது ஹபாயா,வேறு கலாச்சாரம் வேறு ஹபாயா என்பது மார்க்கம் சம்மந்தப்பட்ட விடயம் அனாச்சாரம் என்பது சமுகத்தின் சீர்கேடு அதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்.

    அடுத்தவிடயம் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் ஒன்று கேட்கவில்லை ஐனநாயக நாட்டில் சகலரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதுதான்.அப்படிபார்க்கபோனால் தனிநாடு கேட்டு
    ஏன்போராடினிர்கள் அப்போ நீங்கள் உங்களுக்கு ஒரு சட்டம் வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு சட்ட்ம் இருக்ககூடாது என்றதை கூறவாரிர்கள?

    ReplyDelete
  4. @Meera Lebbe Mohammed Javamil,
    இந்த நாட்டிலே சில வேளைகளில் சட்டங்களும் கடமையை செய்வதில்லை என நாங்கள் போராடும் பொழுது தான் நீங்கள் அதே சட்டத்தின் கடமையை செய்யாமல் தடுத்தவர்கள் பக்கம் இருந்தீர்கள். உங்களுக்கு தெரியாதா எது நீதி என்று. ஆனால் உங்களுக்கென வரும்போது நாங்கள் அவர்கள் சார்பில் இருந்தால் என்ன குறைந்துவிடப்போகின்றது.

    ReplyDelete
  5. @Anusath Chandrabal.

    இலங்கையில் சட்டம் சரியாக செய்வதில்லை என்று கூறும் நீங்கள் ஏன் இப்படியான இனவாதமான பேச்சுக்கள்.முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கெதிராக ஒருபோதும் செயல்பட்டதில்லை செயல்படவும் மாட்டார்கள் மாராக LTTE க்கு எதிராக செயல்பட்டுருப்பார்கள் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இன்னும் சொல்லப்போனால்
    1915 கண்டியில் ஆரம்பித்த சிங்கள முஸ்லிம்களின் இனகலவரத்தின்போது முஸ்லிம்கலை
    அன்று காட்டிக்குடுத்து பல லட்ச முஸ்லிம்கலை கொலை செய்வதற்கு துனையாக இருந்த
    சேர் பொன் ராமநாதன் போன்றவர்கள்தான் ஆரம்பித்து வைத்தார்கள்.சரித்திரத்தை திருப்பி படியுங்கள். அன்றும் துன்பவியல் சம்பவம் என்று முடித்தார்கள் ,90 ம் ஆண்டு புலிகலால் வெளியேற்றியதையும்,துன்பவியல் சம்பவம் என்று கூறினார்கள்.இதைவிடவா நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பெரிது.
    எது எப்படி இருந்தாலும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை படாமல் ஒரு செங்கல்லை கூட இந்த
    அரசாங்கத்திடம் இருந்து பெரமுடியாது.

    ReplyDelete
  6. எங்களுக்கென தனியான சட்டம் உள்ளது ஹோமாவில் இருந்தால் மாத்திரமே தெரியாமல்போகும். போதைப்போருள், பெண்கள் விற்க தமிழ் ஏரியாக்களில் இடம்பாருங்கள்.பாசிக்குடா மாத்திரமல்ல எங்காயினும் எங்களை தொல்லைசெய்தால் கொல் லைக்கு அனுப்புவோம்.

    ReplyDelete
  7. @Imran, ஆனால், இவைகளை பெரும்பாலும் இலங்கையில் செய்பவர்கள் முஸ்லிம்கள் தானே.

    ReplyDelete

Powered by Blogger.