Header Ads



இலங்கை நாணயத் தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமரின் இல்லத்திலிருந்து மீட்பு


மலேசியாவின் முன்னாள் பிரதமர் நாஜீப் ரசாக்கின் இல்லமொன்றிலிருந்து பெருந்தொகை இலங்கைப் பணம் மீட்கப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதமரின் இல்லங்கள் அனைத்தும் அண்மைiயில் மலேசிய காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது 2.87 மில்லியன் ரூபா இலங்கை நாணயத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. அதி சொகுசு கைக்கடிகாரங்கள், தங்க ஆபரணங்கள், ஆடம்பர கைப்பைகள், பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர். நிதிச் சலவை சட்டத்தின் கீழ் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

1 comment:

  1. இலங்கையின் அடுத்த தலைவரைக் தெரிவு செய்யும் நிலையில் உள்ள நமக்கு, மதிப்புக்குரிய மஹதீர் முஹம்மது அவர்களிடம் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளில் மிக  முக்கியமானது 'சட்டம் ஒழுங்கை சரியாக அமுலாக்கம் செய்வது' என்பது.

    தென் ஆசியாவின் அண்மைய அரசியலில்,  இதே காரணத்துக்காக தன் பதவிக்காலம் முடிய இரு வருடங்களுக்கு முன்னதாகவே ஒருவர்  அகற்றப்படுகிறார். 

    இன்னொருவர் இதே காரணத்துக்காக  மீண்டும் பெருமையுடன் தன் 92 வது வயதிலும் இணைக்கப்படுகிறார்!

    இலங்கையின் சட்டம் ஒழுங்குக்காக அதிகம் குரல் கொடுத்துக் கொண்டும், ஊழல்களுக்கு எதிராகப்  போராடிக்கொண்டும், கொடுக்கப்பட்ட  வாய்ப்புக்களை சரியாகச் செய்து  நிரூபித்துக் கொண்டும் இருக்கும் கட்சி ஒன்றின் தலைவரை, இலங்கையர் தம் அடுத்த தலைவராக, போட்டிகளுக்கு அப்பால் இருந்து தெளிவாக இனங்காண்பது கடினம் அல்ல என்பது என் கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.