Header Ads



இந்த அரசாங்கம் நீடித்தால், மக்களின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும் - கீதா

இலங்கை மக்களின் ஆயுள் நீண்ட காலத்திற்கு நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீடித்தால் அப்பாவி மக்களின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும்.

இலஞ்ச, ஊழல் மோசடி, களவுகள் போன்றனவற்றுடன் அரசாளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் சிறந்த பாடத்தை கற்பிப்பார்கள் அது நிச்சயம்.

எரிவாயுவின் விலையும், பால் மாவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மக்கள் நலன் குறித்து எவ்வித கரிசனையும் கிடையாது. நாட்டில் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

பொருட்களின் விலையை உயர்த்தி எதிர்வரும் நாட்களில் ஆட்சியை முன்னெடுப்பது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Well said the truth Ms. Gee that.
    It's an inefficient Government and the public of its have been well disappointed in the name good cooperative government.
    They mistake increasing the prices is the way to develop the country. Nonsense uneducated group of people are in the throne. It is the last chance for them and they won't come back in the next two times.
    If JVP gets ready, it will have a better opportunity in the parliamentary and Presidential elections.

    ReplyDelete

Powered by Blogger.