Header Ads



'அழுவதே விதியென்றால்'


-வ.ஜ.ச.ஜெயபாலன்-

1990 ஆம் வருடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிகளினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டதை அடுத்து அதன் 5 ஆவது வருடத்தில் கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் அழுதழுது வாசித்த கவிதையை இங்கு மீள்பிரசும் செய்கிறோம்

பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு.
தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடங்கள் இரண்டாச்சு.
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா?


எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக் களர்வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றம் ஏதும் அறியா இக்
குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்.


இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா?
இதுதானா தலைவர்களின் வாக்குறுதி  முத்திரையா?
ஆறாம் வருடமும் இவர்கள்
அழுவதே விதியென்றால்


அழியட்டும் இந் நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்

2 comments:

  1. ஆயிரம் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத அற்புத வரிகள் வாழ்த்துக்கள் நண்பா வ.ஜ.ச.ஜெயபாலன்.

    ReplyDelete
  2. Great sir your great human being

    ReplyDelete

Powered by Blogger.