Header Ads



ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது, இலங்கை கிரிக்கெட் அணி - அல்ஜசீராவில் வெளியாகவுள்ள வீடியோ

காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின்  சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள  விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார்.

முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர்.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடும் மும்பாயை சேர்ந்த ரொபின் மொறிஸ்,இந்திய வர்த்தகர் கௌரவ் ராஜ்குமார், காலி மைதானத்தின் உதவி முகாமையாளர் தரங்க இன்டிக ஆகியோர் உரையாடுவதை இரகசிய கமராக்கள் மூலம் குறிப்பிட்ட பத்திரிகையாளர்  பதிவு செய்துள்ளார்.

தரிண்டு மென்டிஸ் என்ற வீரர் ஒருவரும் இதில் பங்கெடுத்துள்ளார்.

ஐசிசி இது குறித்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளது  அதன் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரி அலெக்ஸ் மார்சல் தற்போது இது குjறித்து தீவிரமாக ஆராயப்போவதாக  தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. your topic is wrong, please refer to Al Jazeera News, SL Cricket did not involve, but an Indian and groundsman. SL Cricket team has NO idea of it. The betting guys has nothing to do with SL/IND/AUS/ENG but it is all about their betting methods and what they bet for.

    Therefore please do not divert the news
    https://www.aljazeera.com/news/2018/05/exclusive-cricket-match-fixers-caught-act-sri-lanka-180525191333678.html

    ReplyDelete

Powered by Blogger.