Header Ads



காய்ச்சல் என்றால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்

தென் மாகாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென தென்மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவிவரும் வைரஸ் நோய் காரணமாகவே மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந் நிலையில் இந்த நோய் சம்பந்தமாக ஆராய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு, நாளை அங்கு விஜயம் செய்யவுள்ளது.  

இந்த குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் குறித்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.