Header Ads



ஜனாதிபதியாகும் தகுதி, கோதாபாயவுக்கு உண்டு - ஞானசார தேரர்

நாட்டில் தற்போதுள்ள ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிகள் 2020 ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“அரசியல் மற்றும் சமூக ரீதியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடனே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஏற்படுத்தப்பட்டது. எனினும், சில அடிமட்டக் குறைப்பாடுகள் காரணமாக அதன் திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது விரக்தி கொண்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருத்தல் வேண்டும். இந் நிலையில் தற்போது நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவு கூட்டு எதிரணியினருக்கே உள்ளது.

2020ம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பொது எதிரணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்சவை போட்டியிட வைப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கட்சியின் பெரும்பான்மை ஆதரவும், நாட்டை மீண்டும் ஒருமைப்படுத்தும் அரசியல் தகுதியும் கோதாபாய ராஜபக்சவுக்கு உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இந்த காபிர் ஷைத்தான்களின் சூழ்ச்சியில் இருந்து இந்த நாட்டு மக்களையும், இந்த நாட்டையும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் என ரமலான் மாதங்களில் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  2. it is proved now that who create and who was feeding this rascals.

    ReplyDelete

Powered by Blogger.