May 31, 2018

இலங்கை வரலாற்றில், முஸ்லிம் அரசன்

-A.J.M.Nilaam-

பண்­டைய சிங்­கள வர­லாற்று நூல்­களில் மகா­வம்சம், ராஜா­வ­லிய, கிரா சந்­தே­சய, குரு­நாகல் விஸ்­த­ரய, தீப­வம்சம், பன்­சிய பனஸ் ஜாதக பொத்த, சமத்­தயா சாதிகா, செல­லி­ஹினி சந்­தே­சிய, பரவி சந்­தே­சய, விசுத்­தி­மக்க சச­தா­வத்த, குத்­தி­ல­கா­விய, தம்­பியா அட்­டுவா ஹட்­டப்­ப­தய, தர்ம பீதி­காவ எனும் நூல்கள் பிர­சித்­த­மா­ன­வை­யாகும். இவற்றில் மகா­வம்­சமும், குரு­நா­கல விஸ்­த­ர­ய­வுமே இலங்­கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்­சி­பு­ரிந்­தது பற்றி தெளி­வான விப­ரங்­களைக் குறிப்­பி­டு­கின்­றன. இவ­ரது தலை­ந­கரம் “எது­கல்­புர” என அன்று அழைக்­கப்­பட்ட தற்­போ­தைய குரு­நா­க­லை­யாகும்.

இங்கு அத்­தா­கல (யானைக் கற்­பாறை), இப்­பா­கல (ஆமைக் கற்­பாறை), குரு­மி­ன­கல (வண்­டு­கற்­பாறை), கிம்­பு­லா­கல (முதலைக் கற்­பாறை), எலு­வா­கல ( வெள்­ளாட்டுக் கற்­பாறை), ஆந்­தா­கல (விலாங்கு மீன் கற்­பாறை), லுனு­கெட்­ட­கல (உப்­புக்­கட்டி கற்­பாறை), கோனி­கல (கோனிப்பைக் கற்­பாறை) என 8 கற்­பா­றைகள் இருக்­கின்­றன. இவற்றில் யானைக் கற்­பா­றையே பெரிது என்­பதால் குரு­நா­க­லையின் பழைய பெயர் எது­கல்­புர என்றே  அமைந்­தி­ருந்­தது. ஆந்­தா­கல ஒரு பக்கம் இப்­பா­க­லவும் குரு­மினி கலவும் மறு­பக்கம் மேட்டு நிலப்­ப­ரப்­பாக பமு­னு­கெ­தர நடுவில் குரு­நா­க­ல­வெவ ஏரி ஆகி­யவை காணப்­பட்­டன. தண்ணீர் வச­தியை வழங்­கிய அந்த ஏரி சதுப்பு நிறப் படி­க­ளோடும். நீரா­டு­து­றை­க­ளோடும் கவர்ச்­சி­யாகக் காணப்­பட்­டது என்­கி­றார்கள்.
அங்கு ஆட்­சி­பு­ரிந்த முஸ்லிம் அரசன் யார் எனப்­பார்ப்போம். 1273 ஆம் ஆண்டு முதல் 1284 ஆம் ஆண்டு வரை 11 ஆண்­டு­காலம் வன்­னியின் குரு­நில மன்­னர்­களைத் தோற்­க­டித்து தம்­ப­தெ­னி­யாவைத் தலை­ந­க­ராக்கி முதலாம் புவ­னே­க­பாகு ஆட்சி புரிந்த போதுதான், வன்னிக் குறு­நில மன்­னர்­களின் சார்­பாக மதுரை மன்னன் குல­சே­கர பாண்­டி­யனின் படை தம்­ப­தெ­னி­யாவை ஆக்­கி­ர­மித்­தது.  உடனே யாப்­ப­ஹு­வைக்குத் தனது தலை­ந­கரை மாற்­றிய முதலாம் புவ­னே­க­பாகு யெம­னு­டனும் எகிப்­து­டனும் தொடர்பு கொண்டான்.

அப்­போது யெமன் நாட்டு அர­ச­ராக 1299 ஆம் ஆண்டு முதல் 1295 ஆம் ஆண்டு வரை சுல்தான் யூசுப் இப்­னு­உமர் ஏடனைத் தலை­ந­க­ராக்கி ஆட்­சி­பு­ரிந்து வந்தார். முதலாம் புவ­னே­க­பா­குவின் தூதுக்­குழு அவரைக் காணச்­சென்­றது.

யெமன் நாட்டு சரித்­திரக் குறிப்­பேடு முதலாம் புவ­னே­க­பா­குவை அபூ­நெக்­க­பா­லெ­பாபாஹ் என்­கி­றது. இது புவ­னே­க­பாகு யாப்­ப­க­ஹுவ எனும் சிங்­களச் சொற்­களின் அரபுத் திரி­பாகும். அப்­போது எகிப்­துக்கும் கூட ஒரு தூதுக்­குழு சென்றே இருந்­தது. அந்த பதி­விலும் அபூ­நெக்­க­பா­லெ­பாபாஹ் என்றே இருக்­கி­றது. அல்ஹாஜ் அபூ­உத்­மானின் தலை­மை­யி­லான குழு இலங்கைக் கப்­பலில் எகிப்­துக்­குப்போய் ஹோமோஸ் எனும் துறை­மு­கத்தில் இறங்கி எகிப்தில் 10 நாட்கள் தங்­கி­ய­தாக எகிப்­தியப் பதி­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

வர­லாற்­றா­சி­ரியர் எச்.டப்­ளியூ.கொட்­ரிங்டன் இது பற்றி குறிப்­பி­டு­கையில், இலங்கை அரசின் தூதுவர் மாளி­கைக்கு வந்து ஒரு கடி­தத்தைக் கொடுத்து எங்கள் மன்­னனே கைப்­பட எழு­தி­யது இது என்றார். அந்த கடிதம் தங்கப் பெட்­டியில் வைக்­கப்­பட்டு தூஸ் போன்ற ஒரு பொருளால் சுருட்­டப்­பட்­டி­ருந்­தது. தென்னை மரப்­பட்­டை­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்­டதே தூஸ் என்­கி­றார்கள்.
அப்­போது அந்த கடி­தத்தை வாசிக்க யாருமே எகிப்­திய அர­ச­னுக்குக் கிடைக்­க­வில்லை. எனவே அதன் உள்­ள­டக்­கத்தை வாசிக்­கும்­படி இலங்கைத் தூது­வ­ரி­டமே அவர் கேட்டுக் கொண்டார். அதனால் எகிப்தில் அர­ச­னுக்கு வாசிக்கும் சிரமம் குறைந்­தது.

* இலங்­கையே எகிப்து எகிப்தே இலங்கை. எனது தூதுவர் இலங்­கைக்குத் திரும்­பு­கையில் அவ­ரோடு ஒரு எகிப்­தியத் தூதரும் அனுப்­பப்­பட வேண்டும் என்றே விரும்­பு­கின்றேன்.

* என்­னிடம் பிர­மிக்க வைக்கும் அதிக அளவு முத்­துக்­களும் பல­ரக மாணிக்­கங்­களும் உள்­ளன.

* கப்­பல்­களும் யானை­களும் மஸ்லின் துணி­களும் ஏனைய பொருட்­களும் உள்­ளன.

நேர்­மை­யான வியா­பா­ரி­களால் என்­னி­ட­மி­ருந்து பசும் மரமும் கறு­வா­வும உங்­க­ளி­டம்­கொண்டு வரப்­படும் (வண்ணப் பொருட்கள் செய்­யப்­ப­யன்­படும் பிரேசில் மரமே பசும் மர­மாகும்).

* எல்லா வகை வியா­பாரப் பொருட்­களும் எம்­மிடம் உண்டு.

* எமது நாட்டில் வளரும் ஒரு வகை மரத்தால் ஈட்­டி­களைத் தயா­ரிக்­கலாம்.

* வரு­டாந்தம் 20 கப்­பல்­களை நீங்கள் என்­னிடம் கேட்­டாலும் தருவேன்.

* உங்கள் நாட்டு வியா­பா­ரிகள் எனது அர­சோடு விரும்­பி­ய­வாறு வர்த்­தகம் புரி­யலாம்.

* யெமன் நாட்டு அரச தூதுவர் யெம­னுக்­காக என்­னோடு தொடர்பு கொள்ள வந்த போதும் நான் உங்கள் மீது வைத்­தி­ருக்கும் அபி­மானம் கார­ண­மாக அவரைத் திருப்­பி­ய­னுப்பி விட்டேன்.

* என்­னிடம் 27 மாளி­கைகள் உள்­ளன. அவற்றின் பொக்­கி­ஷங்கள் பல­வகை மாணிக்­கங்­க­ளாலும் நிரம்­பி­யுள்­ளன.

* எனது அதி­கா­ரத்­துக்­குட்­பட்டே முத்­துக்­கு­ளிப்பும் இருக்­கி­றது. இதனால் கிடைக்கும் எல்லா முத்­துக்­களும் எனக்கே சொந்தம். என்­றெல்லாம் அக்­க­டி­தத்தில் இருந்­தன என்­கிறார். அதைக் கேட்ட எகிப்­திய சுல்தான், அபூ உத்­மா­னுக்கு கௌரவமளித்­த­தோடு முதலாம் புவ­னே­க­பா­கு­வுக்­கென ஒரு கடி­தத்­தையும் கைய­ளித்தார்.
எகிப்தின் வலிமை கார­ண­மா­கத்தான் முதலாம் புவ­னே­க­பாகு யெமனை மதிப்­பி­றக்கம் செய்து எழு­தி­யி­ருக்க வேண்டும். இவ்­வாறு அரபு நாடு­க­ளோடு முதலாம் புவ­னே­க­பாகு தொடர்பு கொள்­வதைக் கேள்­விப்­பட்­டதும் மதுரை மன்னன் குல­சே­கர பாண்­டியன் உடனே பெரும் படையை இலங்­கைக்கு அனுப்பி வைத்தார். காரணம், டில்­லியில் அலா­வுத்தீன் கில்­ஜியின் ஆட்சி இருக்­கையில் இலங்­கையில் முஸ்லிம் நாடு­களின் தலை­யீடு இருப்­பது ஆபத்து என அவர் கரு­தி­ய­தே­யாகும். யாழ்ப்­பாண சங்­கிலி மன்­னனின் படை அதற்கு உத­வி­ய­ளித்து யாப்­ப­ஹு­வவைக் கைப்­பற்றச் செய்து புனித தந்­தத்தை மது­ரைக்கு எடுத்­துப்போய்  குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கைய­ளிக்கச் செய்­தது. அப்­போது புனி­த ­தந்­தத்தை வைத்­தி­ருப்­போனே அரசன் என சிங்­கள மக்கள் நம்­பி­யதால் 1284 ஆம் ஆண்டு முதல் 1302 ஆம் ஆண்டு வரை 18 வருட காலம் இலங்­கையை மதுரை பாண்­டிய நாடே ஆட்சி புரிந்­தி­ருக்­கி­றது.

ஆக, தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கையைத் தற்­காத்துக் கொள்­ளவே அப்­போது சிங்­கள மன்னன் முஸ்­லிம்­க­ளுக்கு வரி செலுத்­தவும் செல்­வங்­களை வழங்­கவும் முன்­வந்­தி­ருப்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. அதுபோல் முஸ்­லிம்­க­ளுக்கும் அஞ்­சியே தமி­ழர்கள் இலங்­கையைக் கைப்­பற்­றி­யதும் தெரி­கி­றது. அப்­போது டில்­லியின் சுல்தான் அலா­வுத்தீன் கில்­ஜியின் தள­ப­தி­யான மாலிக்­கபூர் பாண்­டிய நாட்­டுக்குப் படை­யெ­டுத்து வரப்­போ­வதைக் கேள்­விப்­பட்ட குல­சே­கர பாண்­டி­ய­னுக்குத் தனது நாட்டின் சுய­பா­து­காப்­புக்­காக இலங்­கை­யி­லி­ருந்த தனது படையை மீளப்­பெ­று­வதைத் தவிர வேறு வழி­யி­ருக்­க­வில்லை.
எனினும் குல­சே­கர பாண்­டியன் நிபந்­த­னைகள் விதித்தான். இந்­நி­லை­யைத்தான் மூன்றாம் பராக்­கி­ர­ம­பாகு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கீழ்ப்­ப­டி­வ­தா­கவும் வரி செலுத்­து­வ­தா­கவும் அவ­ரோடு போர் செய்­வ­தில்லை எனவும் சத்­தியம் செய்து தந்­தத்தைக் கையேற்று இறை­மையை மீட்டான். எனினும் அந்த இறைமை முழு­மை­யா­ன­தாக அமை­ய­வில்லை. 8 ஆண்­டுகள் நீடித்த அந்த பொம்மை அரசை சிங்­கள மக்கள் வெறுத்­தனர்.

மூன்றாம் பராக்­கி­ர­ம­பா­குவால் குல­சே­கர பாண்­டி­யனின் விருப்பை மீறி நடக்க முடி­யா­தி­ருந்­ததும் வரி செலுத்­தப்­பட்­டதும் அதற்குக் கார­ணங்­க­ளாக அமைந்­தன. இந்­நி­லை­யி­லேயே இரண்டாம் புவ­னே­க­பாகு அந்த அடி­மைத்­துவ அரசைக் கைப்­பற்­றினான். இவ­னது அரசு 1310 ஆம் ஆண்டு முதல் 1325 ஆம் ஆண்டு வரை 15 வரு­டங்கள் தொடர்ந்­தது. 1325 ஆம் ஆண்டு முதல்1328 ஆம் ஆண்டு வரை மூன்று வரு­ட­காலம் இவ­ரது மகன் வஸ்­து­ஹிமி ராஜ­கலே பண்­டார ஆட்­சி­பு­ரிந்­தி­ருக்­கிறார்.

அப்­போது மாலிக்­கபூர் குல­சே­கர பாண்­டி­யனைத் தோற்­க­டித்­தி­ருந்­த­தா­லேயே மூன்றாம் பராக்­கி­ரம பாகுவை இரண்டாம் புவ­னே­க­பா­குவால் எளி­தாகத் தோற்­க­டிக்க முடிந்­தது. இன்றேல் குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கட்­டுப்­பட்டு இலங்­கை­ தொ­டர்ந்தும் இருந்­தி­ருக்கும் எனலாம். ஆக, மூன்றாம் பராக்­கி­ர­ம­பா­கு­வி­ட­மி­ருந்து அடி­மைத்­துவ இலங்கை அர­சாட்­சியை மீட்ட இரண்டாம் புவ­னே­க­பா­குவின் மகனே வஸ்­து­ஹிமி ராஜ­கு­மார எனும் மன்­ன­னாவார். 
குரு­நா­கல விஸ்­த­ரய இவரைப் பற்றிக் குறிப்­பி­டு­கையில், இரண்டாம் புவ­னே­க­பா­கு­வுக்கும் அஸ்­வத்தும் கிரா­மத்தில் பிறந்த அழ­கிய சோனகப் பெண்­ணுக்கும் பிறந்த மகனே இவர் என்­கி­றது. எனினும் இவரை ஒரு முஸ்லிம் என அது குறிப்­பி­ட­வில்லை. தாய் சோனகப் பெண் என மட்­டுமே கூறு­கி­றது.

சிங்­கள மக்­களின் முதன்மை வர­லாற்று நூலான மகா­வம்­சமே வஸ்­து­ஹிமி என இவரைக் குறிப்­பிட்டு இஸ்­லாத்தை தழு­வி­யவர் எனவும் கூறு­கி­றது. உண்­மை­யையும் நிகழ்­வு­க­ளையும் மறுப்­பதைக் கண்டு நான் சீற்­ற­மு­று­கிறேன். உண்மை உள்­ள­ப­டியே மகத்­தா­னது. வாசி­யுங்கள், அதி­ச­யப்­ப­டுங்கள் என வர­லாற்­றா­சி­ரியர் கிப்பன் கூறு­கிறார். அந்த வகையில் குரு­நா­கல விஸ்­த­ர­யவும் மகா­வம்­சமும் காய்தல் – உவத்­த­லின்றி உள்­ளதை உள்­ள­ப­டியே வெளி­யிட்­டி­ருந்­தி­ருக்­கின்­றன. அதனால் தான் பிற்­கால சிங்­கள சரித்­திர எழுத்­தா­ளர்கள் பலர் இதை மறைக்க முயற்சி எடு­ப­டாமற் போயிற்று.

அப்­போது குல­சே­கர பாண்­டியன் இலங்­கையைக் கைப்­பற்றக் காரணம் முதலாம் புவ­னே­க­பாகு யெம­னோடும். எகிப்­தோடும் தொடர்பு கொள்ள முயன்­ற­தே­யாகும். குல­சே­க­ரனின் ஆக்­கி­ர­மிப்­புக்கு முன் முதலாம் புவ­னே­க­பாகு யெம­னுக்கு ஒரு தூதுக்­கு­ழுவை அனுப்பி உத­வி­கோ­ரி­யி­ருந்தார்.

இன்றேல் இலங்­கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்­சி­பு­ரிந்­தி­ருக்­கிறார் எனும் உண்மை மறைந்தே போயி­ருக்கும். இரண்டாம் புவ­னே­க­பாகு முஸ்­லி­மாகி அப்­பெண்ணை இரண்டாம் தார­மாக மணந்­த­தற்கு சரித்­தி­ரத்தில் எந்த குறிப்­புக்­களும் இல்லை. அப்­ப­டி­யானால் அந்­தப்­புர நாய­கி­யாக அப்­பெண்ணை வைத்­தி­ருந்­தாரா? என்­ப­தற்­கான தக­வலும் இல்லை.
முஸ்­லி­மல்­லாத ஆணை முஸ்லிம் பெண் மண­மு­டிப்­ப­தையோ முஸ்லிம் பெண் அந்­தப்­புர நாய­கி­யாக இருப்­ப­தையோ முஸ்­லிம்கள் அனு­ம­திப்­ப­தில்லை. அந்த வகையில் இரண்டாம் புவ­னே­க­பாகு முஸ்­லி­மா­கியே அப்­பெண்ணை மண­மு­டித்­தி­ருக்­கலாம் என யூகிக்­க­மு­டி­கி­றது. அவ­ரது மூத்த மனைவி சிங்­களப் பெண். அவர் தங்கப் பல்­லக்கில் போய்­வ­ரு­வதால் ரன்­தோலி எனவும், இளைய மனை­வி­யான முஸ்லிம் பெண் இரும்புப் பல்­லக்கில் போய்­வ­ரு­வதால் யக்­க­ட­தோலி எனவும் அழைக்­கப்­பட்டனர். முஸ்லிம் மனை­வியின் பெயர் ஆலியா எனவும் கூட ஒரு குறிப்பு உள்­ளது.

முஸ்லிம் மனை­விக்கு தன் மூலம் பிறந்த மக­னுக்கே அர­சு­ரிமை வாரிசை வழங்க இரண்டாம் புவ­னே­க­பாகு ஏன் நினைத்தார். இதுவும் கூட அவர் ஒரு முஸ்­லிமே என்­ப­தற்கு அடை­யா­ள­மாக இருக்­கி­றது. அப்­போது இந்­தியா முஸ்லிம் ஆட்­சியின் கீழ் இருந்­ததால் இரண்டாம் புவ­னே­க­பா­குவின் செய்கை இலங்­கை­யையும் முஸ்லிம் நாடாக்­கி­விடும் என சிங்­கள மக்கள் அஞ்­சினர். இதனால் அரச வாரி­சு­ரி­மையை சிங்­கள மனை­வியின் மக­னுக்கே பெற்­றுக்­கொ­டுக்க நாட்டு மக்கள் அணி ­தி­ரண்­டனர். இதனால் மூத்த மனை­வியின் குடும்­பத்­தினர் இரண்டாம் புவ­னே­க­பா­கு­வையும் முஸ்லிம் மனைவி உட்­பட அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் கொலை செய்­தனர். எனினும் முடிக்­கு­ரிய பிள்ளை ஒரு சலவைப் பெண்ணால் கடத்­தப்­பட்டு பேரு­வ­ளையில் வளர்க்­கப்­பட்­டது.
வீர­கல்­புர தேவி பெற்ற மகன் சலவைப் பெண்ணால் அரண்­ம­னை­யி­லி­ருந்து இர­க­சி­ய­மாக எடுத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் அப்­போது 67 அந்­தப்­புர அழ­கி­க­ளோடு தற்­கொலை செய்து கொண்­ட­தா­கவும் வர­லாற்­றா­சி­ரியர் யூஸ்டஸ் விஜே­துங்க குறிப்­பி­டு­கிறார் அல்­லவா? இது இரண்டாம் புவ­னே­க­பா­குவை இழி­வு­ப­டுத்தும் தக­வ­லாகும். இவ­ருக்கு அந்த முஸ்லிம் பெண்ணின் பெயர் தெரி­ய­வில்லை. அதனால் தான் யக்­கட தோலிய, மெத­கெட்­டிய குமாரி எனும் பெயர்­களைப் போல் வீரகல் புர­தேவி என்­கிறார். ஆக மகனின் முஸ்லிம் பெயரும் இல்லை. தந்­தையின் முஸ்லிம் பெயரை மட்டும் கூறவா போகி­றார்கள்?

ஆட்­சியை 1325 ஆம் ஆண்டு நான்காம் பராக்­கி­ர­ம­பாகு இரண்டாம் புவ­னே­க­பா­கு­வி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­ய­போது வத்­ஹிமி ராஜா­வுக்கு 10 வயது. அவர் பேரு­வ­ளையில் 5 வரு­டங்கள் வாழ்ந்து பின் குரு­நா­க­லைக்குப் படை­யோடு வந்து நான்காம் பராக்­கி­ர­ம­பா­கு­வி­ட­மி­ருந்து ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­போது 15 வயது. அவர் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது 18 வயது. ஆக மூன்று வருட கால ஆட்சி புரிந்த வஸ்­து­ஹி­மி­ரா­ஜ­கலே பண்­டார ஒரு முஸ்லிம் அர­ச­ராவார். இவ­ரது இயற்­பெயர் குராஷான் செய்யித் இஸ்­மாயீல் என்­ப­தாகும். இவர் வசமே புனித தந்­தமும் இருந்­தி­ருக்­கி­றது.

இவரைப் பற்றி  மகா­வம்சம் குறிப்­பி­டு­கையில் வஸ்­து­ஹிமி அறஞ்­செய்து நன்மை பெற முயன்ற அர­ச­னாவார். இவர் இஸ்­லாத்தை தழு­வி­ய­வ­ராக இருப்­பினும் தினந் தோறும் 1000 பிக்­கு­க­ளுக்கு தானம் வழங்­கு­வதை கட­மை­யாகக் கொண்­டி­ருந்தார். வருடா வருடம் மதச் சடங்­கையும் தனது முடி­சூட்டு விழா­வையும்  அரச கௌர­வப்­படி கொண்­டாடி ஆர­வா­ர­மா­கவும் வெற்­றி­வீ­ர­னா­கவும் ஊர­றியச் செய்தார் என்­கி­றது.
வர­லாற்­றா­சி­ரியர் ஜீ.சீ.மென்டிஸ் “இலங்­கையின் ஆரம்­ப­கால வர­லாறு” எனும் தனது நூலில் 1325 ஆம் ஆண்டு வரை இரண்டாம் புவ­னே­க­பாகு  குரு­நா­க­லையில் இருந்து ஆட்சி புரிந்தார் என கூறி­யி­ருப்­பது  தவ­றாகும். இலங்­கையில் 9 ஆம் ஆண்டு வர­லாற்று பாட நூலில் நான்காம் பராக்­கி­ர­ம­பாகு 1325 ஆம் ஆண்டு வரை அங்­கி­ருந்து ஆட்சி புரிந்­தி­ருந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளதே சரி­யான தர­வாகும். எனினும் 1325 ஆம் ஆண்­டுக்குப் பின் குழப்பம் ஏற்­பட்­டது  என முடித்­தி­ருப்­பது தவ­றாகும்.

மன்னர் குராஷான் செய்யித் இஸ்­மாயீல்  நான்காம் பராக்­கி­ர­ம­பா­குவை தோற்­க­டித்து ஆட்­சியைக் கைப்­பற்­றி­யதும் 1328 ஆம் ஆண்டு வஸ்­து­ஹி­மி­ரா­ஜ­க­லே­பண்­டார எனும் குராஷான் செய்யித் இஸ்­மாயீல் படு­கொலை செய்­யப்­பட்­டதும் அதன் பின் ஆட்­சியின் தலை­ந­கரம் கம்­ப­ளைக்கு மாற்­றப்­பட்­ட­துமே அதில் குழப்பம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆக ஒரே சொல்லில் ஒரு வர­லாறே மறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அல்­லவா-?

குராஷான் செய்­யிது இஸ்­மாயீல் கலே பண்­டார வஸ்­து­ஹி­மி­ராஜ படு­கொலை செய்­யப்­பட்ட விதம் பற்றி குரு­நா­கல விஸ்­த­ரய பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றது. வஸ்­து­ஹிமி அர­ச­வையின்  வெறுப்­புக்கு உள்­ளா­கி­யதால் அவரைக் கொல்ல அவர்கள் சதியை தந்­தி­ர­மாகச் செய்­தனர். அதன்­படி எத்­தா­கல உச்­சியில் பிரீத் ஏற்­பாடு செய்­யப்­பட்டு  அதில் விசேட மண்­ட­பத்­தையும் கட்டி மன்­ன­னுக்கு ஆச­னமும் வைக்­கப்­பட்­டது. பிரித் வைபவம் உச்­ச­நிலை அடை­கையில் சதி­கார நம்­பிக்கை துரோ­கிகள் ஆச­னத்தின் கால்­களை அகற்­றி­யதால் மன்னன் பள்­ளத்தில் வீழ்ந்து பரி­தா­ப­மாக இறந்தார் என்­கி­றது. அது பற்றி சரித்­தி­ரா­சி­ரியர் யூஸ்டஸ் விஜே­துங்க குறிப்­பி­டு­கையில், வஸ்­து­ஹி­மியை ஒழிக்க எதிர்­கா­லத்தைப் பற்றி சிந்­திக்­காது அவர்கள் ஒரு தந்­திர திட்­டத்தை வகுத்­தனர். மன்­ன­னுக்கு எதி­ரான விரோத அலை காரி­யத்தை முடித்துக் கொள்­ளட்டும் என விட்டு விட்­டனர். அதன்­படி முழு இரவும் பிரித் வைபவம் எத்­தா­க­லயில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு மன்­ன­னுக்­காக அழ­கிய மண்­டபம் கட்­டப்­பட்­டது. நடு இரவில் தொட­ராகப் பிரித் ராகம், கேட்­போரை ஒரு­வர்பின் ஒரு­வ­ராக உறங்க வைத்­த­போதும் சதி­கா­ரர்கள் உறங்­க­வில்லை. திடீரென ஏதோ முறியும் சத்­தத்­தோடு மனித அவலக் குரலும் கேட்டது. ஆம், எத்தாகலையின் உச்சியிலிருந்து ஒருவர் மரணத்தை நோக்கி உருண்டார். இதனால் சதிகாரர்களின் திட்டம் பலித்தது. அது ஒரு விபத்து எனக்காட்ட அவர்கள் எண்ணியபோதும் உண்மை வெளிப்பட்டது என்கிறார். அதன் பிறகு 14 ஆண்டுகளாக குருநாகலையைத் தலைநகராகக் கொண்டு எவராலும் ஆட்சியமைக்க முடியவில்லை. மக்கள், சதிகாரர்களை கொலை செய்தனர். 1342 ஆம் ஆண்டு நான்காம் புவனேகபாகு கம்பளையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி அமைத்தார்.
குராஷான் செய்யித் இஸ்மாயீல் வஸ்துஹிமிராஜகலே பண்டார பௌத்தர்களின் புனித தந்தத்தை வைத்திருந்திருக்கிறார். பெரஹர உட்பட பௌத்தர்களின் புனித வைபவங்களையும் சிறப்பாக நடத்தியிருக்கிறார். பிரித் வைபவங்களிலும் சமுகமளித்திருக்கின்றார்.  அவரை பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சமே புகழ்ந்துரைக்கின்றது. அவரின் அருங்குணங்களைக் கண்டு சிங்கள மக்களே ஏற்றிப் போற்றியிருக்கிறார்கள். இவை ஆட்சியுரிமை வாரிசுகளுக்கும் இன, மத உணர்வாளர்களுக்கும் பெரும் சவால்களாகவே இருந்தன.

எனவே, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலவுவதையும் தொடராக ஏராளமான முஸ்லிம்கள் இலங்கைக்கு வருவதையும் முஸ்லிம் அல்லாத சில நாடுகள் வர்த்தக தொடர்புகளால் முஸ்லிம் நாடுகளானதையும் முன்வைத்து சதிகாரர்கள் புரட்சியை உருவாக்கிவிட்டனர்.

எனினும் அது தோல்வியுற்றது. வரலாற்றில் இலங்கையை ஆட்சி புரிந்த எந்த மன்னனையும் சிங்கள மக்கள் அவர் இறந்த பின் வழிபாடு செய்யவில்லை. வீரபராக்கிரமபாகு, கஜபாகு, துட்டகைமுனு, மகிந்தன், ராஜசங்கபோ, விகாரமகாதேவி, புவனேகபாகு அகியோரைப் புகழ மட்டுமே செய்கின்றார்கள். வஸ்துஹிமிராஜவுக்கு மட்டுமே வழிபாடு செய்கின்றார்கள்.
-Vidivelli

2 கருத்துரைகள்:

What language was the letter written to Egyptian king? Was it Sinhala? Did anyone from the Sri Lankan group speak Arabic?

So what a about one article published in this site about the king who ruled northern area during the time of Portuguese invasion. According to that this particular king requested the help of kotte king to fight Portuguese but kotte king refused and told to surrender as he too in same problem.As result thousand of Muslim soldiers were killed and Muslim king was defeated.

So can Jaffna Muslim be specific about this? or trace that news article as it publish here or the person who published that article could clarify it?

Post a Comment