Header Ads



அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விருதுபெற்ற, இலங்கையர் ரிசானா மஹரூப்

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கைப் பெண்மணியான கலாநிதி ரிசானா மஹரூப் விஞ்ஞானத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு கௌரவ விருதொன்றைப் பெற்றுள்ளார். விஞ்ஞானத்தில் சிறந்த சேவைக்கான ஆளுநர் விருது என்ற விருதையே சவுத் கரோலினா சர்வகலாசாலை சார்பாக இவர் பெற்றுள்ளார். 

சவுத் கரோலினா பல்கலைக்கழகம் சார்பாக இவர் பெற்ற மேற்படி விருது மூலம் இலங்கைக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் கண்டி பெனிதெனியவை வசிப்பிடமாகக் கொண்டவர். தற்போது இவர் அமெரிக்காவில் தொழில் புரிந்து வருகிறார். நாவலப்பிட்டிய அபுகஸ்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை அபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் பயின்று பின்னர் கண்டி பதியுதீன் மங்மூத் மகளிர் கல்லூரி மற்றும் கண்டி பெண்கள் உயர் கல்லூரி என்பவற்றில் உயர் கல்வியைக் கற்றார். 

பேராதனைப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானத்துறை பட்டதாரியான இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்பின் படிப்பை மேற்கொண்டதுடன் (மாஸ்டர்) பின்னர் சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தில்  பி.எச்.டி பட்டம் பெற்று  கலாநிதியானார். 

கலாநிதி ரிசானா மங்ரூப் ஓய்வு பெற்ற அதிபர் டி.எல். மொகமட் மஹ்ருப் உம்மு சுல்பா ஆகியோரின்  புதல்வியாவார். இவர் பெற்ற விருதானது அமெரிக்காவின் கௌரப் பரிசென அந்நாட்டு பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. இவர் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான ஆய்வுப்பிரிவில் பல்வேறு ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இவர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவ் ஆய்வுகள் பல மனித குலத்திற்குச் சாதகமாக அமைந்த காரணத்தால் மேற்படி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சவுத் கரோலினா பாராளு மன்றத்தில் நடந்த மேற்படி விருது விழாவில் பிராந்திய ஆளுநர் (கவர்ணர்) ஹென்றி மெக்மாஸ்டர்  இவருக்கான  பரிசைக் கையளித்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் இப் பரிசைப் பெற்ற முதலாவது பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Congratulation... Proud of your achievements as a Srilankan.

    ReplyDelete

Powered by Blogger.