Header Ads



வடக்கு அரசியல்வாதிகளினால், இன்ளொரு இரத்தக் களரி வரும் - மகிந்த எச்சரிக்கை

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள்.

போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர்.

பலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் ஆகி விட்டனர்.

எல்லா இன, மதங்களையும் சேர்ந்த மக்கள், முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறந்து விடக் கூடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

7 comments:

  1. இஸ்லாமிய வரலாற்றிலே பத்ர் யுத்தம் 'Battle of Badr' மிகப் பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும்.

    இதில் 313 முஸ்லிம்கள் 2 குதிரைகள் 70 ஒட்டகைகளுடன் - 950 எதிரிகளையும் அவர்களது 100 குதிரைகள் 170 ஒட்டகைகளுடன் போராடி வென்று வந்த மகத்தான யுத்தம்.

    இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது நபிகள் கோமான் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  "நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம்" என்று சொன்னார்கள்.

    ஸஹாபாக்கள் அதிர்ச்சியுடன் "நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள்" எனக் கேட்டார்கள்.

    அப்போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது 'நப்ஸ்' என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம்" என்று சொன்னார்கள்.

    உண்மையான பெரு வெற்றியையும்  அமைதியையும் அடைந்துகொள்ள,   தம் மனோ இச்சைகளுடன் அதிகம் போராடி, பிறருடைய உரிமைகளை கொடுக்க வேண்டிய நிலையிலேயே இன்னும் இலங்கையர்கள் இருக்கின்றனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

    ReplyDelete
  2. பயங்கரவாத தடை சட்டத்தில் இவர்களை தூக்க வேண்டியது காலத்தின் தேவை

    ReplyDelete
  3. ஆமாம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் GTX போன்ற பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  4. தப்பு திரு மகிந்த ராஜபக்ச அவர்களே,நீங்க கொன்றது பிரபாகரனை மட்டும்தான். இனப்பிரச்சினையையல்ல.இனப்பிரச்சினையை தீர்க்காமல் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களை சரணாகதி ஆக்கும் முயற்ச்சியில் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். அதனால் வடக்கி கிழக்கில் இடம்பெறும் அறபோராட்டத்துக்கு யாரையாவது கண்டிப்பதானால் இன்ப்பிரச்சினைக்கான தீர்வை வைக்காத உங்களையல்லவா முதலில் கண்டிக்கவேணும். மக்களின் எழுச்சி தொடர்வதைக் கண்டு ஏன் அரற்றுகிறீர்கள்? இனியாவது இனப்பிரச்சினையை தீர்த்து தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என்று சொல்ல நீங்கள் தயாரில்லை. பிரச்சினை அதுவல்ல. எந்த சிங்கள தலைவர்களும் தயாரில்லை என்பதுதான் பிரச்சினை.

    ReplyDelete
  5. @Mahibal, உங்கள் கதையும், கருத்தும் சுப்பர்.

    ReplyDelete
  6. @Ajan
    நன்றி, ஆனால் அது கதையல்ல நிஜம்.
    நாம் உங்களுக்காகவும் குரல் கொடுப்போம்.  உங்களிடமும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. மஹிந்த அவர்களே, நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; இது தமிழ் முஸ்லீம் மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய காலகட்டம், ஏனெனில் எம்மிடம் அரசியல் பலமுமில்லை, சர்வதேச ஆதரவும் இல்லை. பிரபாகரனின்பின் தமிழ் மக்கள் தன சுயமரியாதையை இழந்தனர் அதேபோல் முஸ்லீம் மக்கள் அஸ்ரப்பின்பின் தன சுயமரியாதையை இழந்தனர்.

    ReplyDelete

Powered by Blogger.