Header Ads



"ஐ.தே.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என ரணில், பகல் கனவு காண்கின்றார்"

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதாகும். எனினும் 19 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தம் இதற்கு இடையூராக்க காணப்படுகின்றது. எனவே இதனை நீக்கும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக முடியும் என தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸவிதாரண. 

ஜனாதிபதி தேர்தலினை முன்னிலைப்படுத்தி தற்போது பாரிய முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலான கூட்டு எதிரணி  தற்போது பல கட்சிகளை உள்ளடக்கிய கட்சியாக காணப்படுகின்றது. ஆனால் பிரதான எதிர்கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை 

எனினும் தேசிய அரசாங்கத்திலிருந்து தற்போது பல உறுப்பினர்களும்  கூட்டு எதிரணியினர் பக்கம் இணைந்துள்ள அதே வேளை அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் மஹிந்த தரப்பினருடன் இணைந்துள்ளனர். இதுவே நல்லாட்சி அரசாங்கத்தின் பாரிய பின்னடைவை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். 

இது மேலும் தெரிவிக்கையில், 

தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின்  காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டிற்கு கடன் சுமைகள் அதிகரித்துள்ளன. அவை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. எனவே அடுத்த தேர்தலில் ஐ.தே.க மற்றும் சு.க.வினால் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது என்பது உறுதியாகும்.

ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். 2030 ஐ தாண்டியும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியதிகாரம் தொடருமா என்ற விடயத்தினை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

முறையற்ற நிர்வாகத்தினை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சி  அதிகாரத்தினை  பெற முயற்சிப்பது வேடிக்கையாகவே உள்ளது.  நாட்டை  அடுத்து யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில்  வாக்குகளை கேட்பதற்கு எவ்வித தார்மீக உரிமைகளும் கிடையாது. மக்களிடம் அவர்கள் வாக்குகளைப் பெற முயற்சித்தாலும் அது தோல்வியிலேயே முடிவடையும் என்றார்.

No comments

Powered by Blogger.