Header Ads



அரசியல் இப்தார்களால், என்ன பயன்...?


கட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவை.

இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது, நல்லிணக்கம், அன்பு ஆகியவையே அவற்றின் நோக்கம் என்பதால் கட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார்கள் வரவேற்கத்தக்கவை.

ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளால் என்ன பயன்? 

அங்கு இஸ்லாமா பேசப்படுகிறது?

“முஸ்லிம் சமுதாயத்துக்கு நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம்” என்று கட்சிகள் தங்களின் பரப்புரை மேடையாக இஃப்தார் நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

‘இந்தக் கட்சியையும் இந்தத் தலைவரையும் விட்டால் முஸ்லிம் சமுதாயத்தை வேறு யாராலும் பாதுகாக்கவே முடியாது‘ என்று கட்சிகளின் அரசியல் தலைமையை அல்லாஹ்வுக்கு நிகராக வானளாவப் புகழும் கொடுமை அரங்கேறுகிறது இஃப்தார் நிகழ்வுகளில்.

தன்னல நோக்கத்துடன் நடத்தப்படும் அரசியல் இஃப்தார்களால் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை. அது ஓர் ஏமாற்று வேலை.

அதே சமயம், கட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகள்,

பெரிதும் பயனுள்ளவை, 
நல்லிணக்கம் சார்ந்தவை, 
ஆதரிக்கப்படவேண்டியவை.
வரவேற்கப்படவேண்டியவை.

-சிராஜுல்ஹஸன்

5 comments:

  1. மே தின கொண்டாட்டமும் இந்த இப்தரும் ஒன்றுதான் , இவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது இங்கு நடைமுறையில் இல்லை. இவை எல்லாவற்றையும் இந்த அரசியல் வியாபாரிகள் அவர்களின் சாக்கடை தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர் இதுதான் உண்மையிலும் உண்மை.

    ReplyDelete
  2. This practice is absolutely ridiculous. It is not just breaking the fasting, rather, it is an Ibaadhah. Participating with non-Muslims makes any sense??

    ReplyDelete
  3. This is a political ifthar, not Islamic ifthar. What is the benefits to Islam by participating non Muslims in ifthar????
    Or what is the benefits for them?

    ReplyDelete
  4. These type events creat a misundestanding that this is the way all the muslims breaking their fast

    ReplyDelete

Powered by Blogger.