Header Ads



“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை

-Dc

சர்ச்சையை ஏற்படுத்திய தெஹிவளை போஸ்டர், சகோதரமொழி பாடசாலை ஒன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா?” என்ற சிங்கள வாசகத்துடன் ஒரு சுவரொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்தில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.

நாட்டில் காணப்படும் இனவாத சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதுபோன்ற ஒரு சுவரொட்டி சிறுபான்மையினர் மத்தியில் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தது.

குறித்த சுவரொட்டி தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவர் என்.எம். அமீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தெஹிவளை நகரசபை உறுப்பினர் மரீனா ஆப்தீன் இன்று தெஹிவளை பொலிஸில் தகவல் கோரியுள்ளார்.

இதன்போது தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜெயசின்ஹ பாடசாலை பழைய மாணவர்களால் எதிர்வரும் மே 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது.

பின்னர் நடைபவனியை ஏற்பாடு செய்த குறித்த பாடசாலை பழைய மாணவர்களை வரவழைத்த பொலிஸார், பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளைக் கண்டிதத்துடன், உடனடியாக மக்கள் தெளிவு பெரும் விதமான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.