Header Ads



தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கட்சிகள் இனவாத, மதவாத அடிப்படையில் செயற்படுகின்றன

முற்போக்குக் கட்சிகள் இனவாத பிடியில் சிக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவை சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முற்போக்கு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பல கட்சிகள் இன்று இனவாத மதவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன.

இன, மத அடிப்படையில் தீர்மானங்களை எடுக்காத ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளை விடவும் மேலானது.

முதலாளித்துவ அரசாங்கமாக அடையாளப்படுத்தப்படும் ஐ.தே.க இன்று வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் கட்சியாக உருவாகியுள்ளது.

கல்வி கற்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் இலவச காப்புறுதி வழங்கப்படுகின்றது. 43 லட்சம் பாடசாலை சிறுவர் சிறுமியர் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலவச கல்வி, இலவச சுகாதார சேவை என்பனவற்றை நாம் வழங்கியுள்ளோம்.

இதற்குத்தான் நல்லாட்சி என்று கூறுகின்றோம், எனினும் எமது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கே இந்த விடயங்கள் புரியவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.