May 01, 2018

இறைவன் விதித்த இறை கட்­ட­ளையை இத­யத்தால் ஏற்றே, முஸ்லிம் பெண்கள் “அபாயா” அணி­கின்­றனர்

மீண்டும் தொடரும் அதே வரலாற்றுத் தவறு

-சுபைதா கமால்தீன்-

கடந்த வாரம் புதன்­கி­ழமை திரு­கோ­ண­மலை ஸ்ரீசண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியின் பெற்­றோர்­களும் பழைய மாண­வி­களும் ஒரு ‘விசித்­தி­ர­மான’ ஆர்ப்­பாட்­டத்தைச் செய்து பத்­தி­ரிகை வாயி­லாகத் தங்கள் ‘மறை­மு­கத்தை’ வெளிச்­ச­மிட்டு காட்­டி­யுள்­ளனர்.

நல்ல ஒழுக்­க­முள்ள பெண்கள் தம் அங்­கங்­களை மறைத்­துக்­கொண்டு அடங்­கி­யி­ருக்­கவே விரும்­புவர். இதையே மனித வாழ்வின் அனைத்துத் துறை­க­ளுக்கும் இலக்­கணம் வகுத்து ‘இப்­ப­டித்தான் வாழ­வேண்டும்’ என இறைவன் விதித்த இறை கட்­ட­ளையை இத­யத்தால் விரும்பி ஏற்றே முஸ்லிம் பெண்கள் “அபாயா” அணி­கின்­றனர். படிப்­பிக்கும் ஆசி­ரி­யை­களும் இதில் உள்­ள­டங்­குவர்.

பிறரின் கலா­சா­ரத்தைக் களங்­கப்­ப­டுத்­து­வதோ இஸ்­லா­மிய கலா­சா­ரத்தை திணிப்­பதோ சமயப் பிர­சா­ரமோ அவர்­களின் உள்­நோக்கம் அல்ல.  அத­னால்தான் முஸ்லிம் கல்வி வர­லாற்றில் ஆடைகள் மூலம் இது­வரை எந்தப் ‘புரட்­சி’யும் எந்த ஊரிலும் எந்தப் பாட­சா­லை­யிலும் நடந்­த­தாக எந்தத் தட­யமும் இல்லை. இனி­மேலும் நிச்­சயம் வராது என நம்­பலாம்.

இது இப்­ப­டி­யி­ருக்க,

அறி­வார்ந்த சமூ­கத்தின் சிந்­த­னைக்கு விருந்­தாக கீழ்­வரும் சம்­ப­வத்தை பரி­மா­றிக்­கொள்ள விழை­கின்றேன். சமீ­பத்­திய பல்­க­லைக்­க­ழக வகுப்­பொன்றில் பட்­ட­தாரி சட்­டத்­துறை மாண­வர்­க­ளுக்கும் பேரா­சி­ரி­ய­ருக்­கு­மி­டையே ஒரு கலந்­து­ரை­யாடல் நடந்­தி­ருக்­கி­றது.  மாண­வர்­களில் பல மதத்­தி­னரும் இருந்­துள்­ளனர். ஒவ்­வொ­ரு­வரும் தத்தம் மத சிந்­த­னை­களைப் பேரா­சி­ரி­ய­ருடன் பரி­மாறிக் கொண்­டுள்­ளனர். முஸ்லிம் மாண­வர்­களின் நேரம் வந்­தி­ருக்­கி­றது. முஸ்லிம் மாணவன் எழுந்து “நான் முஸ்­லிம்­களின் அபாயா ஆடை பற்றி பேச விரும்­பு­கிறேன். பேச­லாமா” எனப் பேரா­சி­ரி­யரைப் பார்த்து கேட்க. அவர் “தாரா­ள­மாக பேசலாம்” என அனு­மதி வழங்­கவே முஸ்லிம் மாணவன் கீழ்­வ­ரு­மாறு  பேச­லானான்.

 “ஆடை அணி­வதில் காலத்­திற்கு காலம் நாம் மாறி மாறியே வந்­தி­ருக்­கிறோம். வளர்ச்சி கண்­டுள்ளோம். இதை ஏற்­றுக்­கொள்­கி­றோமா?” எனக் கூறி சற்றே நிறுத்­தி­யுள்ளான். கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்டோர் ‘ஆம்’ என ஒப்புக் கொண்­டுள்­ளனர். தொடர்ந்து முஸ்லிம் மாணவன் பேச­லானான்.
“ஆதியில் மனிதன் நிர்­வா­ண­மாக அலைந்து திரிந்தான். பின்னர் இலை குழை­களால் மறைத்துக் கொள்­ள­லானான். பஞ்சு– நூல்– நெய்தல் என மனி­தனின் அறிவு வளர, வளர அந்த வளர்ச்­சியை ஆடை­களில் பிர­தி­ப­லிக்கச் செய்தான். நிர்­வா­ண­மாக அலைந்த மனிதன் படிப்­ப­டி­யாக தன்னை தன் அவ­ய­வங்­களை மறைத்து ஆடை அணி­ய­லானான். இது மனித வளர்ச்­சியை நாக­ரிக உயர்ச்­சியை எடுத்­துக்­காட்­டி­யது”

 “முஸ்­லிம்கள் தம் சம­யத்தைப் பின்­பற்றி ஆடை அணி­ய­லா­யினர் மற்­ற­வர்கள் ஆங்­கி­லே­யரைப் பின்­பற்றி ஆடை அணி­ய­லா­யினர். முஸ்­லிம்கள் தம்மை மறைத்து ஆடை அணி­வது வளர்ச்­சியின் அடை­யாளம். ஆங்­கி­லே­யரை பின்­பற்­றுவோர் ஆடைக்­கு­றைப்பு செய்து கற்­காலம் நோக்கிச் செல்­கின்­றனர்” எனக்­கூறி மாணவன் அமர மற்­ற­வர்கள் அமை­தி­யா­யினர்.

பிரித்­தா­னி­யாவில் ஒரு கிறிஸ்­தவ நண்பர் தன் முஸ்லிம் நண்­ப­ரிடம் பேசிய உரை­யா­டலைப் பார்ப்போம்.

தெருவில் போய்க்­கொண்­டி­ருந்த ஒரு கிறிஸ்­தவப் பெரியார் தன் முஸ்லிம் நண்­பரை சந்­திக்க நேரிட்­ட­போது சேம­நலன் விசா­ர­ணையைத் தொடர்ந்து “உங்கள் பெண்கள் ஏன் தங்­களை மூடி மறைத்து அபாயா அணி­கின்­றனர். அப்­படி அணி­வது பெண்­களின் சுதந்­தி­ரத்தைப் பாதிக்­க­வில்­லையா?” எனக் கேட்­கிறார். உடனே அந்த முஸ்லிம் நண்பர் எதுவும் பேசாமல் பக்­கத்தே இருந்த கடை­யொன்றில் இரண்டு டொபி­களை வாங்கி வந்­துள்ளார். அதில் ஒன்றின் மேலு­றையை கிழித்து கீழே போட்­டுள்ளார். அதில் மண்­து­கள்கள் ஒட்­டிக்­கொண்­டன. அதைக் கீழே குனிந்து எடுத்து இரண்டு டொபி­க­ளையும் தன் கிறிஸ்­தவ நண்­ப­ரிடம் காட்டி ஒன்றை எடுக்­கும்­படி கூறி­யுள்ளார்.

கிறிஸ்­தவ நண்­பரோ மண் ஒட்­டிய டொபியை எடுக்­காமல் மேலுறை சுற்­றிய மற்ற டொபியை எடுத்­துள்ளார். உடனே முஸ்லிம் நண்பர்  “பார்த்­தீர்­களா? போர்த்­திய டொபியே சுத்­த­மா­னது. திறந்த டொபி அசுத்­த­மா­னது என புரி­கி­ற­தல்­லவா?” எனக்­கூறி விளக்­கவே கிறிஸ்­தவ நண்பர் அமை­தி­யானார். 

மேற்­படி சம்­ப­வமும் உரை­யா­டலும் உணர்த்தும் சிந்­த­னைகள் அறி­வார்ந்த சமூ­கத்­திற்கு ஆசி­ரிய குழாத்­திற்கு அர்ப்­பணம்.

தமிழ் பேசும் முஸ்லிம் சமூ­கத்தின் உணர்­வு­களை நன்கு புரிந்­துள்ள தமிழ் தலை­மைகள் இது விட­யத்தில் மௌனம் அனுஷ்­டிப்­பது மீண்டும் அவர்கள் தவ­றான பாதை­யி­லேயே பயணம் செய்­கின்­றனர் என்­பது ஆழ்ந்து யோசிப்­போ­ருக்குப் புரிந்­து­விடும்.

இப்­ப­டித்தான் 1990 அக்­டோபர் 30 ஆம் திகதி யாழ். மண்ணில் பன்­னெடுங் கால­மாகப் பைந்­த­மி­ழையே பேசி சுவா­சித்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம் சமூ­கத்தை வெறுங்­கை­யுடன் இரண்டு மணி­நேர அவ­கா­சத்தில் வெளி­யேற்­றிய இன­சுத்­தி­க­ரிப்­பின்­போது இதே மண்ணின் இட­து­சாரி இத­யங்கள், துறை­போகக் கற்ற அறி­ஞர்கள், கல்­வி­மான்கள், அறி­வு­ஜீ­விகள் அனை­வரும் மௌனம் காத்­தனர். இதன் விளைவை காலம் உணர்த்­தி­யது. மலர வேண்­டிய வெற்றி, மங்­கிப்­போ­வ­தற்கு இந்த ஆளு­மை­களின் தலை­மை­களின் மௌனம் வழி­ச­மைத்­தது.

ஒரு சிறு­பான்மை இனம் தனது உரி­மை­களின் வெற்­றிக்­காக பெரும்­பான்மை இனத்­துடன் போரா­டும்­போது தன்னை விட சில விகி­தங்­களே குறை­வான இன்­னொரு சிறு­பான்மை இனத்தை கண்ணியப்படுத்த– அரவணைக்க மனமில்லை என்றால் என்னவென்று சொல்வது. இன்றும் அதே மௌனம் – மனநிலை தொடர்கிறது. அபாயா எதிர்ப்புக்கு அடிப்படை உண்மை காரணம் எதுவுமில்லை. அதனாற்றான் அபத்தமான காரணங்களை எல்லாம் அரங்கேற்றி நிறுவப் பார்க்கின்றனர்.

இன்றைய மௌனத் தவறு எதிர்காலத்தில் என்னென்ன பாதகங்களை பிரசவிக்கப் போகின்றதோ என்பதைக் காண காலம் காத்திருக்கின்றது. எந்த மதமானாலும் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் வாழ பிரார்த்திப்போமாக.   

0 கருத்துரைகள்:

Post a Comment