May 09, 2018

முஸ்லிம்கள் மீது, தமிழர்களின் கலாச்சார அத்துமீறல்


இலங்கையில் பெரும்பான்மை இனம் சிறுபான்மைத் தமிழர்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் அடியாக இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள். தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டது. பொட்டு வைப்பதை இழிவாகக் கருதினார்கள். தமிழ்ப் பெண்கள் சேலை அணிந்து வெளியே வருவதற்கே அஞ்சினார்கள். சித்திரைப் புத்தாண்டில் கூட தமிழ்ப் பாரம்பரியங்ளை பகிரங்கமாகச் செய்வதற்கு முடியாத ஒரு சூழல் நாட்டில் உருவாகியிருந்தது. 83 ஜூலைக் கலவரத்தின் போது தமிழரின் மொழி உச்சரிப்பை வைத்தே தமிழரை அடையாளம் கண்டு தாக்கினார்கள்.

தமிழருக்கு எதிராகத் திணிக்கப்பட்ட கலாச்சார ஆதிக்கத்துக்கு எதிராக தமிழர்கள் போராடினார்கள். தமது கலாச்சாரத்தை பின்பற்றும் உரிமை மறுதலிக்கப்படுவதற்கு எதிராக அவர்கள் சர்வதேசமெங்கும் சென்று நியாயம் தேடினார்கள்.

இன்று தமக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும் சூழலில் இதே கலாச்சார அத்துமீறலை அவர்களிலும் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது சில இனவாதச் சக்திகள் திணிக்கிறார்கள். இலங்கையில் இனத்துவ உணர்வுகள் கூர்மையடைந்திருப்பதையும் அது மனிதப் பண்பாடுகளைப் புதைகுழிக்குத் தள்ளிவருவதையும் தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆசிரியர்களது ஆடைக்கு எதிராக தமிழ் ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் தற்பொழுது இனமுறுகல்களைத் தோற்றுவித்திருக்கின்றன. தமிழ்க் கலாச்சார உடையை முஸ்லிம் ஆசிரியைகள் மீது திணிப்பதற்கு பாடசாலை நிர்வாகம் எடுத்த முயற்சியினால் அது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் குளிர்காய நினைக்கும் சக்திகளை இரு சமூகங்களும் இணைந்து வெளிக் கொணர்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ் முஸ்லிம் உறவினை கேள்விக்குள்ளாக்கியுள்ளாக்கியிருப்பது தான் வேதனைக்குரியது. கிழக்கை வடக்குடன் இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தர வேண்டும் என்ற அவரது அழைப்புக்குப் பின்னால் பல உள்நோக்கங்கள் இருப்பதை இது வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருப்பதாக முஸ்லிம் சமூகம் கருதுகின்றது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்புக்குத் துணைபோகும் முஸ்லிம் தலைமைகள் தமிழ் இனவாதத்துக்கு முஸ்லிம்களை பலிக்கடாக்களாக்குவதற்காகவே தமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் இந்த விவகாரத்தினூடாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிங்கள இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்துக்குப் பாதுகாப்பு வழங்க மறந்தது போல தற்பொழுது தமிழ் இனவாதத்துக்குத் தீனியாக முஸ்லிம்களை தாரைவார்க்கும் இந்தத் தலைமைகளிடம் இருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தனது இனத்தையோ, நிறத்தையோ, மதத்தையோ, மொழியையோ முற்படுத்தி நாட்டில் மற்றுமொரு இரத்தக்களரியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற சகல நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும். சண்முகா மகளிர் கல்லூரி விவகாரம் வெறுமனே கலாச்சாரத் திணிப்பு மட்டுமல்ல. முன்வரும் மாகாண சபைத் தேர்தல், முஸ்லிம்கள் இல்லாத வட கிழக்கு மாகாணம், தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம், பூகோள அரசியல் சக்திகள் என பலவிடயங்களில் இது தொடர்புபட்டிருக்கின்றது என்ற வகையில் இந்த விவகாரத்தை இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றாமல் கையாள்வது சமூகத்தின் பொறுப்பாகும்.

சக மனிதனை அனுசரித்து வாழ்வதற்குத் தயாரில்லாத எந்தக் கலாச்சாரமும் மனித குலத்தின் கலாச்சாரமாக அமைய முடியாது. அடுத்தவரது கலாச்சாரத்தையும் மதித்து நடப்பது தான் பண்பாடுள்ள சமூகங்களுக்குள்ள அழகாகும்.

மீள்பார்வை

12 கருத்துரைகள்:

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
(அல்குர்ஆன் : 22:78)

ஜெனிவா தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. ஆனால் அது தமிழர்களுக்கு ஆதரவானது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அதை எதிர்தவர்கள் தான் முஸ்லிம்கள். ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு சென்று தீர்மானத்தை எதிர்க்க ஆதரவு திரட்டினார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர், தாங்கள் தமிழர்களுக்கு எதிரி, பகைவர்கள் என வெளிப்படையாக அறிவித்தார்கள் முஸ்லிம்கள் தான்.

இப்போ, ஏதோ நல்லவர்கள் மாதிரி நாடகம் ஆடுகிறார்கள். இந்த கட்டுரையே காமேடி தான்.

Muslim ministers are imposing musl8ms into tamil culture. Eg. Muslim teachers have been apponinted to Hindu school. We should see the hidden agenda behind these recruitments in tamil school. So my kind request to all my muslim siblings is to stage reasonable protests against these muslim politiciaans hidden agenda. There wouldn't be a trouble if there was no muslim teachers in that school. So think deeply and express your comments against these muslim politicians for tamil muslim peace.

@Antony தமிழ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான ஜெனிவா தீர்மானத்தை இலங்கையர்களான முஸ்லிம்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? எம்மை கொலை செய்து எம்முடைய உடமைகளை திருடிய பிரபாகரனும் அவனுடைய புலி கூட்டமும் அழிந்ததற்காக நாம் எப்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவான ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க முடியும்?

எங்களின் அனுசரிப்பின் உச்ச கட்டம் தான் நாங்கள் இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருப்பது. இனியும் அனுசரித்து போக எங்களிடம் ஒன்றுமே இல்லை. எனவே தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள் அது நடைபெறாது. எங்களுடைய அனுசரிப்பு தான் நீங்கள் கிழக்கிலே உச்சமாக வாழ்வதட்கு காரணம். நாணயமானவர்களுக்கு இது புரியும். இனவாதம் கக்கும் சிலருக்கு இது புரியாத புதிராக இருப்பதே நல்லது

@Gtx, புலிகள் செய்தவற்றறுக்கு நீங்கள் புலிகளை தான் கேட்கவேண்டும். எம்மை அல்ல.

அப்Iபடியானால், ISIS முஸ்லிம் பயங்கரவாதிகள் உலகெங்கும் அப்பாவி மக்களை கொள்வதற்கும், இலங்கை முஸ்லிகளும் பொறுப்பு தான் என சொல்லவருகிறீர்களா?.

நீங்கள் எப்படிதான் சிங்களவர்களின் காலை பிடித்து விட்டாலும், அவர்கள் உங்களை நம்ப வில்லை. ஊர் ஊராக வந்து பள்ளிவாசல்கள், கடைகள் என எரித்தார்கள், எதிர்காலத்திலும் இது நடக்கும் நீங்கள் திருந்தும் வரை.

@Gtx,
ஐநா அறிக்கையில் ஒரு வார்த்தை கூட புலிகளை பற்றியோ அதில் சம்பந்தப்பட்டவர்களை பற்றியோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட மக்களுக்கு தேவையான உடனடி தீர்வுகள் மீள் குடியேற்றங்கள் நஷ்ட ஏடுகள் ப்பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தன. முஸ்லீம்கள் அதை நிராகரிக்க காரணம்
1.தமிழர்கள் மீள்குடியேறினால் முஸ்லிம்களின் சட்டவிரோத குடியேற்றத்தை சத்தியமாக முடியாது.
2. தமிழர்களுக்கு உடனடி தெற்ற்வி கிடைக்காமல் நலிந்தவர்களாக வைத்திருந்தால் இஸ்லாமிய மதமாற்றத்திட்கு இலகுவான சூழ்நிலையை ஏட்படுத்தி கொள்ளலாம்.
3. தொடர்ந்து தமிழருக்கு கிடைக்கும் நீதியை தாமதிக்க வைத்தால் வடகிழக்கு மாகாண வளங்களை சுரண்டலாம்.
4.இலங்கை முஸ்லிம்களின் முழு ஆதரவுடன் நடைபெறும் போதை கடத்தல்களை வேலையில்லா மாணவர்கள் மீது திணித்து காசாக்கி கொள்ளலாம்.
என இஸ்லாத்துக்கு விரோதமான செயல்பாடுகளில் தான் இறங்கி இருந்தார்கள் இந்த நபிகள் நாயகம் வழி வந்த முஸ்லீம் அமைச்சர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பல முஸ்லிம்களும். இதிலே சாதித்தும் காட்டி இருக்கிறார்கள்.

@Anusathஎன்னடா உங்கள் அனுசரிப்பு? பச்சிளம் பாலகர்களையும் அப்பாவிகளையும் கொண்ற அரக்கர்கள்டா நீங்கள்.

I agree with Anton that Jamiathul Ulama acted against UN resolution and Muslims agitated against America in front of american embassy.But two action is completely arranged by Muslim politicians(stooge of MR) to protect Rajapaksha.So Muslims participated as it is only against LTTE as it done unpardonable crime against Muslims as did Rajapaksha to Tamils.So this crimes to Muslims not talk about or simply forget by Tamils and that AJAN ANTONYRA

So this two action of stooge and foolish Jamiathul Ulama Brought destruction not only to the Srilankan Muslims but entire Muslim world.Now Muslim world is burning Islam is insulted because of brutality of LTTE and Rajapaksha.

I also not agree with GTx that UN resolution is rather pro ltte but pro minority and wanted to bring those did crime against Tamils in the name of war.When we consider what happened in Aluthgama,rathupassweva and kandy which is against unarmed people,what might had happened during the war against armed people.

So what Muslims specially Jamithul Ulama as minority should have done was to keep neutral in not supporting and not opposing it.Now as it is Muslim countries at the request of Jamiathul Ulama gone against UN and paid the price.This not a simple thing what that foolish Muslim countries did.They even do not know what and who is this UNO and what will happen to those who go against it.

Now enraged west led by America going against Muslims all over the world as it blocked it's Master plan in Srilanka. Other hand Norway,Tamil diaspora and BBS going against Muslims in Srilanka.

SO I AGAIN SAY THAT JAMIATHUL ULAMA AND MUSLIM STOOGE OF MR BROUGHT DESTRUCTION TO ENTIRE MUSLIM WORLD.

Continue from my earlier comment.It is the year 2010 in which most of the problem escalated in Srilanka and Muslim world as it is the year the UNO resolution was defeated.So that ISIS is created to punish Muslim countries who defeated UNO resolution.Most of ISIS is mercenaries who are working for money.But some innocent Muslims with revolutionary mind joined as they do not know the true nature of it.

Another country and leader who made a problem for themselves is Maldive Island and it's president Mr.Mohamed Nasheed who in his maiden speech in UNO talk against UN resolution supporting Srilanka saying "do not interfere in Srilanka as they are just came out of 30 year war". So soon after this speech within 6 month he was toppled by coup and ever since this peaceful country is in turmoil.

So all this Muslim politicians brought problem for themselves and for Islam as they unnecessarily involved in very serious problem in Srilanka show their political immaturity and true nature of UNO and west who will not spare anybody who cross their path.

@Imthiyaz,
You are right and thanks for the understanding. Everybody makes mistakes and they can only correct them selves if anybody point out their faults. It's suitable for everbody.
Ulama party misguided muslim community in 2010 and everbody is accepting that.

Investigations have found that  non-Muslims have been found to be posted here in muslim names.  Muslims are therefore required to be careful.

Post a Comment