Header Ads



சுவ­னப் பாதை­யை இல­கு­வாக்­கிய, பாதி அல் பத்ஷ்

-M.I.Abdul Nazar-

தியா­கி­யாக மாறு­வ­தற்கு ஒருவர் பலஸ்­தீ­னத்­தில்தான் இருக்க வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை என்று நிரூ­பித்த முன்­மா­தி­ரி­மிக்க நப­ரொ­ருவர்,  கௌர­வத்­து­டனும் மதிப்­பு­டனும் மர­ணிப்­ப­தற்கு நீங்கள் யுத்த களத்­தில்தான் இருக்க வேண்­டு­மென்ற அவ­சி­ய­மில்லை எனக் காட்­டிய ஒருவர்,  கல்விப் புல­மை­யினால் இஸ்­லா­மிய வேறு­பா­டுகள், முரண்­பா­டு­களை சீர்­செய்து மிகப் பணி­வான முறையில் ஆரம்ப மட்­டத்­தி­லேயே தொடங்க முடியும் எனவும் நிரூ­பித்த ஒருவர், தொடர்பில் பேசு­வ­தற்கு பேசு­வ­தற்கு எங்­கி­ருந்து ஆரம்­பிப்­பது?

கலா­நிதி ஷெய்க்  பாதி அல் பத்ஷ் கொடுத்த வாக்கைக் காப்­பாற்றும் ஒருவர். பலஸ்­தீ­னத்தின் வீரத்­திற்கும், தியா­கத்­திற்­கு­மான அடை­யா­ள­மாக விளங்­கி­யவர். பலஸ்­தீன மக்­க­ளுக்கு மிகவும் மன­வு­று­தி­யுடன் சேவை­யாற்­றி­யவர். ஆனால், கிட்­டத்­தட்ட 5,000 மைல்­க­ளுக்கு அப்பால் மலே­சியத் தலை­நகர் கொலம்­பூரில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்டார்.

அவர் ஒரு கல்­விமான். அல்­குர்­ஆ­னோடு மிக நெருக்­க­மாக இருந்­தவர். இத­யத்­திலும், ஞாப­கத்­திலும் அதை பதிய வைத்­தி­ருந்­தவர். மின்­சாரப் பொறி­யி­யல்­து­றையில் முன்­னோ­டி­யான ஒரு­வ­ராக இருந்­தவர். சுபஹ் தொழு­கைக்­காக பள்­ளி­வா­ய­லுக்குச் சென்று கொண்­டி­ருந்­த­போது பாதி அல் பத்ஷ் படு­கொலை செய்­யப்­பட்டார். அவர்­மீது சுடப்­பட்ட 14 துப்­பாக்கி ரவை­களில் பெரும்­பா­லா­னவை அவ­ரது உடலைத் துளைத்­தி­ருந்­தன.

இந்தக் கோழைத்­த­ன­மான படு­கொ­லையின் சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றிய மலே­சிய அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருக்கும் நிலையில், கொலை­க­ளி­னா­லேயே உரு­வாக்­கப்­பட்டு போஷிக்­கப்­ப­டு­கின்ற போலித்­த­ன­மான, விரி­வாக்கம் செய்யும் நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாட்­டினால் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்ற கப­டத்­த­ன­மான இஸ்­ரே­லிய மொஸாட்டின் கைவ­ரி­சை­யா­கவே இந்த நிகழ்வு பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
'பாதி அல் பத்ஷின் படு­கொலை மொஸாட்­டுக்­கு­ரிய இயல்­பான பண்­பாகும். ஹமா­ஸுக்­காக பணி­யாற்றும் பொறி­யி­ய­லாளர் ஒரு­வரே இலக்கு' என இஸ்ரேல் ஹையோ­மி­லுள்ள இரா­ணுவ பகுப்­பாய்­வாளர் யோஐவ் லைமோர் தெரி­வித்தார்.

பேரா­சி­ரி­ய­ராக வர வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் இருந்த விரி­வு­ரை­யா­ள­ரான பாதி அல் பத்ஷ் சிறந்த கண­வ­ரா­கவும், மூன்று குழந்­தை­களின் தந்­தை­யா­கவும் இருந்தார். அல் பத்ஷ் 2009 ஆம் ஆண்டு காஸா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் மின்­னியல் பொறி­யி­யல்­து­றையில் இள­மாணி பட்­டப்­ப­டிப்­பையும், ஒவ்­வொரு பகு­தி­யிலும் 85 வீதத்­திற்கும் மேற்­பட்ட புள்­ளி­களைப் பெற்று முது­மாணிப் பட்­டத்­தையும் பெற்­ற­தோடு, கடந்த 2015 ஆம் ஆண்டு மலே­சியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் அதே துறையில் கலா­நிதிப் பட்­டத்­தையும் பெற்றார். 

அல் பத்ஷ் தனது தாய் மண்ணின் மீது மிகுந்த பற்­றுதல் உள்­ள­வ­ராக இருந்தார். தனது அறி­வினை காஸா­வுக்கே மீள வழங்கி குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பைச் செய்தார்.

பாரிய கல்விச் செலவு மற்றும் நீண்ட தூரப் பயணம் என பல சிர­மங்கள் இரு­நதும், ஏன் மலே­சி­யா­வுக்கு செல்ல தீர்­மா­னித்­தீர்கள்? என அவ­ரிடம் கேட்­கப்­பட்­ட­போது அவர் கூறிய பதில் இதுதான். ''புலமைப் பரிசில் கிடைக்­குமா, இல்­லையா என்ற உறு­தி­யற்ற தன்மை காணப்­பட்­ட­போ­திலும், நான் அந்த அபா­ய­க­ர­மான தன்­மை­யினை எதிர்­நோக்க துணி­வது எனத் தீர்­மா­னித்தேன். இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளது ஹதீஸ் ஒன்­றினை ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன் கல்­வி­யைத்­தேடி யார் பணிக்­கி­றாரோ அவ­ருக்கு அல்லாஹ் சுவ­னத்­திற்­கான பாதை­யினை இல­கு­வாக்­கு­கின்றான்''

கல்வி கற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போது அவ­ரது அடை­வு­களைப் பற்றி பேசும்­போது தான் 30 இற்கும் மேற்­பட்ட ஜேர்­னல்­க­ளையும் ஆய்வுக் கட்­டு­ரை­க­ளையும் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் இங்­கி­லாந்து, பின்­லாந்து, ஸ்பெயின், சவூதி அரே­பியா அதே­போன்று மலே­சியா ஆகிய நாடு­களில் நடை­பெற்ற மாநா­டு­களில் பங்­கு­பற்­றி­ய­தா­கவும், அவற்றுள் பெரும்­பா­லான மாநாட்டில் பங்­கு­பற்றச் சென்ற  குழுக்­க­ளுக்கு தலை­மை­தாங்கிச் சென்­ற­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். மலே­சியப் பிர­தமர் நாஜிப் ரஸாக்­கி­ட­மி­ருந்து 'சிறந்த மாண­வ­ருக்­கான' விரு­தி­னையும் அல்-பத்ஷ் பெற்­றி­ருந்தார்.
அவ­ரது கல்­விக்­து­றைக்குப் புறம்­பாக, மலே­சி­யாவில் நடை­பெற்ற ஆறா­வது சர்­வ­தேச பட்­டப்­பின்­ப­டிப்பு குர்ஆன் போட்டி மற்றும் குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்­த­மைக்­காக முத­லி­டத்தைப் பெற்­ற­தோடு குர்ஆன் ஓத­லுக்­கான சான்­றி­த­ழையும் பெற்றார். இவை அனைத்­திற்கும் மேலாக, பலஸ்­தீன பிரச்­சி­னைகள் தொடர்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு தெளி­வூட்­டு­வ­தற்­காக பள்­ளி­வா­யல்கள், பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சொற்­பொ­ழி­வு­களை நிகழ்த்­தினார். மலே­சிய இமாம்கள் மற்றும் முஅத்­தின்­க­ளுக்­கான பயிற்­சியில் முனைப்­புடன் ஈடு­பட்டார். பின்னர் கோலா­லம்­பூ­ரி­லுள்ள அல்-­இத்கான் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­பட்ட மலே­சி­யாவின் வரு­டாந்த குர்ஆன் போட்­டியில் நடுவர் குழாமில் ஒரு­வ­ராக அல்-பத்ஷ் இணைந்து கொண்டார். இவை அனைத்­தையும் அவர் தனது 35 வய­திற்குள் அடைந்து கொண்டார்.

பாதி அல்-பத்ஷ்  படு­கொலை தொடர்­பான சில பிர­தி­ப­லிப்­புக்கள்

ஏலவே குறிப்­பி­டப்­பட்­டது போல, அல்-பத்ஷ் தனது கல்­வி­ய­றி­வினை காஸா­வுடன் பகிர்ந்­து­கொண்டார். அதன் மூலம் அவர் 'சந்­தே­கத்­திற்­கு­ரிய' ஒரு­வ­ராக பார்க்­கப்­பட்டார். ஸியோ­னிச ஊட­கங்கள் இவர் காஸாவின் இரா­ணு­வத்­திற்­கான ஆளில்லா விமான மற்றும் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்கும் ஒரு­வ­ராக அவ­சர அவ­ச­ர­மாக குற்றம் சாட்­டின.

அவ­ரது பங்­க­ளிப்­பினை தவிர்த்­து­விட்டுப் பார்த்தால், இஸ்­ரேலைப் பொறுத்­த­வரை வெறு­மனே பலஸ்­தீ­னர்கள் அங்கு வாழ்­வதே அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல்தான். பலஸ்­தீன மக்­க­ளுக்கு சேவை­களை வழங்கும் இரா­ணுவ முன்­னோ­டி­க­ளாக இருக்­கலாம் அல்­லது அல்-பத்ஷ் விவ­கா­ர­மாக இருக்­கலாம் அல்­லது வேறு நபர்­க­ளாக இருக்­கலாம் அல்­லது பொது­மக்­க­ளாக இருக்­கலாம், யாராக இருந்­தாலும் அவர்­களை கொல்­வ­தற்கு அது அனு­மதி வழங்­கு­கின்­றது.

ஸியோ­னி­ச­வா­தி­களால் பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­ப­டு­வது அவர்கள் அச்­சு­றுத்­த­லாக இருக்­கி­றார்கள் என்­ப­த­னா­லல்ல, அவர்­க­ளது மன­வு­று­தி­யி­னா­லே­யாகும். பெண்கள் வேண்­டு­மென்றே இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தற்கு உண்­மையில் எந்தக் கார­ணமும் இல்லை.. உதா­ர­ண­மாக, பெண்கள் தமது மன­வு­று­தி­யினை தமது பிள்­ளை­க­ளுக்கு போதிக்­கின்­றார்கள், பலஸ்­தீ­னர்­களின் ஆதங்­கத்­தையும் எதிர்­பார்ப்­பையும் போதிக்­கின்­றார்கள். இது தன்­னாட்சி உணர்­வு­கொண்ட ஒரு தலை­மு­றை­யினை அழிக்கும் திட்­ட­மிட்ட செய­லாகும்.

இதில் தோல்­வி­ய­டைந்த ஸியோ­னிச யுத்­த­வெ­றி­பி­டித்­த­வர்கள் சிறு­வர்கள் மீது பாறாங்­கற்­களை உருட்டி விட்டும், எல்லை வேலிக்­க­ருகில் வர­வ­ழைத்தும் கொல்­கின்­றனர். இவ்­வா­றான படு­கொ­லைகள் அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு வீரச் செய­லாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்கும் நீதி நியாயம் என்­பது எப்­படி இருக்­கு­மென்றால், மேலே கூறப்­பட்ட சினைப்பர் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு பதக்கம் வழங்­கு­வது என்ற பாது­காப்பு அமைச்­சரின் கூற்று தக்க சான்­றாகும்.

அவர்­க­ளது அர­சாங்­கத்தின் சூழ்ச்­சியின் தரா­தரம் உச்­ச­நி­லையில் இருப்­ப­தனை அவர்கள் மீள வலி­யு­றுத்­து­வதன் மூலம் சியோ­னிஸ அரக்­கர்கள் வெட்கம் கெட்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். அத்­த­கைய கொடூ­ரத்­தன்மை கொண்ட அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நீதியை எதிர்­பார்ப்­பது வீணான காரி­ய­மாகும்.

2015 ஆம் ஆண்டு இஸ்ரேல் நீதி­ய­மைச்சர் பின்­வ­ரு­மாறு தனது டுவிட்­டரில் பதி­வொன்றை இட்­டி­ருந்தார். ''ஒவ்­வொரு பயங்­க­ர­வா­திக்குப் பின்­னாலும் டசின் கணக்­கான ஆண்­களும் பெண்­களும் இருக்­கின்­றார்கள். அவர்கள் இல்­லா­விட்டால் அவரால் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட முடி­யாது. யுத்­தத்தை உரு­வாக்கும் செயற்­பாட்­டா­ளர்கள் பள்­ளி­வா­யல்­களில் இருக்­கின்­றார்கள், அவர்­களே பாட­சா­லை­க­ளுக்­கான கொலை­யா­ளி­களை உரு­வாக்கும் பாட­வி­தா­னங்­களை வரை­கின்­றார்கள், அவர்­களே புக­லிடம் வழங்­கு­கின்­றார்கள், வாக­னங்­களை வழங்­கு­கின்­றார்கள், அவர்­களே கௌர­வத்­தையும் தார்­மீக ஆத­ர­வையும் வழங்­கு­கின்­றனர். அவர்கள் அனை­வரும் எதிரிப் படை­யி­ன­ராவர். அவர்­க­ளது இரத்­தங்கள் அனைத்தும் அவர்­க­ளது மண்­டை­யோ­டு­களில் நிரப்­பப்­ப­ட­வேண்டும். முத்­தங்­க­ளோடும் மலர்ச் செண்­டு­க­ளோடும் நர­கத்­திற்கு தியா­கி­களை அனுப்பி வைத்த தாய்­மாரும் இதில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். அவர்­களும் தமது மகன்­மாரைப் பின்­தொ­டர்ந்து செல்ல வேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் நியா­ய­மாக இருக்­காது''

மன­வு­று­தி­மிக்க பலஸ்­தீ­னர்­களை கொல்ல வேண்டும் என்ற உணர்­வூட்­டப்­பட்­டுள்­ளதால், ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் சிறு­வர்­க­ளையும், உடல் இயக்கம் இல்­லா­த­வர்­க­ளையும் கூட விட்­டு­வைக்­க­வில்லை. காலை இழந்து சக்­க­ர­நாற்­கா­லியில் முடங்கி இருந்த இப்­ராஹிம் அபூ­து­ரை­யாக இருக்­கலாம் அல்­லது விசேட தேவை­யு­டை­வ­ராக தடி­களின் உத­வி­யோடு நட­மா­டிய அஹமட் அபூ அகீ­லாக இருக்­கலாம் அவர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

காஸாவில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி மீளத் திரும்­பு­வ­தற்­கான ஆர்ப்­பாட்­டத்­தின்­போது 40 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு 5,000 பேர் காய­ம­டைந்­தனர். அவர்­க­ளெல்லாம் பாதி அல்-பத்ஷ் அல்ல, ஆனால் அவ­ரைப்­போன்ற மனோ­தி­ட­மிக்­க­வர்கள். அதுவே கொலை­கா­ரர்­க­ளுக்கு பதக்கம் வழங்­கு­வ­தற்கு இஸ்­ரேலின் கண்­க­ளுக்கு போது­மா­னது.

இது பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான தோல்­வியா?

இஸ்ரேல் என்­பது வெளி­நாட்டு உத­வி­க­ளாலும், சந்­தர்ப்­ப­வாத ஊட­கங்கள் மற்றும் பொழு­து­போக்கு கைத்­தொழில் தொடர்­பான விளம்­பர வரு­மா­னங்­களில் தங்­கி­வாழும் அல­காகும். அதனால், அறி­வா­ளி­க­ளையும், எழுத்­தா­ளர்­க­ளையும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­களும் கொல்­கின்­றது. துப்­பாக்கி ரவை­க­ளினால் அதனை ஒரு­போதும் நிறுத்­தி­விட முடி­யாது. இன்­னொரு வகையில் கூறு­வ­தானால், இஸ்ரேல் இது வரை எத்­தனை எதிர்ப்­புக்­காட்டும் பலஸ்­தீன தலைமை முக்­கி­யஸ்­தர்­களை படு­கொலை செய்­துள்­ளது? காஸாவில் இறு­தி­யாக நடை­பெற்ற போராட்­டத்­தின்­போது இஸ்­ரேலின் சினைப்­ப­ரினால் தாக்­கப்­ப­டுவோம் என நன்கு அறிந்­தி­ருந்தும் அங்கு 30,000 பேரை கொண்டு வந்­தது யார்?

மஸீன் புகஹா, துனி­சியன் மொஹமட் அல்-­ஸ­வாரி, ராயிட் அல்-­அதார், அஹமட் அல் மப்ஹொப் மற்றும் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீன எதிர்ப்­பா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­போ­திலும், பாதி அல்-பத்ஷ் போன்ற கல்­வி­மான்கள் பலர் நூற்றுக் கணக்கில் கொல்­லப்­பட்ட போதிலும், ஏழு தசாப்­தத்­திற்கும் மேலாக இடம்­பெற்று வரும் பலஸ்­தீனப் போராட்­டத்தை நசுக்க ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் முடிந்­துள்­ளதா?

அல்-பத்ஷ் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. ஆனால் அச்சம் தரக்கூடியதல்ல. எதுவாக இருந்தாலும், மலேசியா அல்லது வேறு தூர இடங்களிலுள்ளவர்களின் தொடர்புகளை துண்டிப்பது எவ்வளவு தூரம் பிரயோசனமற்றது என்பதற்கு சியோனிஸவாதிகளின் செயற்பாடுகளே காட்டுகின்றன. பலஸ்தீனர்களுக்கு செய்யப்படும் எந்த உதவியும் சிறியதல்ல என்பதை இது காட்டி நிற்கிறது. அறைந்துபோகாத அவரது சேவைகள் இருப்பினும், சாதாரண மரணத்தை அவர் தழுவினாலும் அதன் மூலம் கிடைத்திருக்கும் பாடம் மில்லியன் கணக்கானோருக்கு முன்மாதிரியாக அமையும். எனவே அவரது தியாகம் பலஸ்தீனுக்கு தோல்வியல்ல, ஆனால் முஸ்லிம் உலகம் ஒரு செல்வத்தை இழந்துவிட்டது. றஹிமஹுல்லா என நாம் அவரை கௌரவிப்போம்.

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

-Vidivelli

No comments

Powered by Blogger.