Header Ads



புத்தர் சிலைகள் மீதான வரி நீக்கம் - தொலைபேசியில் மங்களவுடன் பேசிய சஜித்

புத்தர் சிலைகள் மீது விதிக்கப்பட்டிந்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்ட ஆயிரம் புத்தர் சிலைகளையும் சுங்கக் கட்டணம் இன்றி விடுவிக்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர உத்தரவிட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். 

அரசாங்கத்தின் சுற்று நிருபங்களுக்கு அமைய இந்த புத்தர் சிலைகள் மீது 32 லட்சம் ரூபா வரி விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வாறு வரி விதிக்கப்பட்டமைக்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர். 

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள பௌத்த விஹாரைகளுக்கு வழங்குவதற்காக சீனாவிலிருந்துஇந்த புத்தர் சிலைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் சிலைகளை வழங்குவதில் சிரமங்கள் காணப்பட்டதாகவும் இது குறித்து அமைச்சர் சஜித் பிரேமதாச, நிதி அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த சிலைகளை விடுவிக்குமாறு சுங்கப் பிரிவினருக்கு நிதி அமைச்சர் உத்தரவி;ட்டுள்ளார்.

2 comments:

  1. Tax for Buddah. what a funnhy.

    ReplyDelete
  2. Buddha Imported from China ha????? Are they going to worship Made in China Buddha/????

    ReplyDelete

Powered by Blogger.