Header Ads



சஜீதா பானு மீதான நடவடிக்கைக்கு, விஜயதாஸா திட்டம்..!

அநு­ரா­த­புரம், இப­லோ­கம, பெலும்­கல பிர­தே­சத்தில் தொல்­பொருள் பிர­தேசம் வீட­மைப்­புக்­காக அழிக்­கப்­பட்­ட­மை­யுடன் தொடர்­பு­பட்ட அனை­வ­ருக்கும் தரா­தரம் நோக்­காது தொல்­பொருள் சட்­டத்­தின்கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கும், தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கும் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தொல்­பொ­ரு­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் விஜே­தாச ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமைச்சின் அதி­கா­ரிகள் குழு­வொன்­றுடன் பெலும்­கல தொல்­பொருள் பிர­தே­சத்­துக்கு நேரடி விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு- கள­நி­லை­மை­களை ஆராய்ந்தார். பின்பு ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “நாடெங்கும் சிலரால் மேற்­கொள்­ளப்­படும் தொல்­பொருள் பிர­தே­சங்­களின் அழி­வுகள் தொடர்பில் உடன் அமைச்­சுக்குத் தகவல் வழங்­கு­வ­தற்­காக பொது­மக்­க­ளுக்கு புதிய தொலை­பேசி இலக்­க­மொன்று விரைவில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த ஏற்­பாட்­டினால் நாட்டின் எந்தப் பகு­தியில் தொல்­பொருள் பிர­தேசம் அழிக்­கப்­பட்­டாலும் உடன் அறிந்­து­கொள்ள முடி­வ­துடன் உடன் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­மு­டியும்.

வீட­மைப்பு அதி­கார சபையின் அதி­கா­ரி­களும் இப­லோ­கம பிர­தேச செய­லா­ளரும் (சஜீதா பானு)   காணியை வீட­மைப்புத் திட்­டத்­துக்கு தீர ஆரா­யாது வழங்­கி­யுள்­ளமை, அமைச்சு மட்­டத்தில் நடத்­திய விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு வழங்­கப்­பட்ட காணி எல்­லை­யையும் மீறி அதற்கும் அப்பால் தொல்­பொருள் பிர­தேசம் பெகோ இயந்­தி­ரத்­தினால் டோசர் பண்­ணப்­பட்­ட­தனால் தொல்­பொ­ருட்கள் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

தொல்­பொருள் சட்­டத்­தின்கீழ் சுயா­தீன விசா­ர­ணை­யொன்­றினை நடத்தி பொறுப்­புக்­கூற வேண்­டிய அனை­வ­ருக்கும் எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. தொல்­பொருள் எமது நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளுக்கும் சொந்­த­மா­ன­தாகும். அதனைப் பாது­காப்­பது எமது அனை­வ­ரி­னதும் கட­மை­யாகும். தொல்­பொ­ருட்­களை சேதப்­ப­டுத்­து­ப­வர்கள் யாரென்­றாலும் இனம், மதம், மொழி, கட்சி என்று பாராது சட்­டத்தை சரி­யான முறையில் அமுல்­ப­டுத்தி உரிய தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும். அவர்கள் மீது எவ்­வித அனு­தா­பமும் செலுத்­தக்­கூ­டாது என்றார்.

அமைச்­சரின் நேரடி விஜ­யத்­தின்­போது அநு­ரா­த­புரம் மாவட்டச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்கவிடம் அமைச்சர் இது தொடர்பில் வினவியபோது சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

-ARA.Fareel-

No comments

Powered by Blogger.