Header Ads



பாராளுமன்றத்திற்கு இப்படியும், ஒரு நிலையா..?

இலங்கை நாடாளுமன்றம் அமைந்துள்ள காணிப்பரப்பு நாடாளுமன்ற செயலகத்துக்கு இதுவரை உரித்தாக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தற்போதைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக அதாவது 1982ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 29ம் திகதி இலங்கையின் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன 254 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதனை நிர்மாணித்திருந்தார்.

எனினும் நாடாளுமன்றம் அமைந்துள்ள காணிக்கு இன்று வரை எல்லைகள் அடையாளமிடப்படவோ, அதற்கான காணி உறுதி வழங்கப்படவோ இல்லை என்று தெரிய வருகின்றது.

சுமார் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த காணியானது தற்காலிக அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் அக்காணியை இன்று வரை நாடாளுமன்றத்திற்கான காணியாக பிரகடனம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாதது அதற்கான காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.