Header Ads



ஈராக் தேர்தலில், ஷியா மதகுரு முக்ததா அல்சத்ர் முன்னிலை


ஈராக் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஹைதர் அல் அபதியின் ஷியா போட்டியாளர்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் ஷியா மதகுரு முக்ததா அல் சத்ர் மற்றும் ஷியா தலைவர் ஒருவரின் தரப்பு முன்னிலை பெற்றிருப்பதாக வாக்கு எண்ணும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதன்படி அபதியின் ஆளும் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வற்ற முடிவுகள் காட்டுகின்றன.

ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக கடந்த ஆண்டு அரசு வெற்றி பிரகடனம் வெளியிடப்பட்டதன் பின் இடம்பெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இன்றைய தினத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் 18 மாகாணங்கள் மூலம் 329 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் இந்த சிக்கலான தேர்தல் முறையில் இறுதி முடிவு ஒன்றை பெறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

வாக்குப் பதிவு கடந்த தேர்தல்களை விடவும் மிகக் குறைவாக 44.5 வீதமாக இருந்தது.

ஈராக்கிய வாக்காளர்கள் போட்டி வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்ததோடு அது பெரும்பாலும் ஷியா அல்லது சுன்னி முஸ்லிம் ஆதிக்கம் கொண்டதாக இருந்தது. தவிர, குர்திஷ்கள் தமக்கான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பக்கட்ட முடிவுகளின் படி சத்ரின் முகாம் முன்னிலை பெற்றுள்ளது. அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பக்தாதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு சதாம் ஹுஸைன் வீழ்த்தப்பட்ட பின் ஈராக்கில் செல்வாக்கு மிக்கவராக மாறிய சத்ருக்கு பக்தாதை சூழவிருக்கும் வறிய மக்களிடம் அதிக ஆதரவு உள்ளது.

இதில் முன்னாள் போராட்டக் குழு தலைவர் ஹதி அல் அமிரி தலைமையிலான குழு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. எனினும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான 165 ஆசனங்களை எவராலும் வெல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் அதிக ஆசனங்களை வென்ற முகாம் சிறிய கூட்டணிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

2 comments:

  1. ஆடு பகை குட்டி உறவு, ஆடோ மாடோ அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நீங்கள் ஆதரவு என்றால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம் அதுதான் எமது சவூதி அரசின் கொள்கை

    ReplyDelete
  2. ஈரானை விட தான்பெரியவனாகவே சௌதி ஈரானைஅழிக்க திட்டமிடுகிறது. மாறாக சுன்னாக்களை إيمان ஐ பாதுகாக்க அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.