Header Ads



தப்பியோடி பொதுமக்களை குதறிய, கரடி சுட்டுக்கொலை - பொலன்னறுவையில் சம்பவம்

கூண்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்த கரடியொன்று வனப்பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் இன்று காலை பொலன்னறுவை மாவட்டத்தின் கிரிதலே பிரதேசத்தி்ல் நடைபெற்றுள்ளது.

கிரிதலே மிருக வைத்தியர் அலுவலகத்துக்கு கடந்த 15ம் திகதி கரடியொன்று கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக எடுத்து வரப்பட்டிருந்தது. எனினும் கடந்த 20ம் திகதி குறித்த கரடி கூண்டை விட்டும் தப்பிச் சென்றிருந்தது.

அதன் பின்னர் கிரிதலே பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடித் திரிந்த கரடி பொதுமக்கள் சிலரை தாக்கிய சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் இன்று காலை கிரிதலே குளம் அருகில் இரண்டு பேர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருப்பதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கரடி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளது. குறித்த கரடிக்கு சுமார் ஏழு வருடங்கள் வயதிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.