Header Ads



ஆலிம்களுக்கான சிங்கள, மொழியிலான கற்கைநெறி

இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது.இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய  குற்றச்சாட்டுகளும் தப்பபிப்பிராயங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.இத்தகைய சூழலில் சிங்கள மொழியில் திறமை கொண்ட ஆலிம்களை நவீன பாடத்திட்டம் ஒன்றினூடாக தரப்படுத்தும் தேவை உணரப்பட்டு
ள்ளது. காலத்தின் இந்தத் தேவையை ஈடுசெய்ய  ஆலிம்களுக்கான சிங்கள மொழியிலான கற்கைநெறி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக் கற்கை நெறி, எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தல், நவீன தொடர்பாடல் பயிற்சி,இலங்கையின் விவசாய முறைகள்,இலங்கையின் சட்டங்கள்,தலைமைத்துவப் பயிற்சி, நேரமுகாமை,ஆயர்வேத வைத்திய முறை,நவீன ஊடகப் பாவனை,திறன் விருத்தி என பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது.

முதல் 8 மாதம் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதோடு ஏனைய நான்கு மாதங்களில் கல்விச் சுற்றுலாக்களும் வெளிவாரிச் செயற்பாடுகளும் இடம்பெறும்.

ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் பத்ஹ் அகடெமி இணைந்து இக் கற்கைநெறியை நடாத்துகின்றது.எனவே இக் கற்கை நெறியில் ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கற்கை நெறியின் கால அளவு : 1 வருடம்


விண்ணப்ப முடிவுத் திகதி: 2018.05.31

மேலதிக விபரங்களுக்கு: 077 041 8888

அஷ்ஷெய்க்.எம்.ரிஸ்கான்

2 comments:

  1. சிறந்த முயற்சி.  முஸ்லிம் பெற்றோர் தம்மிரு பிள்ளைகளில் ஒருவரை சிங்கள மொழிமூலம் கற்பிக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம்.

    ReplyDelete
  2. அத்துடன் உலக அரசியல் விஞ்ஞானம், சர்வதேச அரசியல் பொருளாதார தத்துவங்களும், நடைமுறைக்கோட்பாடுகளையும் அத்துடன் சேர்த்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.