May 30, 2018

நவமணி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

கோதாபய ராஜபக்ஷ பேருவளையில் முஸ்லிம்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் உருவாகும் ஆட்சியில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் பீதியுமின்றி சமயக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றவும் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ளவும் நிம்மதியாக வாழக்கூடிய சிறந்ததொரு சூழ்நிலையை உருவாக்கித் தருவோம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதி தெரிவித்துள்ளார். 

பேருவளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

புதிதாக அரசியலரங்கில் இணைந்துள்ள பொதுசன பெரமுன கொள்கையான சிறுபான்மையினரை எப்படி அரவணைக்கப் போகின்றது என்பதனை பொதுஜன பெரமுன சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படும் கோதாபய ராஜபக்ஷ அளித்துள்ள இந்த வாக்குறுதி முக்கியமானது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 450க்கு மேற்பட்ட இன வெறுப்புச் சம்பவங்கள், தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.இதன் காரணமாகவே கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்காக முஸ்லிம்கள் வாக்களித்தனர். 

இந்தப் பின்னணியில் கோதபாய ராஜபக்ஷ அளித்துள்ள இந்த வாக்குறுதி முக்கியமானது. 

இந்த நாட்டை ஆளும் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுனவும் இப்போது இணைந்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலாக ஆதரித்து வந்த முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினர். 

இதனால் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கிழக்கு மாகாண சபையைக் கூட மஹிந்த ஆதரவுக் கட்சிகளுக்கு கைப்பற்ற முடிந்தது. 

முஸ்லிம்களில் அப்படியான மாற்றங்கள் ஏற்பட்ட போது அரசின் கடைசிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதனாலே முஸ்லிம்களின் ஆதரவை மஹிந்த அணி இழந்தது. 

பதவிக்கு வரும் எந்த ஓர் அரசிடமும் முஸ்லிம்கள் மட்டுமன்றி எல்லா சமூகத்தவர்களும் எதிர்பார்ப்பது பேதம் பாராது சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். 

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அந்த நாட்டில் ஒற்றுமை அபிவிருத்தி என்பன தானாக ஏற்படும்.

எதிர்கால மஹிந்த ராஜபக்ஷ அரசு கடந்த காலத்தில் நடந்த தவறை உணர்ந்திருப்பதனை அன்று சட்டத்தையும் ஒழுங்கினையும் அமுலாக்கும் பொறுப்பிலிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருக்கும் வாக்குறுதி உணர்த்துவதாகவுள்ளது. 

தமது காலத்தில் நடந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்வது, அதேபோன்று சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய, கட்சிகளுக்கு மட்டுமே இந்த நாட்டில் ஆட்சியை அமைக்க முடியும். அதனை உணர்ந்து செயற்படுபவர்களுக்கு சிறுபான்மை மக்களது ஆதரவு கிடைக்கும். 

இதேநேரம், முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுசன பெரமுன மற்றும் மஹிந்த அணியின் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முஸ்லிம் சமூகத்தின் துலங்கல்களை பெரும்பான்மையின நடுநிலை செயற்பாட்டாளர்கள் எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதும் முக்கியம். நல்லாட்சியை ஆதரித்த அவர்கள், இப்போதாகும்போது- நல்லாட்சிக்கும் மஹிந்த காலத்துக்கும் வித்தியாசமில்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். 

அதற்குக் காரணம் இரு அரசாங்கங்களிலுமே முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. எஞ்சியிருப்பது ஊடக அடக்குமுறைகள் மாத்திரமே. 

இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்த நடுநிலை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முஸ்லிம்களின் அண்மைக்கால துலங்கல்களில் விரக்தியடைந்துள்ளனர். சிலர் முஸ்லிம்களின் துலங்கல் சாதாரணமானதே என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். 

இந்நிலையில், முஸ்லிம்களது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் முக்கியம் பெறுகின்றது. சமூகத்தின் விடிவுக்காய், இனவாதத்தை உண்மையாக ஒழித்து, சட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் அரசியல் சக்திகளையே ஆதரிக்கவேண்டும். இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தெரிவும் சரியானதாக இருக்க வேண்டும்.   

6 கருத்துரைகள்:

எவர் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களின் உரிமையும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதட்கான ஒரு அரசியல் பயணமே முஸ்லிம்களிடத்தில் இருக்க வேண்டும். சட்டமும் ஒழுங்கும் இந்த நாட்டில் சீர்குலையுமானால் அதட்காக முஸ்லிம்கள் போராட ( எந்த வடிவில் என்பதை முஸ்லிம்கள் தீர்மானிக்க வேண்டும்.) வேண்டும். கடந்த காலங்களில் ராஜபக்சலாக்களின் ( மகிந்த, கோத்தா, பசில், நாமல்...) அரசியல் நேர்மை, யோக்கியம், கண்ணியம், நம்பகத்தன்மை, இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணுதல்.. என்ற பலவிடயங்களில் தவறியுள்ளமை அப்பட்டமாக யாவரும் அறிந்த உண்மை. அதே போல் இந்த நல்லாட்சியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது. ஆக முஸ்லிம்கள் தங்களின் இந்த நிலையை முகம் கொடுக்க தயாராக வேண்டும். அதட்கான பலவழிகள் உண்டு அதில் ஒன்றுதான் ஆட்சியாளர்களுக்கு மிகவும் காத்திரமான அழுத்தங்களை ( local and international) கொடுப்பதாகும். இதட்காக முஸ்லிம்கள் ஒற்றுமையாக மன உறுதியுடன் கடினமாக உழைக்க வேண்டும். சிந்திப்பார்களா??? முயட்சிப்பார்களா??

There are many video recordings of what Rajapaksas have said previously about the Muslims and Tamils (minorities) in the Country. We cannot trust them......

We should also know what kind of solution SLPP leadership will provide for the national problem. They should also find a solution for NE Tamil and Muslim issues.

தொடர்ச்சியாக நம்மை ஓர் அச்ச சூழல் ஒன்றுக்குள் தள்ளிவைத்து நம் எதிரிகளின் தலைமைக் காரியாலயத்தையே துணிந்து பகிரங்கமாகத் திறந்து வைத்து அவர்களுக்கு அரச அங்கீகாரம் கொடுத்து, நம்மை அநாதரவாக்கி, அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற ஒருவர் நம் தலைவராவதா?

A.M. AMEEN, MCSL, NATIONAL SOORA COUNCIL, ACJU AND ALL THE MUNAAFIKK MUSLIM POLITICIANS ARE PRAISING GOTABAYA NOW. WHEN "THE MUSLIM VOICE" TOLD THIS IN THE BEGINNING, THEY SLAMMED "THE MUSLIM VOICE" IN ALL THEIR COMMENTS, ARTICLES AND MEETINGS.

ALHAMDULILLAH, GOD ALLMIGHTY ALLAH HAS GIVEN THEM KNOWLEDGE TO UNDERSTAND THE POLITICAL REALITY OUR COMMUNITY IS FACING. ALHAMDULILLAH THAT THEY ARE COMING FORWARD WITH "CHANGE" INSHA ALLAH.
Noor Nizam.
Convener "The Muslim Voice".

இந்த அரசு அதை விட ஒரு படி அதிகமாகவே செய்துள்ளது இவனை நம்பி மோசம் போனோம். 2 பேருமே ஒன்று


Post a Comment