Header Ads



குப்பை மேட்டை போன்று நாளுக்கு நாள் அதிகரிக்கும், இலங்கையின் கடன் தொகை

தற்பொது வெளியாகி உள்ள புதிய தரவுக்கு அமைய இலங்கை பாரிய கடன் சுமைக்குள் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Moody's என்ற கடன் தரவிற்கமைய இலங்கை BI எதிர்மறை நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் வட்டி விகிதத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு கடும் அழுத்தம் ஏற்பட கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது.

Moody's தரவிற்கமைய இந்த பிரிவில் உள்ள நாடுகளுக்கு விசேட அறிகுறிகள் உள்ளது. அதற்கமைய கடன் பெறும் சந்தர்ப்பத்தில் செலுத்த வேண்டிய வட்டியை விடவும் செலுத்தும் போது அதிக வட்டி விகிதம் செலுத்த நேரிடும். எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் கடன் அதிகரித்தல் மற்றும் கடனை செலுத்த முடியாமையினால் புதிய கடன் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதன்மூலம் கடன் சுமையை இன்னும் தள்ளி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவைகளே விசேட அறிகுறிகளாகும்.

இலங்கையின் கடன் தொகை மீதொட்டமுல்ல குப்பை மேட்டை போன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் அருகில் இந்த மக்களுக்கு மாத்திரமே பாதிப்பு ஏற்பட்டது. எனினும் இலங்கை முகம் கொடுத்துள்ள இந்த கடன் மேடு சரிந்தால் முழு இலங்கையர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே Moody's தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

4 comments:

  1. May allah serve our beautiful country.and give them (buddhist)hidaya.every one your slave ya allah.

    ReplyDelete
  2. கடன் சுமைபற்றிப் பேசும் ஆட்சியாளர்களுக்கு அதுபற்றி அணுவளவேனும் கவலையோ,அக்கறையோ கிடையாது. அதனால்தான் கடன் சுமையை நீக்குதல் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்களை வௌிநாடுகளுக்கு விற்று அந்த பணத்தை சொந்த வங்கிகளிலும் வேறுவகையிலும் சுரண்டும் ஒருபோக்கையே நாம் துரதிருஷ்டவசமாகப் பார்த்துக் கொண்டிக்கின்றோம். நாட்டை கடன் சுமையிலிருந்து நீக்குவோம் என்ற பெயரில் ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டின் எந்த சொத்தை விற்றால் தனக்கு பில்லியன் கணக்கில் டொலர்கள் சூறையாடலாம் என ஆட்சிக்கு வந்தபின் கணக்குப் போட்டு அந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கின்றார்கள். இந்த நாட்டில் உள்ள மக்கள் எருமைமாடுகளாக இருக்கும் காலமெல்லாம் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.