Header Ads



முஸ்லிம்கள் பற்றி, நல்ல அபிப்பிராயத்தைக் கொண்ட சமித்த பிக்கு


இலங்கையின் சமய,சமூக, அரசியல் நிலைகளில் பௌத்த "ஹாமதுரு" என அழைக்கப்படும் "பிக்கு" களின் வகிபங்கு மிக முக்கியமானதாகும், அந்த வகையில் இன உறவு, சமூக ஒற்றுமை தொடர்பாக நீண்ட காலமாகப் பணி புரியும் ஒரு மதிப்பிற்குரிய பிக்கு பற்றிய பதிவே இதுவாகும். 

கலாநிதி பத்தேகம சமித்த ஹாமதுரு...

பிக்கு சமித்த அவர்கள் , இலங்கையின் தென் பகுதியினைச் சேர்ந்தவர், சமயம், அரசியல் போன்றவற்றோடு சமூக நல்லிணக்கம் குறிப்பாக சிங்கள- முஸ்லிம் உறவுகள் பற்றி அதிகம் பேசும் ஒருவர், இலங்கையின் முதலாவது பௌத்த பிக்கு பாராளுமன்ற உறுப்பினர்  ( First Buddhist Monk Parliamentarian)என்ற பெருமைக்குரியவர். அத்தோடு இடது சாரி இயக்கங்களின் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் ஆகும்.

அந்நிய மனநிலை....

எம்மில்  ஒரு சிலர். பிக்குகள் தொடர்பான பிழையான எண்ணங்களை கொண்டவர்களாக உள்ளனர், ஆனால் பிக்குகள் எல்லோரும் இனவாத செயற்பாட்டாளர்கள் அல்ல, அவர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, ஏனைய சமூகங்களுக்காகவும்  துணிச்சலாக குரல் கொடுக்க கூடியவர்கள் என்பதை  விளங்கிக்கொள்வது அவசியமானதாகும், அந்த வகையில் பிக்குகளுடனான தொடர்பு , கண்ணியம் என்பனவற்றை சரியாக பின் பற்றுகின்ற போது , எம்மைப்பற்றிய மன நிலையும் அவர்களிடம் மாறி அவர்களே எமக்காக குரல் கொடுப்பார்கள் .

முரண்பாடும், பணிகளும்...

முரண்பாட்டுச் சூழ் நிலையில் பெரும்பான்மை சமூகத்திற்கு  அவர்கள் சார்பானவர்கள் பேசுகின்றபோது, குறிப்பாக மதிப்பிற்குரிய  பிக்குமார் பேசுகின்றபோது, அச் சூழ்நிலையின் கடினப் போக்கும் வன்முறையும் குறைக்கப்படுகின்றது மட்டுமல்ல மக்கள் மத்தியிலான அச்ச நிலையும் நீக்கப்படுகின்றது.

அந்தப்பணிகளை மிகவும் சிறப்பாக சமித்த ஹாமதுரு அவர்கள் மேற்கொள்கின்றார். இது நாட்டிற்கும், குறிப்பாக தென்பகுதி  சிறு பான்மை மக்களுக்கு கிடைத்த பாக்கியம் எனலாம், .Inter Faith Study Circle  போன்றவற்றின் ஊடாக  இவர் மேற்கொள்ளும்  பணி குறித்த சூழலில் பல வன்முறைகளைத் தவிர்த்திருக்கின்றது, அண்மைய"  திகண" அசம்பாவிதங்களின் போது இவர் சிங்கள பௌத்தர்களுக்கு பகிரங்கமான சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தார்.

பிரசிசினைகளும் , தீர்வும்...

சிறுபான்மையினர் தொடர்பாக சிங்கள பௌத்தர்களிடையே காணப்படும் பல தப்பபிப்பிராயங்களுக்கு  Logically பல பதில்களை வழங்கும் இவரது ஆற்றல் மிகவும் பாராட்டத்தக்கது.இவர் 

1. பௌத்த  சம்பவங்களையும் , ஒழுக்க நெறிகளையும் ஆதாரமாக்க் கொண்டும்.

2. உலகின் இன்றைய போக்கு, இலங்கையின் அத்தியவசியத் தேவைகள் என்ன என்பவற்றை விளக்கி இன முரண்பாட்டினை எதிர்க்கின்றார்.

3.இன்றைய  இனவாத பிக்குகளின் போக்கினைக் கண்டிப்பதுடன், அவர்களின் செயற்பாட்டிற்கும் தடையாக உள்ளார்.

4.அரசியல் நடைமுறைகளின் ஊடான சமத்துவத்தை சகலருக்கும் அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.

5. அடிப்படை வாதத்தை எதிர்ப்பதுடன், சிங்களவர்கள் அதனை ஊக்குவிக்கக் கூடாது எனவும்  எச்சரிக்கின்றார்.

6. பிரச்சினைகளை  அறிவு ரீதியாக நோக்கும் இவர் அதனைத் தீர்ப்பதற்கான உலக நடைமுறைகளையும் உதாரணங்களுடன் கூறக்கூடிய ஆற்றல்பெற்றவர்.

English மொழியில் தேர்ச்சி பெற்ற இவரிடம் இயல்பிலேயே மற்றவர்களை மதிக்கும் கண்ணியமான பண்பு உண்டு, பிக்குகளுக்கான அனைத்து கௌரவங்களையும் எப்போதும் எதிர்பார்க்காத இவர், எல்லோருடனும் சகஜமாகப் பழக்க் கூடியவர். 

குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பான நல் அபிப்பிராயத்தைக் கொண்டவர். பிரச்சினைகளை அறிந்து தீர்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவர். அரசியலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும்  இவர், பேருவளைப் பிரச்சினையை அவசரமாகத் தீர்ப்பதில் அதிக பங்காற்றியவர் என்று சொல்லப்படுகின்றது. ஜனநாயக வழிமுறைகளை  பின்பற்றுவதோடு, பௌத்த மக்களுக்கு  மற்றையோர் பற்றிய தெளிவைப் போதிப்பதிலும் , அவற்றை அறிவார்ந்த அடிப்படையிலான கேள்விகளினால் முன்வைப்பதில் இவர் மிகச் சிறப்பு வாய்ந்தவர்.

எதிர்காலத்திற்கான படிப்பினை....

உண்மையில் பிக்குகள் அனைவருமே இனவாதிகள் என்ற மன நிலையில் இருந்து சிறுபான்மையினர் விடுபடவேண்டும்,  குறிப்பாக முஸ்லிம்கள் ,பிக்குகளை தூரத்தே வைத்து நோக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு  அவர்களோடு நெருங்கிப் பழகுவதன் மூலம் தமக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும், 

மாறாக எமது அந்நிய மனநிலை நோக்கு,.......பல "சமித்தைகளை" இனங்காணத்  தவற விடுவதோடு மட்டுமல்ல,  அவர்களை "ஞானசாரக்களின்" வழியில் செல்வதற்கான வாய்ப்பையும்.  நாமே ஏற்படுத்தி விடுவதாக அமைந்து விடும் என்பது .மட்டுமல்ல....... "தான் சார்ந்த சமூகத்தினுள். பல எதிர்ப்புக்களையும்  சம்பாதித்துக்கொண்டு  எமக்காக போராடும்"...... இவர்களை நாம் என்றும்  கண்ணியப்படுத்த வேண்டும், என்பதையும் மறக்கலாகாது. 

சமித்த ஹாமதுருனி , உங்கள் இன உறவுப் பணிகள் என்றும் தொடரட்டும், 


MUFIZAL ABOOBUCKER
UNIVERSITY OF PERADENIYA

No comments

Powered by Blogger.