May 11, 2018

ஜனாதிபதியால் ஒரு முஸ்லிமையாவது, ஆளுநராக நியமிக்க முடியாது போனதேன்..?

நாட­கங்­களின் ஊடாக இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் சமஅந்­தஸ்த்து வழங்­கப்­பட வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதி­தாக ஆளு­நர்கள் பலரை நிய­மித்தார். எனினும் முஸ்லிம் ஒரு­வரை கூட ஆளு­ந­ராக ஜனா­தி­பதி நிய­மிக்­க­வில்லை.  ஏன் ஜனா­தி­ப­தி­யினால் ஒரு முஸ்­லி­மை­யா­வது ஆளு­ந­ராக நிய­மிக்­க­மு­டி­ய­து­போ­னது? இவ்­வா­றான செயற்­பா­டு­களின் ஊடாக எப்­படி ஜனா­தி­ப­தி­யினால் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்­பினார்.

அத்­துடன் வெறுப்­பு­னர்­வுக்கு பேச்சு சட்டம் தற்­போது அமைச்­ச­ரவை கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. ஆகவே குறித்த சட்­டத்தை தொடர்ந்து இழுத்­த­டிப்பு செய்ய இட­ம­ளிக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி கொள்கை விளக்­க­வுரை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாட்டில் சட்­டத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு மக்கள் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கி­னார்கள். அத்­துடன் இன­வா­தத்தை ஒன்­றி­ணைந்து முறிய­டித்­தனர். தேர்தல் வெற்­றியின் பின்னர் நாட்டில் சுதந்­தி­ர­மான சூழல் ஒன்று உரு­வா­னது. ஆனால் ஜனா­தி­பதி குறிப்­பிட்­ட­துபோல் அர­சாங்­கத்­தின்­மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகை­யி­லான தேசிய ஐக்­கியம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்த அர­சாங்­க­மா­னது மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கியே ஆட்­சிக்கு வந்­தது. எனினும் கடந்த காலங்­களில் கூட்டு எதி­ர­ணி­யினர் நாட்டில் அமை­தியை குழப்ப அர­சியல் இலா­பத்­திற்­காக இனக்­கு­ரோ­தத்தை ஏற்­ப­டுத்­தினர். இதனால் பல அழி­வு­க­ளையும் மோச­மான நிலை­மை­க­ளையும் சந்­திக்க நேரிட்­டது.

இன­வா­தத்­தையும் குடும்ப ஆட்­சி­யை­யும் நிரா­க­ரித்தே மக்கள் இந்த அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கினர். எனினும் கடந்த மூன்று வருட காலங்­களில் இடம்­பெற்ற நிகழ்­வுகள் சந்­தோ­ஷ­ம­டை­யக்­கூ­டி­ய­தாக இல்லை. இன­வாத செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கத்­தினால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தும் முயற்சியில் அர­சாங்கம் தோல்வி கண்­டுள்­ளது. இதன் தொடர்ச்­சி­யா­கவே கடந்த மார்ச்சில் கண்டி, திகன பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது போனது. இதனால் நாடு பற்றி எரிந்­தது. அசா­தா­ர­ண­மா­ன­தொரு சூழ்­நிலை ஏற்­பட்­டது.

அர­சாங்­கத்தில் இருக்கும் உறுப்­பினர் என்­ற­வ­கையில் இவ்­வி­டயம் குறித்து ஜனா­தி­ப­திக்கு தெரி­யப்­ப­டுத்தி, இதனை கட்­டுப்­ப­டுத்­து­மாறு கோரினோம். 'இன­வாத, மத­வாத பிசா­சுகள் மீண்டும் தலை­தூக்­கி­யி­ருக்­கின்­றன. அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்டாம். இதனால் நாடு படு­பா­தா­ளத்­திற்கு செல்லும்' என்ற விட­யத்தை கூறி­யி­ருந்தோம். அதனை கணக்கில் கூட எடுக்­க­வில்லை. கண்­டு­கொள்­ளா­மை­யி­னால்தான் குறித்த சிறு­கு­ழு­வி­னரால் சட்­டத்தை மீறி குழப்­ப­நி­லையை தோற்­று­விக்க முடிந்­தது.

ரஞ்சித் மத்­தும பண்­டார சட்டம் ஒழுங்கு அமைச்சை பொறுப்­பேற்ற பின்னர் ஓர­ளவு நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­த­மைக்கு அவ­ருக்கு நன்­றியை தெரி­விக்க வேண்டும்.

ஆகவே இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்­டு­வ­ரு­மாறு நாம் ஆரம்பம் முதல் வலி­யு­றுத்தி வந்தோம். வெறுப்பு பேச்சை கட்­டுப்­ப­டுத்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­மாறு வலி­யு­றுத்­தினோம்.  ஏற்­க­னவே அமைச்­ச­ரவை அனு­ம­திக்­காக முன்­வைக்­கப்­பட்ட குறித்த சட்டம் தற்­போது  கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. ஆகவே குறித்த சட்­டத்தை தொடர்ந்து இழுத்­த­டிப்பு செய்ய இட­ம­ளிக்க முடி­யாது. 

 சிங்­கப்பூர், மலே­ஷியா உள்­ளிட்ட நாடு­களை நாம் முன்­மா­தி­ரி­யாக எடுக்க வேண்டும். பல் கலா­சா­ரத்தை பின்­பற்றும், பல மொழி­களை பேசும், பல சம­யங்­களை பின்­பற்றும் மக்­களை ஒன்­றி­ணைத்து முன்­னே­றிச்­செல்ல முடி­ய­வில்­லை­யென்றால் அந்­நா­டு­களை எம்மால் நெருங்­கவும் முடி­யா­து­போகும்.

இந்­நாடு முப்­பது வருட யுத்­தத்­திற்கு முகம்­கொ­டுத்­துள்­ளது. யுத்­தத்தால் நாட்­டி­லுள்ள அனைத்து தரப்­பி­னரும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். வடக்கு, கிழக்கு இளை­ஞர்­க­ளாக இருக்­கட்டும். தெற்­கி­லுள்ள இளைய தலை­மு­றை­யி­ன­ராக இருக்­கட்டும் எல்லா இடங்­க­ளிலும் இருப்போர் இலங்­கை­யர்­களே. எனவே, இல­ங்­கை­யர்கள் அனை­வ­ரையும் மிகப்­ப­ரி­தா­ப­மான நிலை­மைக்கு யுத்தம் கொண்டு சென்­றுள்­ளது. 2009 இல் யுத்தம் நிறை­வுக்கு வந்­த­தை­ய­டுத்து புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்ப சந்­தர்ப்­ப­மொன்று கிடைத்­தது. இது தொடர்பில் பல கற்­ப­னை­களை மட்­டுமே எங்­களால் பண்ண முடிந்­தது. அவை இன்னும் சிந்­தனை வடி­வி­லேயே இருக்­கின்­றது.

படங்­களை தயா­ரித்து நாட­கங்­களை நடித்து இந்த நாட்டில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். எங்­க­ளுக்கு தெரியும் ஜனா­தி­ப­தி­யினால் அண்­மையில் மாகாண ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். முஸ்­லிம்கள் எவ­ரையும் அதில் உள்­ள­டக்­க­வில்லை. இதற்கு முன்னர் இந்நாட்டில் பாக்கிர் மாக்காரும் அலவி மௌலானாவும் குறித்த பதவியில் இருந்ததில்லையா? ஏன் ஜனாதிபதியினால் ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமிக்க முடியாதுபோனது?

எனவே, இங்கு வலியுறுத்தி கூறவிரும்புவதென்னவென்றால், வெறும் வார்த்தைகளினாலும் சிந்தனைகளினாலும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. மக்களின் கீழ்மட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் சம அந்தஸ்தை வழங்க வேண்டும். இதன்மூலமே நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நிலைநாட்ட முடியும்.

-Vidivelli

3 கருத்துரைகள்:

Thank you Minister Mujibur Rahman for your outstanding position in everything related to the affairs of the Muslim nation, and the shame for the ministers who claim to be leaders of Muslims but they are traitors and prostrate to their chairs and personal benefits only.

That is because there are so many useless Muslim Politicians without back bone. Serving the Muslim community by "mouth service".

There are few exceptional case like Br. Mujibu.

Muslim Governor will not resolve the problems being faced by Muslims. What we want is, Govt to maintian Law and Order properly and equally regardless of the races.

Post a Comment