Header Ads



அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா..?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும்.

பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்காவில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

இதனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் என்றும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. If they love Sri Lanka why they applied American citizenship, and why they wanted to do politics in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.