Header Ads



இதுவும் இலங்கையின் அவலம்தான்...!


களனி, பட்டிய ஹந்திய பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள, மேம்பாலத்தின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவிலேயே நிறைவுக்குக் கொண்டுவர முடியுமென, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு 67 நாட்களே சென்றதாகவும், எனினும் திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக, இந்த பாலம் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகள் உடைந்துள்ளமையால், அவைகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு ஆறு மாதங்கள் செல்லும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மேம்பாலத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்த நிறுவனம், பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்கள் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், அவர்கள் அரை நாள் மாத்திரமே பணியாற்றுவதாகவும் மாலை வேளைகளில் அவர்கள் பணியாற்றுவதில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.